Google அண்ணனே சொல்லிட்டாரு.. இனி உங்க போன் திருடப்பட்டாலோ.. துலைந்துவிட்டாலோ கவலை வேண்டாம்.. இதை செய்யுங்க..
கூகுள் (Google) நிறுவனம் அதன் கீழ் இயங்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு புதிய அட்டகாச அம்சத்தை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இனி ஆண்ட்ராய்டு 10 அல்லது அதற்கு மேல் உள்ள இயங்குதளங்களில் இயங்கும் எந்தவொரு ஸ்மார்ட்போன் சாதனம் திருடப்பட்டாலோ அல்லது தெரியாமல் துலைந்துவிட்டாலோ, இனி ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் முன்பை போல் அதிகமாக பதட்டப்பட தேவையில்லை என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. காரணம், கூகுள் நிறுவனம் தற்போது புதிய ஆண்ட்ராய்டு தெஃப்ட் ப்ரொடெக்ஷன் (Android theft protection) பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய அம்சம், தொலைபேசி திருட்டு அச்சுறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பை மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான படியாக முன்னேறியுள்ளது. கூகிள் பிளே சேவைகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த அப்டேட், கூகிள் I/O 2024 நிகழ்வில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பயனர்களின் தனிப்பட்ட தரவை அவர்களின் தொலைபேசி திருடப்பட்டால் அவற்றைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த உதவுகிறது என்று Google தெரிவித்துள்ளது.

Google அண்ணனே சொல்லிட்டாரு.. இனி உங்க போன் திருடப்பட்டாலோ.. துலைந்துவிட்டாலோ கவலை வேண்டாம்:
சரி, இந்த புதிய அம்சத்தை எப்படி போனில் இயக்கி பாதுகாப்பாக இருப்பது என்பதை தெரிந்துகொள்ளலாம். முன்பே சொன்னது போல, இந்த அம்சத்தை உங்கள் ஸ்மார்ட்போனில் இயக்க, உங்கள் சாதனம் ஆண்ட்ராய்டு 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்க வேண்டும். உங்கள் ஸ்மார்ட்போனில் Google Services> All services > Personal & device safety என்ற செட்டிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
இந்த மையம் பயனர்களுக்கு திருட்டுக்குப் பிறகு அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து தங்கள் தரவைப் பாதுகாக்கிறது. இதனால், வெறும் யாரும் உங்கள் போனில் உள்ள தகவல்களை அணுக முடியாததை இந்த ஆண்ட்ராய்டு தெஃப்ட் ப்ரொடெக்ஷன் அம்சம் உறுதி செய்கிறது. இந்த அம்சம் மூன்று விதமான முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் ஏதேனும் ஒரு விஷயம் திடீரென நடந்தால் கூட, உங்கள் சாதனம் ஆட்டோமெட்டிக்காக லாக் செய்யப்படும் என்று Google தெரிவித்துள்ளது.
- இன்டர்நெட் சேவையிலிருந்து உங்கள் போன் திடீரென துண்டிக்கப்பட்டால் இந்த சேவை இயக்கப்படும்.
- உங்கள் போனில் இன்டர்நெட் சேவை இல்லாவிட்டாலும், திடீரென ஏற்படும் அதிர்வின் மூலம் உங்கள் போன் ஆஃப்லைன் லாக் செய்யப்படும்.
- திருடர்கள் பெரும்பாலும் இருப்பிடத்தைக் கண்காணிப்பதைத் தவிர்க்க ஒரு சாதனத்தின் வைஃபை அல்லது மொபைல் தரவை அணைத்துவிடுவார்கள்.
- உங்கள் போனில் வைஃபை, லொகேஷன், இன்டர்நெட், மொபைல் டேட்டா OFF செய்யப்பட்டால், சாதனம் தானாகவே பூட்டப்படும்.
- உங்கள் போன் பயன்பாட்டில் இருக்கும்போது பிடுங்கப்பட்டதா என்பதை தனிப்பட்ட தரவை அணுகுவதைத் தடுக்க உடனடியாக லாக் செய்யப்படும்.
- இந்த சடன் லாக் உங்கள் போனில் உள்ள சென்சார்கள் மூலம் உணரப்பட்டு, லாக் செய்யப்படும்.
- இதில் புதிதாக ரிமோட் லாக் அம்சமும் இடம்பெறுகிறது.
உங்கள் போன் திருடப்பட்டால் இனி இதை செய்யுங்க.. ஈஸியா ரிமோட் லாக்.. டேட்டா பக்கா சேஃப்:
android.com/lock வலைத்தளம் சென்று, உங்கள் சாதனத்தை தொலைவில் இருந்து லாக் செய்யும் வசதி இதன் மூலம் கிடைக்கிறது. Find My Device அம்சத்தை விட வேகமானதாக கருதப்படும் இந்த முறை, பயனர்கள் தங்கள் திருடப்பட்ட தொலைபேசியை விரைவாகப் பாதுகாக்க வழி வகுத்துள்ளது. இந்த தளத்தில் உங்கள் மொபைல் நம்பர் உள்ளிட்டு லாக் செய்ய அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்து வைத்துக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது.


Click it and Unblock the Notifications








