Google சுந்தர் பிச்சை அதிரடி! கொரோனா தொடர்பான தவறான வீடியோகளுக்கு இதான் நிலை!
கொரோனா வைரஸை பற்றிய தகவல்களை மக்கள் வலைத்தளங்களில் தேடித் தேடி படித்து வருகின்றனர். வலைத்தளத்தில் உள்ள பதிவுகளில் ஏராளமான போலி தகவல் கொண்ட தகவல்களும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த போலியான, ஆபத்தான மற்றும் தவறான தகவல்களை வலியுறுத்தும் பதிவுகளை AI உதவியுடன் கூகிள் நீக்கம் செய்து வரவருகிறது.

கூகிளுடன் சுந்தர் பிச்சை அதிரடி
கூகிள் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வலைத்தளத்தில் உள்ள ஆபத்தான, போலியான மற்றும் தவறான தகவல்கள் கொண்டு மக்களைத் தவறாக வழிநடத்தும் கொரோனா வைரஸ் தொடர்பான பதிவுகளை அடையாளம் கண்டு நீக்கம் செய்து வருவதாக ஆல்பாபெட் மற்றும் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான வீடியோக்கள்
இதுவரை கொரோனா வைரஸ் தொடர்பான ஆயிரக்கணக்கான வீடியோக்களை வலைத்தளத்திலிருந்து கூகிள் நீக்கம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல், கொரோனா வைரஸ் தொற்று நோயைப் தொடர்பான நூற்றாயிரக்கணக்கான போலி விளம்பரங்களைக் கூகிள் தடுத்துள்ளது என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகிள் விதித்த தற்காலிக தடை
அதேபோல், கடந்த வாரம் மருத்துவ பொருட்கள், முகமூடிகள் மற்றும் சுவாசக் கருவிகளுக்கான அனைத்து விதமான விளம்பரங்களுக்கும் கூகிள் தற்காலிக தடையை விதித்துள்ளது. அதனைத்தொடர்ந்து, கொரோனா வைரஸைத் தடுக்க மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படாத முறைகளை ஊக்குவிக்கும் வீடியோக்களை கூகிள் வலைத்தளங்களில் தொடர்ந்து தேடிப் பிடித்து, தடுத்து, நீக்கம் செய்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகிள் உருவாக்கி வரும் புதிய COVID-19 தடுப்பு வலைத்தளம்
இதற்கிடையில் கூகிளின் துணை நிறுவனமான வெர்லி நிறுவனத்துடன் இணைந்து, சோதனை வசதிகளுடன் மக்களை வழிநடத்தும் பாதுகாப்பான வலைத்தளத்தைக் கூகிள் உருவாக்கி வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. COVID-19 தடுப்பு தொடர்பான ஒரு அர்ப்பணிக்கப்பட்ட வலைத்தளத்தை உருவாக்குவதில் நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அறிவித்த அலுவலகம் எப்போ ரெடி ஆகும்?
அதேபோல், கொரோனா வைரஸ் கண்காணிப்பு மற்றும் திரையிடல் வலைத்தளம் அமைக்க 1,700 பொறியியலாளர்களுடன் நிறுவனம் கட்டுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த அலுவலகமும் இந்த வார இறுதியில் முடிவடையும் என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

கூகிள் தொண்டு நிறுவனம் செய்து வரும் உதவி
கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான Google.org என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் உலகளாவிய COVID-19 முகாமிற்கும் சுமார் 50 மில்லியன் டாலர்கள் வரை கூகிள் செலவிட்டு வருகிறது என்றும் கூகிள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

மக்கள் அஞ்ச வேண்டாம்
போலி செய்திகள் மற்றும் போலி தகவல்களைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம் என்றும் குறிப்பாக அனைத்தையும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கொரோனா தொடர்பான அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனே போனில் கொரோனா அவசர உதவிமருத்துவரை அழைத்து தெரியப்படுத்துங்கள். ஏதேனும் அறிகுறிகள் இருந்தால்வெளியில் செல்வதை முற்றிலுமாக தடுத்துவிடுங்கள்.


Click it and Unblock the Notifications