Home
News

இரவோடு இரவாக Google பார்த்த வேலை.. QR Code ஸ்கேனரில் புதிய மாற்றங்கள்.. இனி Scan செய்யும் போது?

கூகுள் (Google) நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான க்யூஆர் கோட் ஸ்கேனரை (QR code scanner) மறுவடிவமைப்பு (Redesign) செய்துள்ளது. உடனே கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்தும் போது மட்டுமே அல்லது ஆன்லைன் வழியாக பணம் செலுத்தும் போது மட்டுமே க்யூஆர் கோட்களை ஸ்கேன் செய்யும் பழக்கம் உள்ளவர்கள் "புதிதாக எதோ மற்றம் வந்துவிட்டது" என்று பதற்றம் அடைய வேண்டாம்.

கூகுள் நிறுவனம் அதன் க்யூஆர் ஸ்கேனரில் செய்துள்ள ரீடிசைன் ஆனது லிங்க் (Link) உடன் வரும் க்யூஆர் கோட்களில் மட்டுமே முக்கியமான மாற்றத்தை கொண்டு வருகிறது. 9டூ5கூகுள் (9to5Google) வலைதளத்தின் சமீபத்திய அறிக்கையின்படி இந்த மாற்றம் - 2025 ஜூலை 28 ஆம் தேதி முதல் தோன்றும்.

Google: QR Code ஸ்கேனரில் புதிய மாற்றங்கள்

க்யூஆர் கோட்களுக்கு கூகுள் கொண்டுவந்துள்ள இந்த அப்டேட்டின் மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால் - உங்கள் ஸ்கேன் முடிந்ததும் ஆண்ட்ராய்டின் க்யூஆட் கோட் வியூஃபைண்டர் (Android's QR code viewfinder) ஆனது அதன் வெப் லிங்க்-ஐ (Weblink) எவ்வாறு உருவாக்குகிறது என்பதுதான். இப்போது அது குறிப்பிட்ட லிங்க் ஆனது உங்களை எங்கு அழைத்து செல்லும் (அதாவது க்ரோம் ப்ரவுஸருக்கு).. என்பதை காட்டும் ஒரு சப்-மெனுவை (Sub-menu) உங்கள் ஸ்க்ரேனின் கீழ் காட்டப்படுகிறது

அதன்கீழ் இப்போது பயனர்கள் ஒரு க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்து பின்வரும் செயல்களை செய்யலாம்:
1. ஓப்பன் (Open) - குறிப்பிட்ட தளம் அல்லது ஆப்பை பார்வையிட அதை திறக்கலாம்
2. காப்பி டெக்ஸ்ட் (Copy Text) - அதாவது லிங்க் டெக்ஸ்ட்-ஐ காப்பி செய்யலாம்
3. ஷேர் (Share) - உங்களுக்கு கிடைக்கும் லிங்க்-ஐ பகிரலாம்

இது பழைய "ஒப்பன்" என்கிற பட்டனை (Open Button) விட மிகவும் அதிகமாகும். இந்த ஓப்பன் பட்டனானது குறிப்பிட்ட க்யூஆர் கோட் எங்கிருந்து தோன்றியதோ அங்கு மட்டுமே பயனர்களை செல்ல அனுமதிக்கிறது. ஆனால் புதிய அப்டேட் அப்படி இல்லை; பயனர்கள் அதை திறக்கலாம்; காப்பி செய்யலாம் மற்றும் ஷேர் செய்யலாம்.

மேலும் கூகுள் நிறுவனம் அதன் "ஸ்கேன் க்யூஆர் கோட்" லேபிளை (Scan QR Code Label) சற்றே சிறியதாக்கி உள்ளது மற்றும் அது ஒரு க்யூஆர் கோட்-ஐ அடையாளம் காணும்போது அதை வியூஃபைண்டரின் க்ராஸ்ஹேருக்கு (Viewfinder Crosshair) மேலே வைத்துள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள "ஸ்கேன் ப்ரம் போட்டோ" விருப்பத்திற்கு (Scan From Photo Option) அருகில் ஒரு ஃபிளாஷ் ஐகானை (Flash Icon) வைக்கும் ஒரு புதிய பாட்டம் யுஐ-யும் (Bottom UI) உள்ளது.

முன்னரே குறிப்பிட்டது போல, ஆண்ட்ராய்டு க்யூஆர் கோட் ஸ்கேனருக்கான இந்த அப்டேட் ஜூலை 28 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. ஆனால் இது கூகுள் பிளே (Google Play) சேவைகள் மூலம் வருவதால் அனைவருக்கும் வந்துசேர சிறிது நேரம் ஆகலாம். ஒருவேளை "நியாயமான நேரத்திற்குள்" அது உங்களுக்கு தோன்றவில்லை என்றால், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை ரீஸ்டார்ட் (Restart) செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

கூகுள் தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை,ஆகஸ்ட் 25, 2025 க்கு பிறகு கூகுள் யுஆர்எல் ஷார்ட்னர் கொண்டு சுருக்கப்பட்ட இணைப்புகள் ஆதரிக்கப்படாது என்றும், குறிப்பிட்ட இணைப்புகளை கிளிக் செய்யும் போது அது எந்த ரெஸ்பான்ஸும் செய்யது என்றும், அந்த இணைப்புகள் 404 ரெஸ்பான்ஸை கொடுக்கும் என்றும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜூலை 2024 தேதியிட்ட ஒரு வலைப்பதிவில் Goo.gl இணைப்புகள் ஆனது இப்போது ஒரு இடைநிலை பக்கத்தை (Interstitial page) கொண்டிருக்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது. அதாவது கூகுள் யுஆர்எல் ஷார்ட்னர் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இணைப்புகளை கிளிக் செய்யும் போது ஒரிஜினல் டார்கெட் இணைப்பிற்கு செல்லும் முன்னர் வரவிருக்கும் "கூகுள் யுஆர்எல் ஷார்ட்னர் நீக்கம்" குறித்து பயனர்களுக்கு தெரிவிக்கும் பக்கத்திற்கு செல்லும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Redesign Android QR Code Scanner Add New Options Like Copy Text Share and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X