கூகுளின் டிரைவர் இல்லா கார்கள் விரைவில் சாலையில்

By Meganathan
|

கூகுள் நிறுவனத்தின் டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்கள் விரைவில் சாலைகளில் வலம் வர காத்திருக்கின்றது. துவக்கத்தில் தெரிவித்தை போன்று இல்லாமல் இந்த கார்களில் ஸ்டியரிங் சக்கரம் மற்றும் ப்ரேக் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

கூகுளின் டிரைவர் இல்லா கார்கள் விரைவில் சாலையில்

கூகுளின் தானியங்கி மென்பொருளான Lexus RX450h கொண்ட 25 வாகனங்களை பொறியாளர்கள் இயக்குவார்கள் என்று கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் டிரைவர் இல்லா கார்களில் ஸ்டியரிங் சக்கரம், ஆக்சிலரேட்டர் பெடல் மற்றும் ப்ரேக் பெடல் இருக்காது என இத்திட்டத்தின் தலைவர் க்ரிஸ் உம்ஸன் முன்பு தெரிவித்திருந்தார்.

எனினும் சோதனைக்கு உள்ளாக்கப்படும் வாகனங்களில் இவை அவசியம் இடம் பெற வேண்டும் என கலிபோர்னியா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரௌஷ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாரித்த இந்த வாகனங்களில் ஸ்டியரிங் சக்கரம், ஆக்சிலரேட்டர் மற்றும் ப்ரேக் பெடல் போன்றவை அகற்ற கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ளதாக உம்சன் தனது இணைய பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார்.

Best Mobiles in India

English summary
Google's Self-Driving Cars to Hit Roads. Google Inc will begin testing self-driving cars of its own design on public roads this summer.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X