மொபைல் பயனர்களுக்காக 'மோர் ரிசல்ட்' வசதியை அறிமுகப்படுத்திய கூகுள் தேடுபொறி.!

சிலவாரத்திற்கு முன்பு, இந்த மோர் ரிசல்ட் வசதியை கூகுள் சோதனை செய்து வருவதாக உறுதிபடுத்தினார் சல்லீவன்.

|

கூகுள் தனது தேடுபொறியில், மொபைல் பயனர்களுக்காக மோர் ரிசல்ட்ஸ் (More Results) என்ற புதிய பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே கொடுப்பட்ட முதல் தொகுப்பு ரிசல்டை விட இன்னும் அதிகமாக ரிசல்ட் காண்பிக்கப்படும்.

 'மோர் ரிசல்ட்' வசதியை அறிமுகப்படுத்திய கூகுள் தேடுபொறி.!


புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மோர் ரிசல்ட்ஸ் பட்டன் மூலம் மொபைலில் அதிகப்படியான ரிசல்டை எளிதாகவும் விரைவாகவும் பெற இயலும் எனவும், தற்போது ஒரே பக்கத்தில் கூடுதல் ரிசல்ட்கள் காட்டப்படும் என்றும், முன்னதாக நெக்ஸ்ட் பேஜ் (Next Page) என்ற தேர்வின் மூலம் கூடுதல் ரிசில்ட் முற்றிலும் புதிய பக்கத்தில் காட்டப்பட்டது என கூகுளின் டேனி சல்லீவன், கடந்த புதனன்று டிவிட்டரில் தெரிவித்தார்.

சிலவாரத்திற்கு முன்பு, இந்த மோர் ரிசல்ட் வசதியை கூகுள் சோதனை செய்து வருவதாக உறுதிபடுத்தினார் சல்லீவன். இந்த மோர் ரிசல்ட வசதி , அனைத்து ஆண்ராய்டு, ஐ ஓ.எஸ் கூகுள் செயலிகளிலும், பெரும்பாலான வெப் ப்ரவுசர்களிலும் (ஐ.ஓ.எஸ் க்ரோம் தவிர) பயனர்களுக்கு கிடைக்கும் எனவும் அந்த டிவீட் மேலும் கூறுகிறது.

இந்த புதிய பட்டன் முதலில் சம்பந்தப்பட்ட ரிசல்டுகளையும், அடுத்து அது சம்பந்தமான விளம்பரங்களையும் காண்பிக்கும் என்கிறது கூகுள்.

இந்த மாத தொடக்கத்தில் கூகுள் தேடுபொறியில் இன்னொரு புதிய வசதியே அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் திரையரங்குகளுக்கு செல்வதையும், திரைப்பட நேரத்தையும் நன்கு திட்டமிடலாம்.

இந்த புதிய அப்டேட் மொபைல் வெப் ப்ரவுசர்களிலும், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் (ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும்) ஆண்ராய்டு கூகுள் சர்ச் செயலியிலும் வெளியிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் ஐ ஓ.எஸ் வெப் ப்ரவுசர்களிலும், கூகுள் சர்ச் செயலியிலும் இந்த அப்டேட் கிடைக்கும்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

 'மோர் ரிசல்ட்' வசதியை அறிமுகப்படுத்திய கூகுள் தேடுபொறி.!


"இந்த வார இறுதியில் படத்திற்கு செல்ல திட்டமிடுகிறீர்களா?" அதை திட்டமிடுவது இன்னும் எளிதாகி விட்டது. முன்பெல்லாம் என்ன படம் என்பதை முடிவு செய்யும் போதே, காட்சி நேரம் மற்றும் தியேட்டரையும் முடிவு செய்யவேண்டும். எங்களின் இந்த புதிய அப்டேட்டின் மூலம் மூவி ரேட்டிங், காட்சி நேரம், தியேட்டர் உள்ள இடம், போன்றவற்றை எளிதில் ஒப்பிட்டு, ஒரே கிளிக்கில் படத்தை முன்பதிவு செய்யலாம் என்கிறது கூகுள்.

Best Mobiles in India

English summary
Google Search Gets 'More Results' Button for Mobile Users ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X