ஜன.1 க்கு அப்புறம் Google Maps-ல் இது கிடைக்காதா? சுந்தர் பிச்சை சார்.. என்ன இப்படி பண்ணிடீங்க?
2024-ல் கூகுள் மேப்ஸில் (Google Maps) இருக்கும் பிரபலமான அம்சம் ஒன்று நீக்கப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதென்ன அம்சம்? அது ஜன.1 ஆம் தேதியே நீக்கப்படுமா? அல்லது சிறிது நாட்கள் கழித்து நீக்கப்படுமா? கூகுளின் இந்த முடிவுக்கு என்ன காரணம்? இதோ விவரங்கள்:
அதென்ன அம்சம்? கூகுள் நிறுவனம் அதன் கூகுள் மேப்ஸ்-இல் உள்ள டிரைவிங் மோட் (Driving Mode) அம்சத்தை தான் நீக்கவுள்ளது. ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன்களில் உள்ள கூகுள் மேப்ஸ் ஆப்பில் கிடைக்கும் இந்த அம்சம், மற்ற ஆப்களால் திசைதிருப்பப்படாமல் வாகனம் ஓட்டுவதில் மட்டுமே பயனர்கள் கவனம் செலுத்த உதவியது.

ஜன.1 ஆம் தேதியே நீக்கப்படுமா? 9டூ5கூகுள் (9To5Google) வழியாக வெளியான சமீபத்திய அறிக்கையின்படி, கூகுள் மேப்ஸ் ஆப்பின் 14.52 வெர்ஷனில் (Google Maps Version 14.52) உள்ள கோட் ஸ்ட்ரிங்கஸ் (Code Strings) ஆனது, டிரைவிங் மோட் அம்சமானது 2024 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத வாக்கில் கூகுள் மேப்ஸில் இருந்து அகற்றப்படும் என்று தெரிவிக்கிறது.
கூகுளின் இந்த முடிவுக்கு என்ன காரணம்? இந்த அம்சத்தை அகற்றுவதற்கான சரியான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றாலும் கூட, டிரைவிங் மோட்-ஐ நம்புவதற்கு பதிலாக மக்கள் தங்களது கூகுள் அசிஸ்டண்ட்டை (Google Assitant) பயன்படுத்த வேண்டும் என்று கூகுள் விரும்புவதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஏஐ பெயரை சொல்லி கூகுள் பணியார்களுக்கு ஆப்பு! கூகுள் நிறுவனம் அதன் ஏஐ மாடலை (AI Model) மேம்படுத்துவதில் தீவிரமாக வேலை செய்து வரும் மறுகையில், அதே ஏஐ பெயரை சொல்லி பல எண்ணிக்கையிலான கூகுள் பணியார்களின் வேலைகளையும் பறிக்க திட்டமிட்டு உள்ளது.
சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, கூகுள் நிறுவனம் தனது வணிக செயல்முறைகளின் (Business Processes) பல்வேறு அம்சங்களில் ஏஐ திறனை ஒருங்கிணைக்க உள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதிகபட்சம் 30,000 கூகுள் பணியாளர்களை வேலையை விட்டு நீக்க (30,000 Layoffs) திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் கூகுளின் விளம்பர விற்பனை துறையை (Google Ad Sales Department) கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த துறையில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸின் (Artificial Intelligence) நுழைவு மனித தலையீட்டின் தேவையை பெரிய அளவில் குறைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். குறிப்பாக கஸ்டமர் கேர் சேவைகள் உடனான ஏஐ ஒருங்கிணைப்பானது, பலருடைய வேலைகளை காலி செய்யும். இந்த மாற்றம் கடந்த ஆண்டுகளில் கூகுள் செய்த ஆட்குறைப்பு நடவடிக்கைகளுடன் ஒற்றுப்போகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நினைவூட்டும் வண்ணம் கடந்த 2024 டிசம்பர் மாத தொடக்கத்தில் தான், கூகுள் நிறுவனம் ஜெமினி (Gemini) என்று அழைக்கப்படும் அதன் சூப்பர் ஸ்மார்ட் ஏஐ மாடலை (Super Smart AI Model) அறிமுகம் செய்தது. இது அல்ட்ரா (Ultra), ப்ரோ (Pro) மற்றும் நானோ (Nano) என்கிற 3 வெவ்வேறு வெர்ஷன்களில் வருகிறது:
கூகுள் ஜெமியினின் 3 வெர்ஷன்களுமே குறிப்பிட்ட விஷயங்களை திறமையாக செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது அல்ட்ரா வெர்ஷன் - சிக்கலான பணிகளை கையாளும் திறன் கொண்டது; ப்ரோ வெர்ஷன் - பல்வேறு வகையான வித்தியாசமான பணிகளை செய்யும் திறன் கொண்டது; நானோ வெர்ஷன் - டிவைஸ்க்கான பணிகளை செய்யும்.
கூகுள் ஜெமினியில் கவனிக்க வேண்டிய சிறப்பம்சங்கள்: இது டெக்ஸ்ட் (Text), கோட் (Code), ஆடியோ (Audio), இமேஜஸ் (Images), வீடியோஸ் (Videos) என எல்லா வகையான விஷயங்களையும் புரிந்து கொள்ளும் திறனை பெற்றுள்ளது. இந்த காரணத்திற்காக தான் கூகுள் நிறுவனம் அதன் ஜெமினி ஏஐ-ஐ "மல்டி மாடல்" (Multi Model) என்று அழைக்கிறது.


Click it and Unblock the Notifications








