ஐபோனிற்காக புதிய யூடியூப் அப்ளிக்கேஷனை வழங்கும் கூகுள்!

Posted By: Staff
ஐபோனிற்காக புதிய யூடியூப் அப்ளிக்கேஷனை வழங்கும் கூகுள்!

புதிய யூடியூப் அப்ளிக்கேஷனை ஆப்பிள் ஐபோனிற்காக அறிமுகம் செய்வதாக கூகுள் தனது ப்ளாகில் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறது.

ஐபோனிற்காக பிரத்தியேகமாக இந்த புதிய யூடியூப் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐபோனில் கூடுதலாக ஆயிரக்கணக்கான வீடியோக்களை பார்க்கலாம். இது மட்டும் அல்லாமல் இன்னும் நிறைய வசதிகள் ஐபோனிற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட யூடியூப் அப்ளிக்கேஷனில் பெறலாம்.

சமீபமாகத்தான் யூடியூப் அப்ளிக்கேஷனை ஆப்பிள் ஐபோனிலிருந்து அகற்றப்படுவதாக தகவல்கள் வெளியானது.

புதிய ஐஓஎஸ்-6 இயங்குதளத்தினை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த இயங்குதளத்திற்காக வழங்கப்பட்ட டெஸ்டிங் வெர்ஷனில் யூடியூப் அப்ளிக்கேஷன் இல்லை.

புதிய ஐபோன் மற்றும் ஐபேட் எலக்ட்ரானிக் சாதனங்களில் யூடியூப் அப்ளிக்கேஷன் அகற்றபட்டுவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. யூடியூப் அப்ளிக்கேஷன், ஐஓஎஸ்-6 டெஸ்டிங் வெர்ஷனில் அகற்றப்பட்டதை தொடர்ந்து பெரும் பரபரப்பும் நிலவியது.

அது மட்டும் அல்லாமல் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் இடையில் சில உரசல்கள் இருப்பதனால் தான் யூடியூபின் வீடியோ அப்ளிக்கேஷன், ஐபோனில் அகற்றப்படவுள்ளதாகவும் நிறைய செய்திகள் வெளியாகி வந்தன.

இதற்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் வகையில், கூகுள் தனது ப்லாகில் ஐபோனிற்காக புதிய அப்ளிக்கேஷன் அறிமுகம் செய்வதாகவும் கூறியுள்ளது. இந்த புதிய யூடியூப் அப்ளிக்கேஷனை ஆப்பிள் ஸ்டோரில் இருந்து எளிதாக டவுன்லோட் செய்யலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot