Home
News

Google சர்ச் Vs AI மோட் சர்ச்.. Google AI மோட் ஓர் புது அனுபவம்.. எப்படி வேறுபடுகிறது?

கூகுள் நிறுவனமானது, அதன் டிரெடிஷ்னல் கூகுள் சர்ச் (Google Search) அனுபவத்தை ஏஐ மோட் (AI Mode) மூலம் மாற்ற முயற்சித்து இருக்கிறது. இதன் மூலம் டிரெடிஷ்னல் சர்ச் என்ஜின்கள் (Traditional Search Engines) செயற்கை நுண்ணறிவை நோக்கி செல்ல தொடங்கி இருக்கின்றன. லிங்குகளில் இருந்து பதில்களாக சர்ச் என்ஜின்களின் அவுட்புட் இருப்பதை இது ஊக்குவிக்கிறது. இந்த நேரத்தில் பாரம்பரிய சர்ச் மற்றும் ஏஐ சர்ச் ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

டிரெடிஷ்னல் கூகுள் சர்ச் (Traditional Google Search):
* ப்ளூ லிங்க்
* நேவிகேட்டிங் வெப்சைட்கள்
* கீ-வேர்ட் பேஸ்டு வினவல்
* கூகுள் அல்கோரிதம்

Google சர்ச் Vs AI மோட் சர்ச்.. Google AI மோட் ஓர் புது அனுபவம்!

ப்ளூ லிங்க்:
கூகுள் சர்ச் மூலம் எதையாவது தேடும்போது, உங்களுக்கு ப்ளூ லிங்குகள் காண்பிக்கப்படும். இந்த லிங்குகளில் உங்களுக்கு தேவையான தகவல்களை நீங்களே படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல நீங்கள் தேடியது தொடர்பாக பொதுவாக தேடப்பட்ட கீ-வேர்டுகள் மற்றும் அதற்கான லிங்குகள் இடம்பெற்று இருக்கும்.

நேவிகேட்டிங் வெப்சைட்கள்:
கூகுளில் சர்ச் செய்யப்பட்ட பிறகு லிங்குகள் மூலம் மேலோட்டமான தலைப்புகள் அல்லது கீ-வேர்டுகள் மட்டுமே இருக்கும். ஆகவே, வெப்சைட்டுகளுக்கு உள்ளே சென்றால் மட்டுமே, அதை பற்றி தெரிந்து கொள்ள முடியும். இது ஆர்டிகிள்கள், நியூஸ்கள், வீடியோக்கள், போட்டோக்கள் போன்ற அனைத்துக்கும் பொருந்தும்.

Google சர்ச் Vs AI மோட் சர்ச்.. Google AI மோட் ஓர் புது அனுபவம்!

கீ-வேர்ட் பேஸ்டு வினவல்:
கூகுள் சர்ச் மூலம் கீ-வேர்டுகளை கொடுத்துகூட உங்களால் ஒரு தகவலை தேட முடியும். ஆகவே, உங்களுக்கு தேவையான தகவல்கள் குறித்த கீ-வேர்டுகள் இருக்க வேண்டும். அதை கொடுத்த பிறகு கூட, வெப்சைட் மற்றும் குயிக் பேக்ட்டுகள் மட்டுமே கொடுக்கப்படும். ஜெனரேட் செய்யப்பட்ட தகவல்கள் கிடைக்காது.

கூகுள் அல்கோரிதம்:
கூகுள் சர்ச்சில் உங்களுக்கு காண்பிக்கப்படும் அனைத்து லிங்குகள், வீடியோக்கள், போட்டோக்கள் போன்ற டேட்டாக்களானது கூகுள் அல்கோரிதத்தின்படி ரேங்க் செய்யப்பட்டு கொடுக்கும். ஆகவே, அல்கோரிதம் அடிப்படையில் கொடுக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே உங்களுக்கு முதன்மையாக காண்பிக்கப்படும்.

Google சர்ச் Vs AI மோட் சர்ச்.. Google AI மோட் ஓர் புது அனுபவம்!

கூகுள் ஏஐ மோட் சர்ச் (Google AI Mode Search):
* ஏஐ பவர்டு பதில்கள்
* இன்டராக்சன்
* டெக்ஸ்ட் பிரசன்டேஷன்
* ஜெமினி 2.5 பவர்டு

ஏஐ பவர்டு பதில்கள்:
கூகுள் ஏஐ மோட் மூலம் நீங்கள் சர்ச் செய்யும்போது, உங்களது வினவல்களுக்கு நேரடியாக ஏஐ மூலம் ஜெனரேட் செய்யப்பட்ட பதில்கள் கிடைக்கின்றன. இது லிங்குகள் போல்லல்லாமல், ஏஐ சாட்பாட்களை போல இந்த பதில்களை கொடுக்கிறது. இது பெரும்பாலும் ஒத்திசைவாக கொடுக்கப்படும் பதில்களாகும்.

இன்டராக்சன்:
இதுகிட்டத்தட்ட சாட்பாட் போலவே செயல்படுகிறது. ஆகவே, உரையாடல்களை போல கேள்விகளை கேட்கலாம். அந்த கேள்விகளை மறுஉருவாக்கம் செய்யலாம். கூடுதல் கேள்விகள் மூலம் உங்களது தேடல் குறித்து ஆழமான பதில்களை பெற்று கொள்ளலாம். டிரெடிஷ்னல் கூகுள் சர்ச்-ஐ போல லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.

Google சர்ச் Vs AI மோட் சர்ச்.. Google AI மோட் ஓர் புது அனுபவம்!

டெக்ஸ்ட் பிரசன்டேஷன்:
உங்களது கேள்விகளுக்கு வெறுமனமே லிங்குகளை மட்டும் கொடுப்பதை தவிர்த்து, அதற்கான பதில்களை தலைப்பு, சம்மரி, துணை தலைப்பு, புல்லட் பாய்ன்ட்கள் போன்றவற்றுடன் கொடுக்கிறது. ஆகவே, உங்களது கேள்விகள் சரியாக இருந்தால், ஒரே பதில் மூலம் அதற்கான விவரங்களை நீங்கள் பெற்று கொள்ள முடிகிறது.

ஜெமினி 2.5 பவர்டு:
கூகுள் சர்ச் போல இது அல்கோரிதம் மற்றும் ரேங்கிங் அடிப்படையில் செயல்படவில்லை. ஜெமினி 2.5 (Gemini 2.5) அடிப்படையில் பதில்களை கொடுக்கிறது. ஆகவே, கேள்விகளுக்கு ஏற்ற பதில்களை மூலை முடுக்கிலும் இருந்து எடுத்து, அதை பிரசன்டேஷன் செய்து டெக்ஸ்ட்களாக கொடுக்கிறது. இப்போது முக்கிய வேறுபாடுகளை பார்ப்போம்.

கூகுள் ஏஐ மோட் எப்படி வேறுபடுகிறது?
1. கூகுள் ஏஐ மோட் மூலம் சின்ங்க்கரனஸ்டு பதில்கள் கிடைப்பதால், யூசர்கள் பல்வேறு லிங்குகளை ஆராய தேவைப்படும் நேரம் மிஞ்சமாகிறது.
2. உரையாடல்கள் போல பதில்கள் கிடைப்பதால், சாட் செய்யும்போது கிடைக்கும் நேச்சுரல் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கிறது.
3. மல்டிபிள் வினவல் கிடைப்பதால், ஒரே நேரத்தில் 10 கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை பெற்று கொள்ளலாம்.
4. வெறும் லிங்குகள் கொடுப்பதை தவிர்த்து ஆழமாக ஆராய்ந்து பதில்களை கொடுப்பதால், வேறு லிங்குகளுக்கு செல்ல வேண்டியது குறைகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
AI Search Vs Traditional Search Comparing Google AI Mode From Links to Answers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X