இனிமேல் சிரமம் இல்லாமல் ரீசார்ஜ் செய்யலாம்: சூப்பர் வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்.

|

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பயனர்களுக்கு தகுந்தபடி புதிய புதிய வசதிகளை கொண்டுவந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இந்தியாவில் Google Search மூலம் மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது இந்நிறுவனம்.

கூகுள் உதவ முன்வந்துள்ளது

கூகுள் உதவ முன்வந்துள்ளது

குறிப்பாக பயனர்கள் தேர்வு செய்யும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் Recharge Plan-களை ஒருசேரபார்க்கும் வசதியும், அதற்கு digital wallet-களில் வழங்கப்படும் சலுகைகளை ஒப்பிட்டு கொள்ளும் வசதியும்பின்பு மொபைல் ப்ரீபெய்ட் எண்களை ரீசார்ஜ் செய்து கொள்வதற்கு என இனி பயனர்களுக்கு கூகுள் உதவ முன்வந்துள்ளது.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கும்

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கும்

மேலும் கூகுள் நிறுவனம் கொண்டுவரும் இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஜடியா,பிஎஸ்என்எல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்கள் மற்றும் அவற்றுக்கான சலுகை விவரங்கள் உள்ளிட்ட ஒருங்கினைந்த தரவுகள் பயனர்களுக்கு காண்பிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொபைல் எண்

மொபைல் எண்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் கூகுள் சர்ச் பாக்ஸ் சென்று prepaid mobile recharge அல்லது SIM recharge போன்ற ரீசார்ஜ் சம்பந்தமான Key Words-களை டைப் செய்தால் மொபைல் எண், ஆப்பரேட்டர் மற்றும் வட்டம் உள்ளிட்டதகவல்களை பயனர்களை நிரப்ப சொல்லி கேட்கும். பின்பு அதை நிரப்பிவிட்டால் Browse plans ஆப்ஷன் மூலம் குறிப்பிட்ட தொலைத்தொடர்பு ஆப்பரேட்டரால் கிடைக்கும் எல்லா ப்ரீபெய்ட் ப்ளான்களையும் கூகுள் காட்டும். அதிலிருந்து பயனர்கள் தங்களுக்கு தேவைப்படும் பிளானை தேர்வு செய்து கொள்ளலாம்.

ரீசார்ஜ் சலுகைகள்

ரீசார்ஜ் சலுகைகள்

அதேசமயம் மொபைல் கட்டண சேவை வழங்குநர்களாக மொபிவிக், பேடிஎம், FreeCharge மற்றும் Google Pay போன்ற நிறுவனங்ள் வழங்கும் ரீசார்ஜ் சலுகைகள் ஒருங்கிணைந்து காட்டப்படும். அதிலிருந்து தாங்கள்விரும்பும் மற்றும் பயன்படுத்தும் சேவைகளை கொண்டு, சிறந்ததை தேர்வு செய்து ரீசார்ஜ் செய்யலாம்.

கூகுளின் புதிய வசதி

கூகுளின் புதிய வசதி

மேலும் பயனர்கள் தங்கள் மொபைல் எண்களை மட்டுமின்றி, தங்களுக்கு வேண்டிய நண்பர்களின் எண்களையும்கூகுளின் புதிய வசதி மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த புதிய வசதியில் பல மொபைல் ஆப்பரேட்டர்கள் மற்றும் மொபைல் கட்டண சேவை தளங்கள் சேர்க்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.குறிப்பாக ரீசார்ஜ் செய்யும் வேலையை எளிமையாக்க விரைவில் இது செயல்பாட்டுக்கு வரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Google Search Now Allows Users to Recharge Prepaid Packs on Mobile in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X