அடடே.. Google இன்று முதல் முக்கியமான சேவையை நிறுத்துகிறது.. என்ன தெரியுமா?
கூகுள் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் நல்ல வரேவுற்பு உள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் இன்று (ஏப்ரல் 2) முதல் ஒரு முக்கிய சேவையை நிறுத்துகிறது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது கூகுள் நிறுவனம் பல முக்கியமான சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஜிமெயில், கூகுள் மேப்ஸ். குரோம், கூகுள் டாக்ஸ், யூடியூப் போன்ற சேவைகளை அனைத்து மக்களும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் ஒவ்வொரு சேவைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது கூகுள் கூகுள் பாட்காஸ்ட் (Google Podcast) சேவை இன்று (ஏப்ரல் 2) முதல் நிறுத்த உள்ளது. எனவே இந்த ஆப் இன்று முதல் வேலை செய்யாது. குறிப்பாக இந்த கூகுள் பாட்காஸ்ட்களைப் நீங்கள் பயன்படுத்தினால், அதில் உங்கள் தரவு இருந்தால், அதை உடனடியாக யூடியூப் மியூசிக்கிற்கு (YouTube Music) மாற்ற வேண்டும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த கூகுள் பாட்காஸ்ட்களைப் ஏப்ரல் 2, 2024-க்கு பிறகு உங்களால் அதைப் பயன்படுத்த முடியாது என்று கூறியது. எனவே தான் தற்போது இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இந்நிறுவனம் தனது கூகுள் மேப்ஸ் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டுவர உள்ளது.
கூகுள் நிறுவனம் அவ்வப்போது தனது கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியில் புதிய புதிய அம்சங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இதில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.
கூகுள் நிறுவனம் தெரிவித்த தகவலின்படி, ஒரு வளாகத்தின் நுழைவு வாயில் முதல் நீங்கள் செல்ல வேண்டிய கட்டிடம் வரை (entrances to buildings) துல்லியமாக வழிகாட்டும் வகையில் புதிய அம்சத்தைச் சோதனை செய்து வருகிறது இந்நிறுவனம். குறிப்பாக இந்த புதிய வசதி மூலம் கட்டிடத்தை நீங்கள் செலக்ட் செய்யும் போது மேப்ஸ் ஜூம் செய்யப்பட்டுக் காண்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் இந்த புதிய அம்சம் மூலம் நீங்கள் செல்ல வேண்டிய கட்டிடம் மேப்ஸ் பக்கத்தில் ரெட் நிறத்தில் காண்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய வசதி அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த புதிய அம்சம் பெரிய கட்டிடங்கள் உள்ள இடம், காலேஜ் கட்டிடம், பெரிய வணிக வளாகங்களில் உள்ள கடைகளைக் கண்டறிவதற்கு மிகவும் உதவியாய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப்ஸ் செயலியில் இன்னும் பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டுவர உள்ளது. குறிப்பாக கூகுள் மேப்ஸ் செயலியில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் சேவையிலும் பல்வேறு புதிய மாற்றங்களைச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








