Google Maps ஸ்னாப் செய்த வினோதமான 'மிதக்கும் மனிதன்'! உண்மை காரணம் இது தான்!

|

கூகிள் மேப்ஸின் ஸ்ட்ரீட் வியூ கேமரா பங்களாதேஷில் உள்ள இளம் மனிதராகக் கால்கள் இல்லாமல் மிதக்கும் மனிதராகப் படம்பிடித்துள்ளது. இந்த அசாதாரண தோற்றத்துடன் இருக்கும் புகைப்படத்தில் இன்னும் ஒரு வேடிக்கையான விஷயமும் ஒளிந்துள்ளது. இந்த புகைப்படம் தற்பொழுது வைரல் ஆகிவருகிறது.

மிதக்கும் மனிதனின் விசித்திரமான புகைப்படம்

மிதக்கும் மனிதனின் விசித்திரமான புகைப்படம்

உலகெங்கிலும் உள்ள பல கோடி பயனர்கள் பயன்படுத்தும் இந்த கோ-டு நேவிகேஷன் பயன்பாடு, புதிதாக ஒரு மிதக்கும் மனிதனின் விசித்திரமான புகைப்படத்தை உருவாக்கியுள்ளது. உண்மையில் இந்த பறக்கும் மனிதரின் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

கூகிள் உருவாக்கிய மிதக்கும் மனிதன்

கூகிள் உருவாக்கிய மிதக்கும் மனிதன்

இந்த புகைப்படம், டவ்ன்டவுன் எக்ஸ் என்ற ஒரு ரெடிட் பயனர் மூலம் வெளியிட்டுள்ளது. 'பங்களாதேஷில் மிதக்கும் மனிதன்' என்ற தலைப்பில் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவர் தனது கையில் ஒரு குழந்தையை வைத்திருப்பதைக் காட்டுகிறது, இருப்பினும் புகைப்படத்தில் அவரின் கால்கள் மட்டும் காணப்படவில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தப்பித் தவறி கூட whatsapp-ல் இத பண்ணாதிங்க!முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தப்பித் தவறி கூட whatsapp-ல் இத பண்ணாதிங்க!

சுவற்றில் தெரிந்த உண்மை

சுவற்றில் தெரிந்த உண்மை

இருப்பினும், சில பார்வையாளர்கள் அவர் அருகில் இருக்கும் சுவற்றில், அந்த இளைஞரின் கால்களின் நிழல்கள் இருப்பதைக் கவனித்து கமெண்ட் செய்துள்ளனர். ஆகையால், உண்மையில் அவர்களுக்குக் கால்கள் இருந்துள்ளது என்பதைசுவற்றில் உள்ள நிழல் உறுதிப்படுத்தியுள்ளது.

 360 டிகிரி கிளிட்ச்

360 டிகிரி கிளிட்ச்

அப்படியானால், இவர் கால்கள் காணாமல் போனதற்குக் காரணம் என்ன என்ற கேள்விக்கான பதில், அந்த இளைஞரின் மிதக்கும் உடலுக்கான காரணம் கூகிள் மேப்ஸ் பயன்பாட்டில் எழுந்த ஒரு தடுமாற்ற கிளிட்ச் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 360 டிகிரி புகைப்படத்தை எடுக்கும் பொது இது போன்ற கிளிட்ச்கள் தோன்றுவது இயல்பு என்று பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

முடிஞ்சது கதை: 1 ஜிபி இனி 35 ரூபாய்., Vodafone 7 மடங்கு கட்டண உயர்வு?- அப்போ Airtel, Jio நிலை?முடிஞ்சது கதை: 1 ஜிபி இனி 35 ரூபாய்., Vodafone 7 மடங்கு கட்டண உயர்வு?- அப்போ Airtel, Jio நிலை?

வேடிக்கையான கால் நிழல்

வேடிக்கையான கால் நிழல்

இதற்கிடையில், மற்றொரு சுவாரசியமான வேடிக்கை கமெண்ட்டாக ஒரு பயனரின் கமெண்ட் இருந்துள்ளது. தெரிந்தோ தெரியாமலோ குழந்தையின் கால் நிழலை நான் தவறான இடத்தில் கண்டு அதிர்ந்து போனேன் என்று வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளார். இந்த கமெண்ட்ரிக்கு பின்னர் பலரும் இந்த வேடிக்கை தவறை கண்டு சிரித்துள்ளனர்.

உண்மை காரணம் இதுதான்

உண்மை காரணம் இதுதான்

கூகிள் மேப்ஸ் பயன்பாட்டில் 360 டிகிரி புகைப்படத்தை கிளிக் செய்யும்பொழுது, 360 டிகிரி கோணத்தில் புகைப்படங்கள் கிளிக் செய்து அனைத்து கோணங்களின் படங்களையும் ஒன்றாகத் தொகுத்து ஒரே 360 வியூ படமாக வழங்குகிறது. அப்படி அனைத்து படங்களையும் தொகுக்கும் போது இந்த சிறிய பிழை உருவாகி, இந்த இளைஞரின் கால்கள் மறைக்கப்பட்டு மிதப்பது போல் மாறிவிட்டது.

Best Mobiles in India

English summary
Googles Street View Snaps Bizarre Floating Man Went Viral On Internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X