Google வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்!

|

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில், ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்வதற்கு முன் உங்கள் கேலரி, எஸ்.எம்.எஸ் மற்றும் கால்ஸ் போன்ற சேவைகளின் தரவை அணுக, அந்த பயன்பாடுகள் அனுமதியை கேட்கும். இது பாதுகாப்பானது இல்லை என்று கருதப்பட்டது. இதை உணர்ந்த கூகிள் உங்கள் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் தரவைக் கேட்கும் பயன்பாடுகளின் எண்ணிக்கையைப் பெருமளவு குறைத்தது.

98 சதவீதம் குறைந்ததாக கூகுள் அறிவிப்பு

98 சதவீதம் குறைந்ததாக கூகுள் அறிவிப்பு

கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போனின் தரவை பாதுகாக்க மற்றும் தேவையற்ற அணுகலை தடைசெய்ய 2018ம் ஆண்டு கொள்கை ஒன்றைச் செயல்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டில் அழைப்பு பதிவு மற்றும் எஸ்எம்எஸ் தரவை அணுகும் பிளே ஸ்டோர் பயன்பாடுகளின் எண்ணிக்கை 98 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூகுள் அறிவித்தது.

மோசமான மற்றும் தீங்கிழைக்கும் பயன்பாடுகள்

மோசமான மற்றும் தீங்கிழைக்கும் பயன்பாடுகள்

கூகுள், சுமார் 790,000 க்கும் மேற்பட்ட கொள்கை மீறும் மோசமான மற்றும் தீங்கிழைக்கும் பயன்பாடுகளைத் தனது அதிகாரப்பூர்வ இடுகையிலிருந்து நீக்கம் செய்துள்ளது. அவற்றை பிளே ஸ்டோரில் வெளியிடப்படுவதைத் தடுக்கவும் பல முயற்சிகளை மேற்கொள்வதற்கும் நடைமுறைப்படுத்தி வந்தது.

Jio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்Jio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்

மூன்று முக்கிய பாதுகாப்பு நடவடிக்கையில் முதலீடு

மூன்று முக்கிய பாதுகாப்பு நடவடிக்கையில் முதலீடு

கூகுள் இந்த ஆண்டு, மூன்று முக்கிய பாதுகாப்பு பகுதிகளில் பெருமளவில் முதலீடு செய்யும் என்று அறிவித்தது. பயனர் தனியுரிமையைப் பாதுகாக்கப் பயன்பாட்டு பாதுகாப்புக் கொள்கைகளை வலுப்படுத்துதல், மோசமான செயலிகளை விரைவாகக் கண்டறிந்து அதை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவது என்பதாகும்.

நாசவேலை செய்யும் மால்வேர்

நாசவேலை செய்யும் மால்வேர்

சர்வர்கள், கம்யூட்டர்கள், ஸ்மார்ட்போன்களை தாக்கி செயலிழக்கச் செய்யவும், தகவல்களை திருடவும் மால்வேர் எனப்படும் நாசவேலை செய்யும் சாஃப்ட்வேர்கள் உருவாக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஒன்றை சொல்லலாம், செக்கோஸ்லோவேயா நாட்டில் ஏராளமானோரின் வங்கிக் கணக்குகளில் தன்னிச்சையாக பணம் குறைந்துவந்ததை அடுத்து, அதன் பின்னணியில் ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரின் கைவரிசை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்

இதுபோன்ற செயலிகளான லேசர் பிரேக் (Laser Break), பைல் மேனேஜர் (File Manager), வேர்ல்ட் ஜூ (world zoo), வேர்ட் க்ரஷ் (Word Crush),ம்யூசிக் ரோம் (Music Roam), பைல் மேனேஜர் (File Manager), சவுண்ட் ரெகார்டர் (Sound Recorder), ஜாய் லாஞ்சர் (Joy Launcher), டர்போ ப்ரவுஸர் (Turbo Browser), வெதர் போர்காஸ்ட் (Weather Forecast), கேலண்டர் லைட் (Calendar Lite), கேண்டி செல்பீ கேமரா (Candy Selfie Camera), பிரைவேட் ப்ரவுஸர் (Private Browser), சூப்பர் கிளீனர் (Super Cleaner), சூப்பர் பேட்டரி (Super Battery) உள்ளிட்ட செயலிகளை கண்டறிந்து நீக்கியது.

அன் இன்ஸ்டால் செய்ய அறிவுறுத்தல்

அன் இன்ஸ்டால் செய்ய அறிவுறுத்தல்

வைரஸ் கிளீனர் 2019 (Virus Cleaner 2019), ஹை செக்யூரிட்டி (Hi Security 2019), ஹை விபிஎன், ப்ரீ விபிஎன் (Hi VPN, Free VPN), ஹை விபிஎன் ப்ரோ (Hi VPN Pro), நெட் மாஸ்டர் (Net Master),கேண்டி கேலரி (Candy Gallery) இந்த ஆப்ஸ்கள் தங்களின் மொபைலில் இருந்தால் அதை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்யும்படியும் அறிவுறுத்தியது.

அடுத்த இடி., மார்ச் 1 முதல் அந்த வங்கி ஏடிஎம்களில் ரூ.2000 போடவும் முடியாது., எடுக்கவும் முடியாது!

மோசமான செயலிகளை எதிர்த்து நடவடிக்கை

மோசமான செயலிகளை எதிர்த்து நடவடிக்கை

இந்த நிலையில் தவறான மற்றும் மோசடி செய்யக்கூடிய ஆண்ட்ராய்ட் செயலிகளின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய தொழில்நுட்பத்தை கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது.

600 செயலிகளை நீக்கிய கூகுள்

600 செயலிகளை நீக்கிய கூகுள்

இந்த புதிதாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் 600 செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனங்கள் தங்களின் விளம்பரங்களை பணமாக்கும் முயற்சிக்கு விதிகளை மீறும் சிலவற்றுக்கு தடை விதித்துள்ளது. விளம்பரங்களை பணமாக்கும் முயற்சியில் கூகுள் பயன்பாடுகளை சீர்குலைக்கும் விதமாகவும் விளம்பரக் கொள்கையை மீறும் விதமாகவும் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரங்களை பணமாக்க பல்வேறு நடவடிக்கைகள்

விளம்பரங்களை பணமாக்க பல்வேறு நடவடிக்கைகள்

இந்த நடவடிக்கைக்கு பிறகு செயலி தயாரிப்பாளர்கள் ப்ளே ஸ்டோருக்கு மாற்று வழியை பயன்படுத்திக் கூட விளம்பரங்களை பணமாக்க முடியாது எனவும் விளம்பர மோசடி என்பது பல்வேறு வடிவங்களில் தோன்றக்கூடிய சவால் என்றும் இது பயனர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் வெளியீட்டாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆற்றலை கொண்டது எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.

விளம்பர மோசடியை எதிர்த்து அதிரடி

விளம்பர மோசடியை எதிர்த்து அதிரடி

விளம்பர மோசடி விவகாரத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, செயலிகளில் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட விளம்பரங்களைக் காண்பிக்கும் போது அதுகுறித்து கண்டறிய ஒரு புது வகை இயந்திர கற்றல் அடிப்படையிலான அணுகுமுறையை நிறுவனம் உருவாக்கியுள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரி தெரிவிக்கிறார்.

அடுத்து நீங்கதான்: டிவி, ஏசி, பிரிட்ஜையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்: விளைவை எதிர்நோக்கி இந்தியா!அடுத்து நீங்கதான்: டிவி, ஏசி, பிரிட்ஜையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்: விளைவை எதிர்நோக்கி இந்தியா!

சீனா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்தே அதிகம்

சீனா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்தே அதிகம்

தடைசெய்யப்பட்ட பயன்பாடுகளில் பெரும்பாலானவை சீனா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு தற்போதுமட்டும் சுமார் 600 செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நமது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மொபைலில் இருக்கும் கூடுதல் செயலிகளை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளதா என்பதை செக் செய்துவிட்டு டவுன்லோட் செய்யலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google removed 600 android apps from google play store: Alert Android users

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X