ஜிமெயிலில் படித்ததும் 'தானாக அழிந்து போகும் இமெயில்' அம்சம்; கூகுள் அதிரடி.!

முன்னர் வெளியான அறிக்கையின்படி, புதிய ஜிமெயில் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் ஆனது, வருகிற மே மாதம் நிகழும் கூகுள் ஐ/ஓ மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது.

|

பிரபல இமெயில் சேவையான ஜிமெயிலில், புதிய டிசைன் உட்பட பல புதிய அம்சங்களை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ள கூகுள் நிறுவனம், மறுகையில் 'செல்ப் டிஸ்ட்ரெக்ட்டிங்' (self-destructing) எனப்படும் தானாகவே அழிந்து போகும் இமெயில்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னர் வெளியான அறிக்கையின்படி, புதிய ஜிமெயில் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் ஆனது, வருகிற மே மாதம் நிகழும் கூகுள் ஐ/ஓ மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது. அவைகளில் மிகவும் புதிய மற்றும் அதிகம் பேசப்பட்ட அம்சங்களில் ஒன்று தான் - கான்பிடென்ஷியல் மோட் (Confidential Mode) எனப்படும் ரகசிய பயன்முறை. இந்த அம்சமானது, பெறுநர்களுக்கு இருக்கும் குறிப்பிட்ட இமெயில் மீதான தடைகளை செய்யும் திறன்களை கையாள விடாமல் தடுக்கும் என்று நம்பப்பட்டது.

ஒருவர் பார்வேட் செய்யலாமா.? கூடாதா.?

ஒருவர் பார்வேட் செய்யலாமா.? கூடாதா.?

ஆனால், தற்போது டெக் க்ரன்ச் வெளியிட்ட ஒரு தகவலின் படி, ஜிமெயிலில் இடம் பெறவுள்ள கான்பிடென்ஷியல் மோட் என்கிற புதிய அம்சமானது, அனுப்பிய இமெயிலை ஒருவர் பார்வேட் செய்யலாமா.? கட் காப்பி பேஸ்ட் செய்யலாமா.? இமெயில் வழியாக டவுன்லோட் மற்றும் பிரிண்ட் செய்யலாமா.? என்பதோடு சேர்த்து 'செல்ப் டிஸ்ட்ரெக்ட்டிங்' செய்யும் திறனையும் அனுப்புநருக்கு வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தன்னை தான - சத்தமின்றி  -அழித்துக்கொள்ளும்.!

தன்னை தான - சத்தமின்றி -அழித்துக்கொள்ளும்.!

எளிமையாக கூற வேண்டும் எனில், ஒரு இமெயிலை பெறும் நபர், பெற்ற இமெயிலை கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்னவெல்லாம் செய்ய கூடாது என்கிற கட்டுப்பாட்டை கான்பிடென்ஷியல் மோட் வழங்கும். மறுகையில் உள்ள 'செல்ப் டிஸ்ட்ரெக்ட்டிங்' அம்சமானது, பெறுநரின் இன்பாக்ஸில் இருக்கும குறிப்பிட்ட இமெயில் ஆனது தன்னை தான - சத்தமின்றி -அழித்துக்கொள்ளும் ஒரு திறனாகும்.

படிக்கவோ திறக்கவோ முடியாது.!

படிக்கவோ திறக்கவோ முடியாது.!

இந்த அம்சத்தின் இன்னும் சிறப்பான பகுதி என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்க்குள் படிக்க முடியாமல் போகுமாறு அல்லது அழியுமாறு கூட ஒரு பயனரால் 'செல்ப் டிஸ்ட்ரெக்ட்டிங்' அம்சத்தை இயக்க முடியும். 'செல்ப் டிஸ்ட்ரெக்ட்டிங்' ஆன ஒரு இமெயிலை அதன் பிறகு படிக்கவோ திறக்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட இமெயில் மீதான கடவுச்சொல்லையும் உருவாக்கலாம்.!

குறிப்பிட்ட இமெயில் மீதான கடவுச்சொல்லையும் உருவாக்கலாம்.!

குறிப்பிட்டுள்ள கான்பிடென்ஷியல் மோட்டை ஆக்டிவேட் செய்ய, இமெயில் முகவரி பாப்-அப் பாக்ஸில் உள்ள லாக் ஐகானை டாப் செய்ய வேண்டும். கூடுதலாக ஒரு 'செல்ப் டிஸ்ட்ரெக்ட்டிங்' இமெயிலை அனுப்ப விரும்பும் பயனர், குறிப்பிட்ட இமெயில் மீதான கடவுச்சொல்லையும் உருவாக்கலாம். அதை குறிப்பிட்ட பெருநருக்கு மட்டுமே வழங்கி இமெயிலுக்கான அணுகலை உருவாக்கலாம். பெயர் குறிப்பிடுவதுபோல், இந்த கான்பிடென்ஷியல் மோட் ஆனது மிக மிக ரகசியமான இமெயில்களுக்கானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?
ஸ்க்ரீன் ஷார்ட் எடுப்பதை தடுக்க எந்த வழிவகையும் செய்யவில்லை.!

ஸ்க்ரீன் ஷார்ட் எடுப்பதை தடுக்க எந்த வழிவகையும் செய்யவில்லை.!

பார்வேட் செய்யலாமா.? கட் காப்பி பேஸ்ட் செய்யலாமா.? டவுன்லோட் மற்றும் பிரிண்ட் செய்யலாமா.? போன்ற அனுமதிகளை வழங்கினாலும் கூட, குறிப்பிட்டுள்ள கான்பிடென்ஷியல் மோட் ஆனது ஸ்க்ரீன் ஷார்ட் எடுப்பதை தடுக்க எந்த வழிவகையும் செய்யவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதற்கான திறனும் உருவாக்கம் பெறலாம்.

வரவிருக்கும் வாரங்களில் அறிமுகமாகும்.!

வரவிருக்கும் வாரங்களில் அறிமுகமாகும்.!

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து வகையான புதிய ஜிமெயில் யூஸர் இன்டர்பேஸ் அம்சங்களும், வரவிருக்கும் வாரங்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் வெளியான அறிக்கையின் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களை கொண்டு, ஜிமெயில் பீட்டா சோதனை தளம் வழியாக நிகழ்த்தப்பட்ட சோதனைகளை அடுத்து, இந்த புதிய அம்சங்கள் அனைவர்க்கும் மிக விரைவில் உருட்டடப்படும்.

Best Mobiles in India

English summary
Google said to be planning self-destructing email on Gmail; here’s how it works. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X