அலெர்ட்.. யாரும் இனிமேல் தெரியாம கூட 'பக்' வைக்க முடியாது.. கூகுள் வெளியிட்ட புது அலெர்ட் அம்சம்..
கூகுள் நிறுவனம் (Google) அதன் கூகுள் ஐ/ஓ 2023 (Google I/O 2023) நிகழ்வில் புதிதாக ஒரு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இது அன்நோன் ட்ராக்கர் அலெர்ட் (Unknown Tracker Alert) என்று அழைக்கப்படுகிறது.
உங்கள் அனுமதியின்றி உங்களை மறைமுகமாக கண்காணிக்கும் டிராக்கர் பற்றி இந்த அம்சம் எச்சரிக்கிறது. புளூடூத்-இயக்கப்பட்ட ஆப்ஜெக்ட் டிராக்கர்கள் இப்போது மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது பல நேரங்களில் மற்றும் சூழ்நிலைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

காரணம், இவை தொலைந்து போன அல்லது தவறவிட்ட பொருட்களின் இடத்தை மிகவும் துல்லியமாகவும், எளிதாகவும் கண்காணிக்க உதவுகின்றன. இருப்பினும், மற்ற தொழில்நுட்பங்களைப் போலவே, சிலர் இந்த தொழில்நுட்பத்தை தீங்கிழைக்கும் நோக்கத்திற்காக தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதனால், அதிலிருந்து மக்களை பாதுகாக்க இந்த அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கடந்த காலங்களில் இந்த டிராக்கர்கள் யாரையாவது பின்தொடர்வதற்கு அல்லது திருட்டு நோக்கங்களுக்காக வாகனத்தின் இருப்பிடத்தைக் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்பட்ட வழக்குகள் என்று பல வினோதமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவே Googe I/O 2023 இல், அன்நோன் ட்ராக்கர் அலெர்ட் அம்சத்தையும், அப்டேட் செய்யப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் (Find My Device) நெட்வொர்க் அம்சத்தையும் கூகுள் அறிவித்தது.
இதில் நல்ல விஷயம் என்னவென்றால், முதல் அம்சம் அனைவருக்கும் உள்ளது. ஆனால் இரண்டாவது அம்சம் தற்போதைக்கு பீட்டா வெர்ஷனில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்ட்ராய்டு (Android) அம்சம், பயனர்களை பின்தொடரும் அறியப்படாத டிராக்கர் விபரங்களை பற்றி எச்சரிக்கிறது.
கூகுள் இறுதியாக ஆண்ட்ராய்டில் அன்நோன் ட்ராக்கர் அலெர்ட் அம்சத்தை வெளியிட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோவில் இயங்கும் சாதனம் முதல் புதிய ஆண்ட்ராய்டு 13 வெர்ஷனில் இயங்கும் அணைத்து போன்களிலும் செயல்படும். அன்நோன் புளூடூத் டிராக்கரை அதன் உரிமையாளரிடமிருந்து பிரித்து, அவர்களுடன் பயணிக்கத் தீர்மானிக்கப்படும் இணக்கமான Android மொபைலில் நோட்டிபிகேஷன் அலெர்ட் மெசேஜ்ஜை இது தெரிவிக்கும்.

உங்களுக்கே தெரியாத ஒரு டிராக்கர் அல்லது அன்நோன் டிராக்கர் எவையேனும் உங்களைப் பின்தொடரத் தொடங்கினால், அதன் இடத்தை மேப் இல் இந்த அம்சம் சுட்டிக்காட்டுகிறது. விழிப்பூட்டல் பயனர்களுக்கு அதன் உரிமையாளருக்குத் தெரிவிக்காமல் அதைக் கண்டறிய 'ப்ளே சவுண்ட்' விருப்பத்தை வழங்கும்.
சாதனத்தின் வரிசை எண் மற்றும் ஃபோன் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் போன்ற உரிமையாளரைப் பற்றிய தகவலைப் பெற, ஒரு பயனர் தனது மொபைலின் பின்புறம் டிராக்கரைக் கொண்டு வந்தால் போதும் என்று கூகிள் கூறுகிறது. இது சில டிராக்கர்களால் ஆதரிக்கப்படும் அம்சமாகும். அதாவது, எல்லா வகையான டிராக்கருடன் இது வேலை செய்யாது.
புளூடூத் டிராக்கரை எவ்வாறு முடக்குவது என்பது பற்றிய தகவலையும் இந்த அன்நோன் ட்ராக்கர் அலெர்ட் அம்சம் உங்களுக்கு வழங்குமாம். இதன் மூலம், அது உரிமையாளருடன் பகிரும் இருப்பிட தகவல்களை நாம் நிறுத்து முடியும். புதிதாக வெளியிடப்பட்ட அம்சம் மேனுவல் ஸ்கேன் ஆதரவையும் கொண்டுள்ளது. இதை செய்ய Settings > Safety & Emergency > Unknown tracker alerts > Scan now கிளிக் செய்யவும்.
மேனுவல் ஸ்கேன் முடிவதற்கு சுமார் 10 வினாடிகள் ஆகும். இதன் மூலம் உங்களைச் சுற்றியுள்ள புளூடூத் டிராக்கர்களின் பட்டியலை அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து பிரிக்க தீர்மானிக்கப்படும். அன்நோன் ட்ராக்கர் அலெர்ட் அம்சம் தற்போது Apple AirTag ஆல் மட்டுமே ஆதரிக்கப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில் மேலும் பல டிரேக்கர்களுடன் இது சேர்க்கப்படும் என்று கூகிள் கூறுகிறது.
இருப்பினும், சந்தேகத்திற்கு இடமின்றி தேவையற்ற கண்காணிப்பைத் தவிர்க்க இது மிகவும் தேவையான அம்சமாகும். புளூடூத் டிராக்கர்கள் சிறிய சாதனங்கள் என்பதால், யாரோ ஒருவரின் பாக்கெட், பர்ஸ், வாகனம் போன்றவற்றில் எளிதாக மறைத்துவைக்கப்படலாம். அவர்கள் வசிக்கும் இடத்தை அவர்களுக்குத் தெரியாமல் கண்டுபிடிக்கலாம்.


Click it and Unblock the Notifications








