கூகுள் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய மாணவர்கள்! இயற்கை முறையைக் கையில் எடுத்து சாதனை!
கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் 'சயின்ஸ் ஃபேர்'(Science Fair) என்ற போட்டியை மாணவர்களுக்காக அறிவித்தது. உலகளவில் உள்ள மாணவர்கள் அனைவரும் இதில் பங்கெடுத்துக்கொண்டனர். இப்போட்டிக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பரிசு வென்ற மாணவர்களில் இரண்டு இந்திய மாணவர்களும் இடம்பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

புதிய தீர்வை உருவாக்க மாணவர்களுக்குச் சவால்
உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு அவர்களின் ஆர்வத்தையும், புத்திக் கூர்மையையும், அவர்களின் புதிய படைப்புகளையும் வெளிக் கொண்டுவருவதற்காக கூகுள் நிறுவனம் இந்த போட்டியை அறிவித்திருந்தது. உலகில் உள்ள எந்தவொரு பிரச்சினைக்கும், ஒரு புதிய தீர்வை உருவாக்க வேண்டும் என்று மாணவர்களுக்குச் சவால் கொடுக்கப்பட்டது.

14 நாடுகளைச் சேர்ந்த 24 மாணவர்கள்
இந்த போட்டியில், உலகளவில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்குபெற்றனர், அதில் 14 நாடுகளைச் சேர்ந்த 24 மாணவர்கள் இறுதிச் சுற்றிற்கு தகுதியானார்கள். இறுதிச் சுற்றிற்கு தகுதியான மாணவர்கள் அனைவரும் கூகுளின் தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சவால்களை வென்ற மாணவர்கள்
இறுதிச்சுற்றிற்காகத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்குப் பிரச்சனையின் நிலைத்தன்மையை ஆராய்தல், சுகாதாரம் மற்றும் அணுகல் முறை ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் பல்வேறு சவால்கள் கொடுக்கப்பட்டது. அனைத்து சவால்களையும் பக்குவமாகக் கையாண்ட மாணவர்களுக்கு தனித்தனி பிரிவுகளின் கீழ் பரிசுகள் வழங்கப்பட்டது.

கிராண்டு வின்னர் பரிசு
பியோன் ஃபெரீரா என்ற அயர்லாந்து மாணவர் கிராண்டு வின்னர் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டார். கழிவுநீரில் இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்கள் கடலுக்குள் கலப்பதற்கு முன் எப்படி அதைப் பிரித்தெடுப்பது என்ற முறையை கண்டுபிடித்ததற்காக இவருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இயற்கைமுறை படி ரப்பர்
தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்களின் அமன் கே.ஏ மற்றும் ஏ.யூ.நச்சிகேத் என்ற இந்திய மாணவர்களுக்குத் தேசிய புவியியல் எக்ஸ்ப்ளோரர் விருது(National Geographic Explorer Award) வழங்கப்பட்டுள்ளது. ரசாயனம் எதுவுமின்றி ரப்பரை இயற்கைமுறை படி வரைய வைத்து அதன் தரத்தை அதிகரிக்க மாணவர்கள் கண்டுபிடித்த முறைக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications