வெள்ளம் வரும் முன் எச்சரிக்கை.! கூகுள் புதிய திட்டம்.!!

By Meganathan
|

சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளை தொடர்ந்து பொது மக்களுக்கு எச்சரிக்கை தகவல்களை வழங்கும் புதிய சேவையை கூகுள் நிறுவனம் துவங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் சுமார் 170 இடங்களின் நீர்நிலைகளில் நீர் இருப்பு தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் வரும் முன் எச்சரிக்கை.! கூகுள் புதிய திட்டம்.!!

இந்தியாவில் வெள்ள முன் அறிவிப்புகளை வழங்கும் அமைச்சகத்துடன் கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருக்கின்றது. இதனால் இந்தியாவின் நீர்நிலைகள் சார்ந்த தகவல்களை கூகுள் சேவைகளை கொண்டு அறிந்து கொள்ள முடியும். இதை பெற கதூகுள் நௌ கார்டு, கூகுள் ஆப், கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் பப்ளிக் அலெர்ட்ஸ் இணையதளம் உள்ளிட்டவைகளை பயன்படுத்தலாம்.

வெள்ளம் வரும் முன் எச்சரிக்கை.! கூகுள் புதிய திட்டம்.!!

இது குறித்து கூகுள் இந்தியா இணையதளத்தில் மத்திய நீர் வள அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்து அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கை பேரழிவுகளில் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றி கொள்ளவும், அதற்கு தயாராக இருக்க செய்யவும் கூகுள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளம் வரும் முன் எச்சரிக்கை.! கூகுள் புதிய திட்டம்.!!

மேற்படி அவசர காலங்களில் உயிர் காக்கும் முக்கிய தகவல்களை வழங்குவதன் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்த கூகுள் நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது, சமீபத்தில் சென்னை, கடலூரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மணிப்பூர் நிலநடுக்கம் போன்ற இயற்கை சேதங்களின் போது அனைவரும் தாங்கள் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்யும் வகையில் பேஸ்புக் நிறுவனம் சேஃப்டி செக் அம்சத்தை செயல்படுத்தியதை போன்றே கூகுள் நிறுவனமும் புதிய சேவையை துவங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Google public alerts will give flood information in India Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X