Home
News

ராவண மவன்டா.. சீனாவிற்கு டாட்டா காட்டிய சுந்தர் பிச்சை... உன்னைய நம்பினா ஆபத்து.. Google செய்த பெஸ்டு சம்பவம்!

கூகுள் (Google) நிறுவனம் தனது பிரீமியம் பிக்சல் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் விதத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. நிக்கி ஆசியாவின் சமீபத்திய அறிக்கையின்படி, கூகுள் நிறுவனம் ஆனது 2026 முதல் வியட்நாமில் அதன் உயர்நிலை பிக்சல் மாடல்களை உருவாக்கி, உற்பத்தி செய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பிக்சல், பிக்சல் ப்ரோ மற்றும் பிக்சல் ஃபோல்ட் ஆகிய மாடல்கள் அடங்கும். இதுவரை, இந்த ஸ்மார்ட்போன்களின் மேம்பாடு மற்றும் உற்பத்தி இரண்டிலும் சீனா முக்கிய பங்கு வகித்துள்ளது. அனால் இனிமேல் என்ட்ரி லெவல் பிக்சல் ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்பாடு மற்றும் உற்பத்தி மட்டுமே சீனாவில் தொடர்ந்து கையாளப்படும் என்று எதிர்பார்க்கப்டுபகிறது.

சீனாவிற்கு டாட்டா.. Google செய்த பெஸ்டு சம்பவம்!

சீனாவிற்கு குட்பை.. வியட்நாமிற்கு ஹலோ: சீனாவை ஒதுக்கிய கூகுள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை - தனது நிறுவனத்திற்கான வியட்நாமின் பங்கை "சிம்பிள் ஆன" அசெம்பிளிக்கு அப்பால் விரிவுபடுத்தும். கூகுளின் புதிய தயாரிப்பு அறிமுக செயல்முறை ஆனது வியட்நாமில் தொடங்கும். புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பதில் இது மிக முக்கியமான கட்டமாகும்.

இதில் வடிவமைப்புகளை சோதித்தல், பாகங்கள் எவ்வாறு ஒன்றாக செயல்படுகின்றன என்பதை சரிபார்த்தல், உற்பத்தி வரிகளை அமைத்தல் மற்றும் பெருமளவிலான உற்பத்திக்கு ஸ்மார்ட்போனை தயாரித்தல் ஆகிய வேலைகள் / பணிகள் அடங்கும். இந்த கட்டத்திற்கு நூற்றுக்கணக்கான பொறியாளர்கள், மேம்பட்ட சோதனை உபகரணங்கள் மற்றும் சப்ளையர்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பு தேவை.

பல ஆண்டுகளாக, பிக்சல் ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதற்கும் தயாரிப்பதற்கும் சீனா முக்கிய இடமாக இருந்து வருகிறது. உலகின் மிகவும் மேம்பட்ட ஸ்மார்ட்போன் விநியோக சங்கிலியை சீனா கொண்டுள்ளது, அனுபவம் வாய்ந்த தொழிற்சாலைகள் மற்றும் சப்ளையர்கள் சிக்கலான தயாரிப்புகளை அடிப்படையிலிருந்து கையாள முடியும்.

சமீபத்தில், கூகுள் சில பிக்சல் அசெம்பிளி பணிகளை வியட்நாமிற்கு மாற்றியது, ஆனால் மேம்பாடு மற்றும் ஆரம்ப கட்ட உற்பத்தி சீனாவிலேயே இருந்தது. ஆனால் 2026 ஆம் ஆண்டில் கூகுளின் புதிய திட்டத்தின் மூலம், பிரீமியம் பிக்சல் மாடல்களை புதிதாக உருவாக்குவதற்கான முழுப் பொறுப்பையும் வியட்நாம் ஏற்கும்.

2026 ஆம் ஆண்டில் கூகுள் இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான காரணம்: வியட்நாமின் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பில் வளர்ந்து வரும் நம்பிக்கையை இந்த முடிவு பிரதிபலிக்கிறது. கூகுள் ஏற்கனவே வியட்நாமில் சில உயர்நிலை பிக்சல் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்கிறது மற்றும் அங்கு சோதனை மற்றும் சரிபார்ப்பை மேற்கொள்கிறது.

இது முழு மேம்பாட்டு செயல்முறையையும் நாட்டிற்கு நகர்த்துவதை சாத்தியமாக்குகிறது. மற்றொரு காரணம் விநியோக சங்கிலி அபாயத்தைக் குறைக்க வேண்டிய அவசியம் கூகுளுக்கு உள்ளது. வர்த்தக பதட்டங்கள், கொள்கை மாற்றங்கள் அல்லது இடையூறுகள் காரணமாக ஒரு நாட்டை அதிகமாக நம்பியிருப்பது எப்போதும் ஆபத்தானது. வெவ்வேறு நாடுகளில் உற்பத்தியைப் பரப்புவதன் மூலம், கூகுள் அதன் விநியோக சங்கிலியை மேலும் நிலையானதாகவும் நெகிழ்வானதாகவும் மாற்ற முடியும்.

புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கம்: இந்த மாற்றம் கூகுளை தாண்டி பரந்த விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. சீனாவை பொறுத்தவரை, உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அதன் உற்பத்தி அமைப்பை சார்ந்திருப்பதை மெதுவாகக் குறைத்து வருவதை இது காட்டுகிறது. வியட்நாமை பொறுத்தவரை, இது ஒரு பெரிய வெற்றி!

உயர்நிலை ஸ்மார்ட்போன் மேம்பாடு முதலீடு, திறமையான வேலைகள் மற்றும் வலுவான சப்ளையர் நெட்வொர்க்குகளை கொண்டுவருகிறது, இது நாடு தொழில்நுட்ப மதிப்பு சங்கிலியை உயர்த்த உதவுகிறது. உலகளாவிய கண்ணோட்டத்தில், இந்த நடவடிக்கை, தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆசியா முழுவதும் விநியோகச் சங்கிலிகளை மறுவடிவமைக்கும் ஒரு பெரிய போக்கிற்கு பொருந்துகிறது!

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Reportedly Exit China and Moves to Vietnam Premium Pixel Phone Production in 2026 Why
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X