Google இல் இதை சர்ச் செய்து பாருங்கள்.. வெடித்து உங்க மொபைல் டிஸ்ப்ளே சாய்ந்துவிடும்!

|

NASA DART மிஷின் வெற்றியை Google ஒரு சிறப்பு அனிமேஷன் டூடுலுடன் கொண்டாடுகிறது. கூகுளில் NASA DART என்று சர்ச் செய்து பார்த்தால் இதற்கான பதில் உங்களுக்கு புரியும். அது என்ன நாசா டார்ட் மிஷன் என்றும், அனிமேஷன் குறித்த விவரங்களையும் பார்க்கலாம் வாங்க.

நாசாவின் டார்ட் மிஷின்..

நாசாவின் டார்ட் மிஷின்..

நாசாவின் டார்ட் மிஷினின் நோக்கம் நேற்று ஏறத்தாழ வெற்றி அடைந்துவிட்டது என்றே கூறலாம். விண்கல்லில் இருந்து பூமியை பாதுகாக்கும் முயற்சி தான் நாசாவின் டார்ட் மிஷன் ஆகும்.

இது மிகவும் பயனுள்ள திட்டம் ஆகும். இந்த திட்டம் வெற்றி அடைந்ததையடுத்து கூகுள் டூடுல் வெளியிட்டு டார்ட் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறது.

கூகுள் வெளியிட்ட அனிமேஷன்..

கூகுள் வெளியிட்ட அனிமேஷன்..

கூகுள் இல் "NASA DART" அல்லது "NASA DART mission" என்று தேடினால் அதற்கான ரிசல்ட் உடன் அனிமேஷன்களும் காட்டப்படுகிறது.

அதில் ஒரு ஸ்பேஸ் கிராஃப்ட் இடதில் இருந்து வலது புறத்தில் பறந்து மோதி வெடிக்கிறது. தொடர்ந்து உங்கள் டிஸ்ப்ளே சாய்ந்த நிலையில் காண்பீர்கள்.

இந்த தேடலின் மூலம் தோன்றப்படும் அனிமேஷன் ஆனது உங்கள் சர்ச் ஸ்க்ரீனின் கோணத்தை சாய்ந்த நிலையில் மாற்றும்.

டார்ட் மிஷின் நோக்கம்..

டார்ட் மிஷின் நோக்கம்..

NASA DART mission என்பது மிகவும் பயனுள்ள திட்டமாகும். அது என்ன டார்ட் மிஷின் என்று தோன்றலாம். விடையை பார்க்கலாம் வாங்க.

டைனோசர் என்ற உயிரினம் விண்கல் விழுந்து அளிந்தது எனவும் அந்த விண்கல் விழுந்த போது ஏற்பட்ட பாதிப்புகள் மதிப்பிட முடியாதது எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

மீண்டும் அதுபோன்ற ஒரு விண்கல் பூமி மீது மோதினால் என்ன நடக்கும் என்று எப்போதாவது சிந்தித்தது உண்டா?. இதை யோசித்த நாசா இதற்கான தீர்வு என்ன என்று சிந்தித்து இந்த டார்ட் மிஷினைத் தொடங்கியது.

பூமியை பாதுகாப்பதே டார்ட் மிஷின் நோக்கம்..

பூமியை பாதுகாப்பதே டார்ட் மிஷின் நோக்கம்..

விண்கல் விழந்து டைனோசர் என்ற ஒரு உயிரினமே அழிந்ததே, அதேபோல் விண்கல் விழுந்து மனிதர்கள் என்ற உயிரினமே அழிந்தது என்று எதிர்காலம் இருந்துவிடக் கூடாது என்று நாசா டார்ட் மிஷனைத் தொடங்கி சோதித்திருக்கிறது.

பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழையும் ஆபத்தான விண்கல்லை கண்டறிந்து அதை தகர்த்து பூமியை பாதுகாப்பதே டார்ட் மிஷினின் நோக்கமாகும்.

டார்ட் மிஷின் சோதனை..

டார்ட் மிஷின் சோதனை..

மிஷினை வெற்றிகரமாக தொடங்கி முடித்த நாசா, அதை சோதனை செய்ய திட்டமிட்டது. இதற்காக எப்போது விண்கல் பூமியை நோக்கி வரும் என்று காத்திருக்க முடியாது அல்லவா. அதேபோல் அந்த நேரத்தில் சோதனை முயற்சி எதுவும் இல்லாமல் நேரடியாக செயல்படுத்தவும் முடியாது.

இதையடுத்து நாசா பூமிக்கு அருகில் உள்ள விண்கல்லில் டார்ட் மிஷின் சோதனை செய்யப்பட்டது.

விண்கல்லை மோதிய ஸ்பேஸ் கிராஃப்ட்..

விண்கல்லை மோதிய ஸ்பேஸ் கிராஃப்ட்..

விண்வெளியில் Dimorphos மற்றும் Didymos என்ற இரண்டு விண்கல்கள் அருகருகே இருக்கிறது. இதில் டிடிமோஸ் சிறுகோளின் நிலவு போல் டீமோர்போஸ் இருக்கிறது.

இந்த இரண்டு கோள்களாலும் பூமிக்கு ஆபத்து என்று கூறிவிட முடியாது.ஆனால் பூமிக்கு அருகில் இருக்கும் இரண்டு சிறுகோள்கள் இது. இந்த சிறுகோள்கள் பூமியில் இருந்து 6.3 மில்லியன் மைல் தொலைவில் இருக்கிறது. இதில் டீமோர்போஸ் சிறுகோளை தான் நாசாவின் டார்ட் மிஷின் தாக்கி இருக்கிறது.

சரியாக மையத்தில் மோதிய ஸ்பேஸ் கிராஃப்ட்

சரியாக மையத்தில் மோதிய ஸ்பேஸ் கிராஃப்ட்

Double Asteroid Redirection Test (Dart) மிஷின் ஆனது பூமியை நோக்கி வரும் விண்கல்லை ஸ்பேஸ் கிராப்ட் மூலம் தாக்கி அதை தகர்த்துவது அல்லது அதன் பாதையை மாற்றுவது தான் நோக்கம்.

கடந்த வருடம் ஸ்பேஸ் கிராஃப்ட் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் இன் பால்கான் 9 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த ஸ்பேஸ் கிராஃப்ட் தான் விண்கல்லில் வெற்றிகரமாக மோதியது.

24,000 கிமீ வேகத்தில் மோதிய ஸ்பேஸ் கிராஃப்ட்..

24,000 கிமீ வேகத்தில் மோதிய ஸ்பேஸ் கிராஃப்ட்..

பூமியில் இருந்து 9.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் டீமோர்போஸ் விண்கல்லை நோக்கி ஸ்பேஸ் கிராஃப்ட் அனுப்பப்பட்டது. ஸ்பேஸ் கிராஃப்ட் சரியாக 24,000 கிலோமீட்டர் வேகத்தில் விண்கல்லின் மையப்பகுதியில் தாக்கியது.

சரியாக மையத்தில் தாக்கியது வெற்றியாக கருதப்பட்டாலும், வரும் காலங்களில் அந்த விண்கல்லை கண்காணித்து அதன் பாதை மாறுகிறதா என்பது நிர்ணயித்த பிறகே முழு வெற்றியாக கருதப்படும். இது எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

கூகுளின் அனிமேஷன்..

கூகுளின் அனிமேஷன்..

நாசாவின் டார்ட் மிஷன் வெற்றியை பாராட்டு விதமாக கூகுள் இதுபோன்ற செயல்முறையை சர்ச் பக்கத்தில் செயல்படுத்தியுள்ளது. NASA DART என்று சர்ச் செய்யும்பட்சத்தில் ஸ்பேஸ் கிராஃப்ட் வேகமாக பயணித்து வலது புறத்தில் தாக்கி வெடிக்கிறது. தொடர்ந்து டிஸ்ப்ளே சாய்ந்த கோணத்தில் காட்சியளிக்கிறது.

Best Mobiles in India

English summary
Google released an animation in Search Page to celebrate NASA DART mission

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X