Home
News

ஆண்ட்ராய்டு 12எல் அப்டேட்: சூப்பர் அம்சங்களை அறிமுகம் செய்த கூகுள்.!

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 12எல் (12L) அப்டேட்டை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த அப்டேட் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளது கூகுள்.

ஆண்ட்ராய்டு 12எல்

கூகுள் வெளியிட்டுள்ள ஆண்ட்ராய்டு 12எல் அப்டேட்-ல் மிகவும் எதிர்பார்த்த முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு இந்த ஆண்ட்ராய்டு 12எல் அப்டேட் ஆனது பிக்சல் 3ஏ முதல் பிக்சல் 5ஏ வரையிலான ஸ்மார்ட்போன்களுக்கு முதற்கட்டமாகவழங்கப்பட்டுள்ளது. மேலும் வரும் ஏப்ரல் மாதம் முதல் பிற பிகசல் போன்களுக்கும் இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம்தெரிவித்துள்ளது.

 அப்டேட்டின் முக்கிய அம்சமாக இருப்பது

இந்த புதிய அப்டேட்டின் முக்கிய அம்சமாக இருப்பது என்னவென்றால், வாய்ஸ் அழைப்புகளுக்கு நேரடி கேப்ஷன் வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு வீடியோகளுக்கு மட்டுமே நேரடி கேப்ஷன்கள் வசதி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 தற்போது வெளியிட்டுள்ள புதி

அதாவது தற்போது வெளியிட்டுள்ள புதிய அம்சத்தின் மூலம் வாய்ஸ் அழைப்புகளில் மற்றவர்கள் என்ற பேசுகின்றனர் என்பதை நாம் திரையில்
வார்த்தைகளாக காணலாம். குறிப்பாக காது கேளாதோருக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய பேட்டரி விட்ஜெட்டும் இந்த அப்டேட்

அதேபோல் புதிய பேட்டரி விட்ஜெட்டும் இந்த அப்டேட்டில் அறிமுகம் செய்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இதன்மூலம் பேட்டரி திறன், எவ்வளவு நேரம் பேட்டரி தாக்குப்பிடிக்கும் போன்ற தகவல்கள் இந்த விட்ஜெட்டில் காட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன்களுக்கு மட்டு

இப்போது பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வெளியாகியுள்ள இந்த புதிய அப்டேட் விரைவில் மற்ற ஆண்ட்ராய்டு போன்களுக்கும் கிடைக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஏற்கனவே கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த கூகுள் பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் அம்சங்களைப் பார்ப்போம்.

பிக்சல் 6 அம்சங்கள்

பிக்சல் 6 அம்சங்கள்

பிக்சல் 6 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 1,080x2,4000 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது பிக்சல் 6 ஸ்மார்ட்போன்.

பிக்சல் 6 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்( f/1.85) என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான பிக்சல் 6 ஸ்மார்ட்போன். இந்த பிக்சல் 6 ஸ்மார்ட்போனில் 4614 எம்ஏஎச் பேட்டரி, 30 வாட் wired பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 21 வாட் wireless பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

இ, வைஃபை 6 இ,

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6 இ, ப்ளூடூத் வி 5.2, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது பிக்சல் 6 ஸ்மார்ட்போன். மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், பாரோமீட்டர், பைரோமீட்டர், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த பிக்சல் 6 ஸ்மார்ட்போன்.

பிக்சல் 6 ப்ரோ

பிக்சல் 6 ப்ரோ

பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் QHD+ LTPO OLED டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 1,440x3,120 பிக்சல் தீர்மானம்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 19:5:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்.

பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 11.1எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த பிக்சல் 6 ப்ரோ.

 எம்ஏஎ

இந்த பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5003 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 30 வாட் wired பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,23 வாட் wireless பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன். அதேபோல் 5ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6இ, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ்,என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google released the Android 12L update on pixel phones: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X