கூகுள் டிஜிட்டல் அசிஸ்டன்ட்-இனி எல்லா ஆண்ட்ராய்டு போன்களிலும்.!

'கூகுள் டிஜிட்டல் அசிஸ்டன்ட்' இனி ஸ்மார்ட்போன்களில் இப்போதைய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் வெளிவருமென கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

By Ilamparidi
|

இணைய உலகின் அத்துணை துறைகளிலும் தமக்கென தனியான ஓர் இடத்துடன் கோலாச்சிக் கொண்டிருக்கும் கூகுள் நிறுவனம் தான் கால் பதித்த பெரும்பான்மையான துறைகளில் அனைத்திலும் வெற்றியே கண்டுள்ளது.அதற்கான உதாரணங்கள் தான் யூட்யூப்,கூகுள் மேப்ஸ்,ஜிமெயில் உள்ளிட்டடவை.அதுமட்டுமன்றி,அவ்வப்போது புதிய முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்தியே வந்துள்ளது.

அத்தகையதொரு புதிய முயற்சிகள் தான் கூகுள் நவ்,கூகுள் ஹோம்,கூகுள் டிஜிட்டல் அசிஸ்டன்ட் ஆகும்.அத்தகைய கூகுள் டிஜிட்டல் அசிஸ்டன்ட் ஆனது,இப்போது ஸ்மார்ட்போன்களில் தற்போதைய ஆண்ட்ராய்டு பதிப்புகளில் வெளிவரும் என கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுள் டிஜிட்டல் அசிஸ்டன்ட் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த தகவல்கள் கீழே.

கூகுள்:

கூகுள்:

இப்போதைய நவீன உலகில் நமது வாழ்வு முழுமையாக தொழில்நுட்பம் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கையில்,நாம் இணையத்தையும் கணினியையுமே எத்தகைய தகவல்களுக்காகவும் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.அத்தகைய இணைய உலகில் நமக்கான தகவல்களினை பெரும்பாலும் கூகுள் நாம் கண்டுபிடித்திட உதவுவது கூகுள் இணைய உலவியே ஆகும்.ஏனெனில்,இதுவே உலகின் முன்னணி இணைய உலவியாகும்.

கூகுள் டிஜிட்டல் அசிஸ்டன்ட்:

கூகுள் டிஜிட்டல் அசிஸ்டன்ட்:

கூகுளை டிஜிட்டல் அசிஸ்டன்ட் என்பது நமது ஸ்மார்ட்போன்கள் வழியாகவே நமக்கு தேவையான தகவல்களினை எளிதாக பெரும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும்.அதாவது நமக்கு தேவையான தகவல்களினை நாம் இணையத்தினை வழியாகத் தேடிக்கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை.நமது தேடல் சார்ந்த வார்த்தை ஏதேனும் ஒன்றினை வைத்தே நமக்கான தகவல்களை நாம் பெருகிறவகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

70 பில்லியனுக்கும் அதிகமான தகவல்கள்:

70 பில்லியனுக்கும் அதிகமான தகவல்கள்:

கூகுள் டிஜிட்டல் அசிஸ்டன்ட் பயனாளர்கள் உடனடியாக தகவல்களை பெறுகிற விதத்தில் 70 பில்லியனுக்கும் அதிகமான தகவல்களுக்கு உடனடியாக பதிலளிக்கிற வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளது.எடுத்துக்காட்டாக ஜப்பானின் தலைநகரம் எதுவென கேட்டால் உடனடியாக நொடிப்பொழுதில் டோக்கியோ என பதிலினை வழங்கும் இந்த 'கூகுள் டிஜிட்டல் அசிஸ்டன்ட்' இதுபோன்றே அனைத்து துறை சார்ந்த தகவல்களையும் இதன் வாயிலாக நாம் எளிதாக பெறலாம்.

விரைவாக மற்றும் துல்லியமாக:

விரைவாக மற்றும் துல்லியமாக:

கூகுள் டிஜிட்டல் அசிஸ்டன்ட் நமது தேடுதல் சார்ந்த தகவல்களை வேகமாக நாம் அறிந்திட உதவும்.இதன் மூலமாக,அறையின் உள்ளிருந்தே ஏனைய மின்சாதனங்களை நாம் இயக்கிட இயலும்.அதற்கேற்றார் போல் மின்சாதனகள் தயாரிப்பு நிறுவனகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதாக கூகுள் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.வானிலை உள்ளிட்ட அத்துணை கேள்விகளுக்கும் விரைவாகவும் மற்றும் துல்லியமாகவும் பதிலளிக்கும் இந்த 'கூகுள் டிஜிட்டல் அசிஸ்டன்ட்'.

ஆண்ட்ராய்டு போன்களில்:

ஆண்ட்ராய்டு போன்களில்:

நேற்றைய அறிவிப்பின் படி கூகுள் டிஜிட்டல் அசிஸ்டன்ட் ஆனது இனி எல்லா ஸ்மார்ட்போன்களிலும்,தற்போதைய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களான ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோவ் ஆகியவற்றில் வெளிவருமெனவும்,விரைவில் எல்லா மொழிகளிலும் பயன்படுத்திடும் வகையில் வடிவமைக்கப்படுமெனவும் அதன் தயாரிப்பு மேலாளரான கும்மி ஹப்ஸ்டீன்சன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

கல்வியில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவமும்-10 காரணங்களும்.!

Best Mobiles in India

English summary
Google's digital assistant comes to new Android phones.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X