Google ப்ளே ஸ்டோரில் 2000 loan ஆப்ஸ்கள் நீக்கம்- "சாரு பாக்கி இருக்கு, மொத்தம் கொடு" இனி ஓவர் ஓவர்..

|

கடன் வாங்குபவர்களை துன்புறுத்தலில் இருந்து காப்பாற்றுவதற்கு என கட்டுப்பாடற்ற முறையில் கடன் வழங்கும் நடவடிக்கைகளை தடை செய்வதற்கான கட்டமைப்பை இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது. அதன்படி கூகுள், இந்தியாவில் கடன் வழங்கும் பயன்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறது.

2000 தனிநபர் கடன் பயன்பாடுகள் நீக்கம்

2000 தனிநபர் கடன் பயன்பாடுகள் நீக்கம்

அதன்படி கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து சுமார் 2000 தனிநபர் கடன் பயன்பாடுகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பயன்பாடுகள் அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ப்ளே ஸ்டோரில் ஆப்ஸ்கள் பதிவேற்றம் செய்யப்படும் போதில் இருந்தே அதை மதிப்பாய்வு செய்து வருவதாக கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வரும் நடவடிக்கை

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் உள்ள தனது ப்ளே ஸ்டோரில் இருந்து சுமார் 2000 personal loan appsகளை அகற்றியுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பயன்பாடுகள் அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பயனர்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்

இந்திய பயனர்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்

கூகுள் ஆசியா-பசிபிக் அறக்கட்டளை மற்றும் பாதுகாப்புத் தலைவரும், மூத்த தலைவருமான சைகத் மித்ரா., ப்ளே ஸ்டோரின் புதிய வழிகாட்டுதல்கள் குறித்து பேசினார்.

அதில், உள்ளூர் ஆராய்ச்சி மற்றும் எங்கள் பங்குதாரர்களின் ஆதரவுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தனிநபர் கடன் பயன்பாடுகளுக்கு என Google Play Store கொள்கைகளை நாங்கள் புதுப்பித்து வருகிறோம்.

இந்த ஆப்ஸ்கள் இந்திய பயனர்களுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

எனவே சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகே அவற்றை அகற்ற நிறுவனம் முடிவு செய்தது என அவர் குறிப்பிட்டார்.

ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை

ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை

கூகுள் ப்ளே ஸ்டோரில் அப்லோட் செய்யும் போது ஆப்ஸ்களை மதிப்பாய்வு செய்வதாகவும், ஆனால் லோன் ஆப்ஸ் விஷயத்தில் இணைய உலகிற்கு வெளியே தான் நிறைய குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன எனவும் சைகத் மித்ரா குறிப்பிட்டார்.

சான்றளிக்கப்பட்ட ஆப்ஸ்கள் எதுவும் இல்லை

சான்றளிக்கப்பட்ட ஆப்ஸ்கள் எதுவும் இல்லை

இந்திய ரிசர்வ் வங்கி முறைப்படுத்தப்படாத கடன் வழங்கும் செயல்பாடுகளை தடை செய்வதற்கான சட்டத்தை பரிந்துரைத்ததில் இருந்து, கூகுள் கட்டுப்பாடற்ற கடன் வழங்கும் பயன்பாடுகளை கண்டறிந்து வருகிறது. இந்தியாவில் தற்போதுவரை அரசு சான்றளிக்கப்பட்ட ஆப்ஸ்கள் எதுவும் இல்லை எனவும் சைகத் மித்ரா தெரிவித்தார்.

சில வினாடிகளில் கடன்

சில வினாடிகளில் கடன்

சமீப காலமாகவே கேள்விப்பட்டு வருகிறோம், மொபைல் ஆப் மூலமாக கடன் வாங்கி துயரத்துக்கு உள்ளானவர்களின் சிரமக் கதைகளை.

மொபைல் மூலமாக ஒரு personal loan appஐ இன்ஸ்டால் செய்து, அதன்மூலம் எளிய வழிமுறைகளில் சில வினாடிகளில் கடனை பெற்றுவிடலாம்.

ஆனால் அதை திரும்ப செலுத்துவதற்குள் படாதபாடு பட வேண்டியது இருக்கும்.

வாங்கிய கடனை திரும்ப செலுத்துவது தானே முறை, இதில் என்ன சிரமம் என்ற கேள்வி வரலாம்.

டிஜிட்டல் ஆயுதம்

டிஜிட்டல் ஆயுதம்

ஆன்லைன் ஆப்ஸ்கள் மூலம் கடன் வாங்கி சிரமத்துக்குள்ளானவர்கள் குறித்து பல செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

குறிப்பிட்ட தினத்துக்குள் வாங்கிய கடனை கட்ட வேண்டும், அப்படி செலுத்தாத பட்சத்தில் அபராதம், நாள் வட்டி போட்டு என பல முறையில் சட்டத்துக்கு புரம்பாக கடனை திரும்பக் கேட்பார்கள்.

சில ஆப்ஸ்களுக்கு பணத்தை செலுத்தினாலும் எங்களுக்கு பணம் வரவில்லை மீண்டும் செலுத்தும்படி வற்புறுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது.

அப்படி எல்லாம் தர முடியாது, வாங்கிய கடனும் முறையான வட்டியும் தான் செலுத்துவேன் என்றால். உடனே வீட்டு வாசலில் வந்து நிற்கமாட்டார்கள். டிஜிட்டல் ஆயுதத்தை கையில் எடுப்பார்கள்.

அதிக பணத்தை செலுத்தியவர்கள் ஏராளம்

அதிக பணத்தை செலுத்தியவர்கள் ஏராளம்

நீங்கள் மொபைல் ஆப்ஸ்களில் லோன் பெறும் போது சிலவற்றுக்கு Access கேட்கும் அதை உடனே Accept செய்துவிடுவீர்கள்.

நீங்கள் கடனை செலுத்தவில்லை என்றால் உங்கள் வாட்ஸ்அப் தளத்தில் இருக்கும் பிறரின் மொபைல் எண்ணை எடுத்து, உங்களை தவறாக சித்தரித்து அவர்களுக்கு மெசேஜ் அனுப்புவேன் என மிரட்டுவார்கள். உங்கள் தொடர்பில் உள்ளவர்களுக்கு போன் செய்துவிடுவேன் என்றும் மிரட்டுவார்கள்.

காவல்துறைக்கு செல்ல அச்சப்பட்டு உடனே அதிக பணத்தை செலுத்தியவர்கள் ஏராளம். இதுபோன்ற பல துயர சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

காவல்துறையை அணுகுவது தான் சரியான முடிவு

காவல்துறையை அணுகுவது தான் சரியான முடிவு

பெரும்பாலும் கடன் செயலிகள் சீனாவில் இருக்கும் சர்வர்கள் மூலமாக தான் இயக்கப்படுகிறது என சில தகவல்கள் வெளியாகின. ஆனால் மோசடி செய்பவர்கள் இந்தியாவில் இருந்துதான் செயல்படுகிறார்கள் என கூறப்படுகிறது.

இதுபோன்ற இன்னல்களை சந்திக்க நேர்ந்தால் உடனே நீங்கள் சைபர் கிரைம் காவல்துறை அணுகுவது என்பதே சரியான முடிவு என்பதை நினைவில் கொள்க.

Best Mobiles in India

English summary
Google Removes 2000 personal loan apps in india from Play Store

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X