கூகுள் புதிய வசதி: செயலிகளை இன்ஸ்டால் செய்யாமல் பயன்படுத்தலாம்

|

பிரபல தேடுப்பொறி நிறுவனமான கூகுள் பிளே ஸ்டோரில் மிகப்பெரிய மாற்றத்தை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. பிளே ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதி செயலிகளை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யும் முன் அவற்றை பயன்படுத்தி பார்க்க முடியும்.

கூகுள் புதிய வசதி: செயலிகளை இன்ஸ்டால் செய்யாமல் பயன்படுத்தலாம்

கூகுளின் ஆண்ட்ராய்டு இன்ஸ்டன்ட் ஆப்ஸ் தொழில்நுட்பத்தை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதி கடந்த ஆண்டு நடைபெற்ற கூகுள் டெவலப்பர் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் மொபைல் இணையத்தில் அதிகப்படியான செயலிகளை சேர்க்கும் நோக்கில் வழங்கப்படுகிறது.

பெயருக்கு ஏற்றார்போல் பிளே ஸ்டோரில் இனி டிரை நௌ (Try Now) என்ற பெயர் இடம்பெற்றிருக்கும், இதனை கிளிக் செய்ததும், குறிப்பிட்ட செயலியில் ஒரு பகுதி ஆண்ட்ராய்டு சாதனத்தில் இயக்கி பார்க்க முடியும்.

கூகுள் புதிய வசதி: செயலிகளை இன்ஸ்டால் செய்யாமல் பயன்படுத்தலாம்

இதனால் செயலியை இன்ஸ்டால் செய்யும் முன்பே செயலியின் அனுபவத்தை பெற முடியும். இதனால் மொபைல் டேட்டா, வைபை ஸ்மார்ட்போன் மெமரி உள்ளிட்டவற்றை சேமிக்க முடியும். பிளே ஸ்டோரில் அதிகம் கிடைக்கவில்லை என்றாலும் இந்த வசதியை வழங்கும் செயலிகளை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று இன்ஸ்டன்ட் செயலிகள் URL-ஐ கிளிக் செய்தால் வேலை செய்யும். வழக்கமான பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகள் டவுன்லோடு ஆன பின் ஆண்ட்ராய்டில் பயன்படுத்த முடியும்.

புதிய இன்ஸ்டண்ட் செயலியில் டெவலப்பர்கள் கூடுதல் முயற்சி செய்து, தங்களது செயலி சிறிதாக வேலை செய்யும் படி மாற்றியமைக்கின்றனர். இதன் பின்புற தொழில்நுட்பம் சமீபத்தில் நடைபெற்ற கூகுள் டெவலப்பர் நிகழ்வில் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

அறிமுகம் : பிரகாசமான சிவப்பு வண்ணத்தில் சியோமி மி 5எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன்.!அறிமுகம் : பிரகாசமான சிவப்பு வண்ணத்தில் சியோமி மி 5எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன்.!

இதுமட்டுமின்றி மேலும் பல மாற்றங்கள் பிளே ஸ்டோரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் எடிட்டர் சாய்ஸ் பகுதியிலும் மாற்றம் செய்யப்பட்டு தற்சமயம் 17 நாடுகளில் ஏற்கனவே இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. கேம்களுக்கு டிரெயிலர்கள் மற்றும் கேம்பிளே ஸ்கிரீன்ஷாட் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளது. கேம்ஸ் பகுதியில் பிரீமியம் மற்றும் பணம் செலுத்துவதற்கென தனி பகுதிகள் வழங்கப்பட இருக்கிறது.

தற்சமயம் டிரை நௌ அம்சம் வழங்கும் செயலிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. எனினும் வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்மா்ட்போனில் இன்ஸ்டால் செய்யும் முன் சிறு பகுதியை பயன்படுத்த முடியும் என்பதால் மொபைல் டேட்டா, வைபை ஸ்மார்ட்போன் மெமரி உள்ளிட்டவற்றை சேமிக்க முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Google’s new ‘Try now’ button will allow you to check apps without installing

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X