ஆண்ட்ராய்டு பி விநியோகத்தில், கூகுள் உடன் குவால்காம் கைகோர்ப்பு.!
தனது நவீன ஆண்ட்ராய்டு பி பீட்டா-வை, சில ஸ்மார்ட்போன்களுக்காக கூகுள் நிறுவனம் களமிறக்க ஆரம்பித்துள்ளது.
தனது நவீன ஆண்ட்ராய்டு பி பீட்டா-வை, சில ஸ்மார்ட்போன்களுக்காக கூகுள் நிறுவனம் களமிறக்க ஆரம்பித்துள்ளது. அதே நேரத்தில், குறிப்பிட்ட ஸ்னாப்டிராகன்களில் ஆண்ட்ராய்டு பி அறிமுகம் செய்யும் வகையில், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயலாற்ற போவதாக குவால்காம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் தனது நவீன ஆண்ட்ராய்டு பி பீட்டா-வை, சில ஸ்மார்ட்போன்களுக்காக கூகுள் நிறுவனம் களமிறக்க ஆரம்பித்துள்ளது. அதே நேரத்தில், சில குறிப்பிட்ட ஸ்னாப்டிராகன் மொபைல் தளங்களில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஆண்ட்ராய்டு பி-யை அறிமுகம் செய்யும் வகையில், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயலாற்ற போவதாக, சிப்செட் தயாரிப்பாளரான குவால்காம் தெரிவித்துள்ளது.
ஸ்னாப்டிராகன் 845, 660 மற்றும் 636 ஆகிய மொபைல் தளங்களுக்கான ஓஎஸ்-ஸை மேம்படுத்தும் வகையில், அறிமுகத்தின் போது ஆண்ட்ராய்டு பி மேம்பாடு இவைகளுக்கு அளிக்கப்படும்.
இது குறித்து குவால்காம் டெக்னாலஜிஸ், ஐஎன்சி. தயாரிப்பு நிர்வாகத்தின் இயக்குனரான மைக் ஜினிவிக் கூறுகையில், "ஓஇஎம்-களுக்கான தயாரிப்பை தயாராக வைத்திருக்கும் வகையில், ஆண்ட்ராய்டு பி உடன் எங்கள் சாஃப்ட்வேரை முன் ஒருங்கிணைக்க, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.
குவால்காமின் பிளாக் ஒன்றில் வெளியான ஒரு இடுகையில், "எங்களின் இந்த பலமான கூட்டுறவின் மூலம் ஆண்ட்ராய்டிற்கான சந்தையை கூகுள் மற்றும் குவால்காம் டெக்னாலஜிஸ் ஆகியவை இணைந்து விரிவுப்படுத்த உள்ளன. மேலும் ஸ்னாப்டிரான் மொபைல் தளங்களை அடிப்படையாக கொண்டு சாதனங்களை அறிமுகம் செய்ய ஓஇஎம்-களுக்கு எளிமைப்படுத்துவதாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல்போன் உலகில் ஒரு தனித்துவம் மிகுந்த நன்மையை அளிக்கும் நிலையை குவால்காம் எட்டியுள்ளது. கூகுளின் ஓஎஸ் மேம்பாட்டு சுழற்சியின் வேகத்தை மேம்படுத்துவதற்கு இது உதவுகிறது. மேலும் முந்தைய ஆண்ட்ராய்டு ஓஎஸ் வெளியீடுகளை விட, நவீன சாஃப்ட்வேர் மேம்பாடுகளை அதிவிரைவில் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க, ஓஇஎம்-களுக்கு வழிவகை செய்கிறது. பன்முக கேமரா ஆதரவு, டிஸ்ப்ளே கட்அவுட் ஆதரவு, உட்புற நேவிகேஷன், ஹெச்டிஆர் உள்ளிட்ட பல விறுவிறுப்பான அம்சங்களை அது கொண்டு வந்துள்ளது.
ஏற்கனவே சியாமி, விவோ, சோனி மொபைல், ஓப்போ மற்றும் ஓன்பிளஸ் போன்ற ஓஇஎம்-கள், ஆண்ட்ராய்டு பி மேம்பாட்டாளர் வெள்ளோட்டத்தில் பங்கேற்றுள்ளன. சில குறிப்பிட்ட மொபைல் தள செயலிகளுடன் செயல்படும் ஸ்மார்ட்போன்களில், ஏற்கனவே பப்ளிக் பீட்டா இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் கூகுள் ஆண்ட்ராய்டு பி, வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பிளாக் இடுகையில் கூகுளின் என்ஜினியரிங் பிரிவு துணைத் தலைவரான டேவ் புரூக் கூறுகையில், "ஆண்ட்ராய்டிற்கான புதிய ஹார்ட்வேர் இன்டர்பேஸ் கட்டமைப்பு, ப்ராஜெக்ட் டிரிபிள் ஆகும். சாதனங்களின் தயாரிப்பாளர்களுக்கு தள மேம்பாடுகளை எளிதாக செய்யும் வகையில், இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் சிலிக்கான் உடைய ஆண்ட்ராய்டு பி-யின் நெறிமுறையை செயல்பாட்டில் கொண்டு வர, குவால்காம் டெக்னாலஜிஸ் உடன் இணைந்து செயலாற்றுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இதன்மூலம் சாதனங்களின் தயாரிப்பாளர்களால், நவீன ஆண்ட்ராய்டு கண்டுபிடிப்புகளை டெவலப்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவாக அளிக்க முடியும்" என்றார்.
குவால்காமை பொறுத்த வரை, இந்த கூட்டிணைந்த செயல்பாட்டின் மூலம் இதை உலகளவில் கிடைக்கச் செய்யும் வகையில் விரிவுப்படுத்துவதோடு, முக்கியத்துவம் வாய்ந்த புதிய மேம்பாடுகள் வாடிக்கையாளர்களை எட்டி சேர செய்ய வேண்டும் என்று நினைக்கிறது. இவ்விரு நிறுவனங்களும் சேர்ந்து, புதிய புதுப்பிப்புகளை எவ்வளவு விரைவாக கிடைக்கச் செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








