Google Search கதை முடிஞ்சது.. SearchGPT அறிமுகம்.. சுந்தர் பிச்சை தலையில் இடியை இறக்கிய OpenAI நிறுவனம்!
சாட்ஜிபிடி (ChatGPT) என்கிற ஏஐ அடிப்படையிலான ஜெனெரேட்டிவ் சாட்பாட்டை (AI-powered Generative Chatbot) நமக்கெல்லாம் அறிமுகம் செய்த ஒப்பன்ஏஐ (OpenAI) நிறுவனமானது, அதன் புதிய ஏஐ-பவர்டு சேர்ச் எஞ்சின் (AI-powered search engine) ஆன சேர்ச்ஜிபிடி (SearchGPT) அறிமுகம் செய்துள்ளது. ஒப்பன்ஏஐ நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கை ஏற்கனவே உள்ள மற்ற பிரபலமான தேடுபொறிகளான கூகுள் சேர்ச் (Google Search) மற்றும் பிங் சேர்ச் (Bing Search) போன்றவைகளுக்கு "பெரிய தலைவலி" ஆக.. கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேர்ச்ஜிபிடி-யில் அப்படி என்ன ஸ்பெஷல்? சேர்ச்ஜிபிடி-யில் உள்ள புதிய சேர்ச் அம்சங்கள் (New Search Features) ஆனது ஒப்பன்ஏஐ நிறுவனத்தின் ஏஐ மாடல்களின் (AI Models) வலிமையை இணையத்தில் உள்ள தகவலுடன் இணைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தெளிவான மற்றும் பொருத்தமான ஆதாரங்களுடன் விரைவான மற்றும் நிகழ்நேர பதில்களை வழங்குகிறது.

சேர்ச்ஜிபிடி ஆனது கூகுள் மற்றும் பிங் சேர்ச்சில் இருந்து எப்படி வேறுபடும்? இது கூகுள் மற்றும் பிங் போன்ற "பாரம்பரியமான தேடுபொறிகளை" போல் இல்லாமல் அதன் பயனர்களுக்கு வெப் பேஜ்களுக்கான லிங்க்களை (Web Pages Link) வழங்குகிறது. அதாவது சேர்ச்ஜிபிடி ஆனது உங்கள் கேள்விகளுக்கு, ஆதாரத்திற்கான லிங்க்களுடன் நேரடியாக பதிலளிக்கிறது.
எல்லாவற்றை விட சுவாரசியமாக ஒவ்வொரு வினவலுடனும் பகிரப்பட்ட கான்டெக்ஸ்ட் பில்டிங் (Shared context building with each query) மூலம் ஃபாலோ-அப் கேள்விகளை (Follow-up questions) கேட்கவும் அனுமதிக்கிறது. ஓப்பன்ஏஐ நிறுவனமானது அதன் சேர்ச்ஜிபிடி ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட பதில்களை ஆட்ரிப்யூஷன் (Attribution) என்று அழைக்கிறது.
அதாவது தான் வழங்கும் தகவல் எங்கிருந்து வருகிறது என்பது பயனர்களுக்கு தெரிவிக்கும் வண்ணம் வெளிப்படையாக இருக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் இசை விழாக்களை பற்றிய விவரங்களை தேடினால், சேர்ச்ஜிபிடி ஆனது பல வகையான முடிவுகளில் இருந்து உங்களுக்கான தகவலை சுருக்கி.. அந்த சுருக்கமான விளக்கத்தையும், தகவலை சேகரிக்கும் இணைப்புகளையும் உங்களுக்கு வழங்கும்.
இப்போதைக்கு இல்லை.. ஆனால் இறுதியில் சேர்க்கப்படும்.. எதனுடன்? சேர்ச்ஜிபிடி என்பது தேடலை பற்றியது மற்றும் ஒப்பன் ஏஐ-யின் ஜெனரேட்டிவ் ஏஐ அபவுண்டேஷன் மாடல்களை (OpenAI's generative AI foundation model) பயிற்றுவிப்பதில் இருந்து வேறுபட்டது என்று ஓப்பன்ஏஐ நிறுவனம் கூறுகிறது. மேலும் ஜெனரேட்டிவ் ஏஐ ட்ரெயினிங்கில் இருந்து வெளியேறிய தளங்களும் கூட சேர்ச்ஜிபிடி தேடல் முடிவுகளில் தோன்றும் என்பதை தெளிவுபடுத்துகிறது.
ஆனாலும் சேர்ச்ஜிபிடி மாடல் ஆனது தற்காலிகமானது தான் என்றும் இறுதியில் இது சாட்ஜிபிடி உடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும் ஓப்பன்ஏஐ நிறுவனம் கூறியுள்ளது. இப்போதைக்கு இது ஜிபிடி-4 ஃபேமிலி மாடல்களால் (GPT-4 family models) இயக்கப்படுகிறது மற்றும் 10,000 டெஸ்ட் யூஸர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது.
சேர்ச்ஜிபிடி-ஐ கூகுள் சேர்ச் சமாளிக்குமா? பயனர்கள் வேறொரு சேர்ச் என்ஜினிற்கு இடம்பெயவர்தற்கு முன்பாகவே, கூகுள் நிறுவனமானது அதன் சேர்ச்சில் ஏஐ அடிப்படையிலான சில பலமான அம்சங்களை திணிப்பதன் மூலம், ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சேர்ச்ஜிபிடி-ஐ சமாளிக்கலாம்; அதை ஆதிக்கம் செலுத்த விடாமல் நிச்சயம் தடுக்கலாம்.
சுந்தர் பிச்சை (Sundar Pichai) தலைமையிலான கூகுள் நிறுவனம் ஏற்கனவே சேர்ச் எஞ்சினில் ஜெமினி ஏஐ அடிப்படையிலான பல ஏஐ அம்சங்களை சேர்க்க தொடங்கிவிட்டலும் கூட, இந்த போட்டி இன்னும் சூடுபிடிப்பதை பார்க்க ஆர்வமாக இருக்கும். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, சேர்ச்ஜிபிடி ஆனது கூகுள் மற்றும் பிங் போன்ற ஜாம்பவான்களுக்கு மட்டுமல்ல பெர்ப்ளெக்ஸ்ஸிட்டி (Perplexity) போன்ற ஏஐ அடிப்படையிலான மற்ற தேடுபொறிகளுக்கும் கூட பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








