மருத்துவரின் கையெழுத்து புரியவில்லையா? இனி புரியும்.! Google கொண்டுவரும் அட்டகாசமான அம்சம்.!

|

கூகுள் நிறுவனம் தொடர்ந்து மக்களுக்குப் பயனுள்ள வகையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. அதேபோல் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் கூகுள் நிறுவனம் ஒரு புத்தம் புதிய அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதைப் பற்றி இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது நீங்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது, மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டில் அவரின் கையெழுத்து நமக்குப் புரிந்திருக்கிறதா? அல்லது நமக்குப் புரியக்கூடாது என்பதற்காகவே இப்படி எழுதுகிறார்கள்? இப்படியெல்லாம் உங்களுக்குக் கண்டிப்பாகத் தோன்றியிருக்கலாம். இனிமேல் அந்த கவலை உங்களுக்கு இருக்காது.

மருத்துவரின் கையெழுத்து புரியவில்லையா? இனி புரியும்.! Google அம்சம்.!

மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துச் சீட்டில் இருக்கும் மருந்துகளின் பெயர்களை இனிமேல் எளிமையாகத் தெரிந்துகொள்ளும் புதிய அம்சத்தைக் கூகுள் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. கண்டிப்பாக நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

கடந்த டிசம்பர் 19-ம் தேதி கூகுள் நிறுவனத்தின் நடத்திய கூகுள் ஃபார் இந்தியா என்ற வருடாந்திர நிகழ்வில் புதிய கூகுளின் அம்சங்களைக் குறித்து அறிவித்துள்ளது. அதேபோல் இந்த நிகழ்வில் மருத்துவர்களின் மருந்துச்சீட்டை அறிந்து கொள்ளும் ஆர்ட்ஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) மற்றும் மெஷின் லேர்னிங் (Machine Learning) மாடல் குறித்து கூகுள் வேலை செய்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த புதிய அம்சம் ஆராய்ச்சியில் இருப்பதாகவும், இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தவில்லை என்றும் கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த புதிய அம்சம் பயன்பாட்டுக்கு வரும்போது, மருந்துச்சீட்டை புகைப்படம் எடுத்தோ அல்லது கேலரியில் இருக்கும் புகைப்படத்தை எடுத்தோ, அதைக் கூகுள் ஆப்பிள் பதிவிடும் போது,என்னென்ன மருந்துகள் எழுதப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகக் காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புதிய தொழில்நுட்பம் கையெழுத்தில் உள்ள மருத்துவ ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஆர்ட்ஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் கூகுள் லென்ஸில் உருவாக்கப்படுகிறது. இது நிஜ உலகின் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, சிஸ்டத்தில் முடிக்கப்பட வேண்டிய நிறைய வேலைகள் உள்ளன என்று கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இப்போது கூகுள் லென்ஸ்-ஐ பயன்படுத்தி என்ன வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்றவற்றை எளிமையாக கண்டுபிடிக்க முடியும். பின்பு இதைக் கொண்டு மொழிபெயர்ப்பு கூட செய்ய முடியும். குறிப்பாகக் கூகுள் நிறுவனத்தின இதுபோன்ற தொழில்நுட்ப அம்சங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் உலகம் முழுவதும் பல முன்னணி டெக் நிறுவனங்கள் குறிப்பிட்ட ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன. றிப்பிட்ட ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன. அதாவது ட்விட்டர் நிறுவனம் தொடங்கி பேஸ்புக் வரை பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளன. அதேபோல் ஏற்கனவே கூகுள் நிறுவனத்தில் உள்ள சில ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளிவந்தது. இந்நிலையில் பணி நீக்கம் குறித்த கேள்விக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஒரு சூசகமான பதிலைத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பணி நீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய ஊழியருக்குச் சுந்தர் பிச்சை கூறியது என்னவென்றால், எதிர்காலத்தினை கணிப்பது மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார். அதாவது கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியது வைத்துப் பார்க்கையில் விரைவில் சில ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்பதைக் குறிப்பதாகத் தெரிகிறது. எனவே தான் எதிர்காலத்தைக் கணிப்பது கடினம் என்று ஊழியர்களிடம் கூறினார்.

கடந்த மாதம் வெளியான அறிக்கையில், கூகுள் உயர் அதிகாரிகள் மத்தியில் 6 சதவீதம் அல்லது 10,000 ஊழியர்களை அடையாளம் காண கூறியதாகத் தகவல்கள் வெளியானது. அதாவது இந்த நடவடிக்கை மூலம் குறைந்த செயல்திறன் உள்ள ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

English summary
Google's new feature lets you read your doctor's poor handwriting on prescriptions: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X