போதும்யா ஆபிஸ் வாங்க., ரூ.75,000 மதிப்புள்ள ஸ்கூட்டர் இலவசமா கொடுக்குறோம்- கூகுள் அதிரடி முயற்சி!
உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும். ஏதாவது சந்தேகம் என்றாலும் சரி, எதையாவது படித்து அறிந்துக் கொள்ள வேண்டுமானாலும் சரி நமக்கு கைக் கொடுப்பது கூகுள் தான். மனிதனின் இரண்டாவது மூளையாக செயல்பட்டு வருகிறது. அனைத்து பயன்பாடுகளும் கூகுளில் ஆகச் சிறந்த பயன்பாட்டை அடுத்தடுத்த கட்டத்துக்கு எடுத்துக் கொண்டே வருகிறது. கூகுள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திறக்கு அழைத்து வர நிறுவனம் இலவச மின்சார ஸ்கூட்டர்களை வழங்குகிறது.

அலுவலகத்திற்கு வருவதை ஊக்குவிக்க நடவடிக்கை
கூகுள் நிறுவனம் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வருவதை ஊக்குவிக்க, இலவச மின்சார ஸ்கூட்டர்களை அறிவித்திருக்கிறது. சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது ஊழியர்களுக்கு இலவச பேருந்து சேவையை வழங்கி வந்தது. தற்போது கூகுள் நிறுவனம் தங்களது ஊழியர்களை ஊக்குவிக்க இலவச மின்சார ஸ்கூட்டர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. புதிய ரைடு ஸ்கூட்டர் திட்டத்தை அறிமுகப்படுத்த நிறுவனம் கூகுள் இ-ஸ்கூட்டர் உற்பத்தியாளரான உனகி உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் முறை
கோவிட்-19 தொற்றுநோய் பரவல் என்பது பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை முறையில் மாற்றம் செய்திருக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக பள்ளிக் கல்லூரியில் படித்தவர்கள் ஆன்லைன் வகுப்பு ஆன்லைன் தேர்வு என்ற முறைக்கு மாற்றப்பட்டனர். உச்சத்தில் இருந்தவர்களும் தரைநிலைக்கு வரும் சூழல் ஏற்பட்டது. கொரோனா காலத்தில் சில நிறுவனங்கள் லாபம் கிடைப்பதில்லை என்று கூறி வேலையாட்களை குறைப்பதும், அவர்களின் வருமானத்தில் சில சதவீதங்களை குறைக்கும் சூழலுக்கும் தள்ளப்பட்டன. அதேபோல் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தினர். அதன்படி மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியது. கொரோனா தொற்று பரவல் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததையடுத்து வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் முறை முடிவுக்கு வந்தது.

இலவச மின்சார ஸ்கூட்டர்கள் அறிவிப்பு
கூகுள் உட்பட பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களிலும் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் முறை முடிவுக்கு வந்துக் கொண்டு இருக்கிறது. சுந்தர்பிச்சை தலைமையிலான கூகுள், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதை கைவிட்டுவிட்டு இந்த வாரம் முதல் அலுவலகத்திற்கு வரும்படி கேட்டுக் கொண்டுள்ளது. நீண்ட காலமாக வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் சூழலை அனுபவித்த ஊழியர்களை மீண்டும் அலுவலகத்துக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் நிறுவனம் இலவச மின்சார ஸ்கூட்டர்களை அறிவித்துள்ளது. முன்னதாக சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இலவச பேருந்து சேவையை வழங்கி வந்தது.

புதிய "ரைடு ஸ்கூட்டர்" திட்டம்
புதிய "ரைடு ஸ்கூட்டர்" திட்டத்தை அறிமுகப்படுத்த கூகுள் இ-ஸ்கூட்டர் உற்பத்தியாளரான உனகியுடன் கூட்டு சேர்ந்திருக்கிறது. உனாகியின் ஸ்டைலான மாடல் ஒன் ஸ்கூட்டர் விலை ஆனது 990 டாலர் என விற்பனை செய்யப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.75,000 ஆக இருக்கிறது. இதுகுறித்து உனகியின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் ஹைமன் கூறுகையில், ரைடு ஸ்கூட் திட்டத்தின் பின்னணி கூகுள் ஊழியர்கள் அலுவலகத்தில் பணிக்கு திரும்ப உதவுவது தான் என குறிப்பிட்டார்.

அதிகாரப்பூர்வ அறிக்கை வழங்கவில்லை
இந்த திட்டமானது மவுண்டன் வியூ தலைமையகம், சியாட்டில், கிர்க்லாண்ட், இர்வின், சன்னிவேல், ப்ளேயா விஸ்டா, ஆஸ்டின் மற்றும் நியூயார்க் நகரம் போன்ற பிற அமெரிக்க இடங்களில் உள்ள கூகுள் ஊழியர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. கூகுளின் செய்தித் தொடர்பாள் இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வழங்கவில்லை. இருப்பினும் ஊழியர்கள் மத்தியில் அச்சம் இருப்பது அவர்களுக்கு தெரியும் எனவும் மக்கள் உண்மையில் வீட்டில் இருந்து வேலை செய்ய பழகிவிட்டனர், அவர்கள் அலுவலகத்திற்கு திரும்பி வருவதற்கான அனுபவத்தை மேம்படுத்து நிறுவனம் தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது என உனகியின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் ஹைமன் குறிப்பிட்டார். கூடுதலாக உனகி நிறுவனம் இதுபோன்ற திட்டத்திற்காக சேல்ஸ்ஃபோர்ஸ் போன்ற பிற பெரிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications