Home
News

ஃபார் மை பாய் Google Gemini.. கேப்புல கிடா வெட்டிய சுந்தர் பிச்சை.. Android யூசர்களுக்கு அடிச்ச அதிர்ஷ்டம்!

கூகுள் நிறுவனம், பார்ட் (Bard) என்கிற தனது ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் சாட்பாட்டை ஜெமினி (Gemini) என்று பெயர்மாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் அசிஸ்டண்ட்டை பயன்படுத்துவதை போலவே ஜெமினியை தங்களுடைய டீஃபால்ட் அசிஸ்டென்ட் ஆக தேர்வுசெய்ய முடியும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.

அதாவது சைட் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் அல்லது ஓகே கூகுள் (Okay Google) என்று கூறுவதன் மூலம் ஜெமினியை, ஏஐ அசிஸ்டென்ட் ஆக கொண்டு வர முடியும். இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களின் ஸ்க்ரீன்களில் மேலோட்டமாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Gemini ஆக மாறிய Bard.. இனிமேல் புது Google அசிஸ்டென்ட்!

அதாவது பயனர்கள் தற்போது போனில் என்ன செய்கிறார்கள், என்னென்ன ஆப்ஸ் இயங்குகிறது அல்லது அவர்கள் என்னென்ன கட்டுரைகளை படிக்கிறார்கள் என்பதை கூகுள் ஜெமினியால் "கண்காணிக்க" முடியும் மற்றும் "பார்க்க" முடியும். ஆக நீங்கள் படிக்கும் கட்டுரையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால்.. உடனே ஜெமினியை அணுகலாம்.

அதுமட்டுமல்ல, உங்கள் வீட்டில் உள்ள ஒரு செடியை புகைப்படம் எடுத்து, அது என்ன வகையான செடி, அதை எவ்வாறு பராமரிப்பது என்று கூட கூகுள் ஜெமினியிடம் கேட்கலாம். பராமரிப்பு மற்றும் உணவு; நீர்ப்பாசன அட்டவணை; சிறந்த வெளிச்சத்திற்கு செடியை எங்கு வைக்க வேண்டும்; அது செழித்து வளர தேவையான உரங்கள் பற்றிய விவரங்களை ஜெமினி உங்களுக்கு வழங்கும்.

Gemini ஆக மாறிய Bard.. இனிமேல் புது Google அசிஸ்டென்ட்!

ஐஓஎஸ் பயனர்களை பொறுத்தவரை, ஜெமினி ஏஐ ஆனது வரும் வாரங்களில் கூகுள் ஆப்பிற்கு வரும். ஆனால் இது எல்லாமே தற்போது வரையிலாக அமெரிக்காவில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு எப்போது வரும் என்கிற விவரங்களை கூகுள் இன்னும் பகிரவில்லை.

கூகுள் ஒன் ஏஐ பிரீமியம் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜெமினி அட்வான்ஸ்டு (Gemini Advanced) ஆனது ஒரு மாதத்திற்கு 19.99 அமெரிக்க டாலர்களுக்கு அணுக கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நினைவூட்டும் வண்ணம் கூகுளின் மிகவும் சக்திவாய்ந்த லார்ஜ் லேங்குவேஜ் மாடலான ஜெமினியால் உரையாடல்களை நடத்த முடியும், அட்வான்ஸ்டு டெக்ஸ்ட்களை உருவாக்க முடியும், கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும் மற்றும் கம்யூட்டர் கோட்-ஐ உருவாக்க முடியும்.

Gemini ஆக மாறிய Bard.. இனிமேல் புது Google அசிஸ்டென்ட்!

சுவாரசியமாக கூகுள் ஜெமினியானது மூன்று வெர்ஷன்களில் வருகிறது: அல்ட்ரா (Ultra), ப்ரோ (Pro) மற்றும் நானோ (Nano). இந்த மூன்று வெர்ஷன்களுமே ஒன்றுக்கு ஒன்று (செய்யும் வேலைகளை பொறுத்து) வேறுபடுகின்றன. ஜெமினி அல்ட்ராவானது சிக்கலான பணிகளை கையாளும் திறன் கொண்டது; ஜெமினி ப்ரோவானது பல்வேறு வகையான வித்தியாசமான பணிகளை செய்யும் திறன் கொண்டது; ஜெமினி நானோவானது பயனர்களின் டிவைஸ்க்கான பணிகளை செய்ய வல்லது.

கூகுள் ஜெமினியின் சிறப்பம்சங்களை பொறுத்தவரை இதனால் டெக்ஸ்ட் (Text), கோட் (Code), ஆடியோ (Audio), இமேஜஸ் (Images), வீடியோஸ் (Videos) என எல்லா வகையான விஷயங்களையும் புரிந்து கொள்ள முடியும். புகைப்படங்கள் மற்றும் ஆடியோக்களை மட்டுமல்ல ஜெமினியால் சிக்கலான கணிதங்களை கூட தீர்க்க முடியும்.

ஜெமினிக்கு உலக அறிவு மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன் ஆகிய இரண்டுமே உள்ளது என்று கூகுள் கூறுகிறது. மேலும் ஜெமினியால் கோடிங் (Coding) எழுதவும் முடியும்.கூகுளின் கூற்றுப்படி இதனால் பைதான் (Python), ஜாவா (Java), சி++ (Java, C++) மற்றும் கோ (Go) போன்ற லேங்குவேஜ்களை புரிந்துகொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Renamed Its AI Chatbot Bard to Gemini What Android Users Can Do Now After This Change
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X