நீங்கள் கூகுள் பிளஸ் பயனாளியா? இதோ உங்களுக்கு ஒரு நற்செய்தி.!
மேலும் கூகுள் பிளஸ் பயனாளர்கள் எளிதில் இந்த செயலியை பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நோட்டிபிகேசன் மூலம் இந்த தளத்தில் உள்ள எதையும் மிஸ் செய்யாதவாறு அமைக்க உள்ளது.
கடந்த சில காலங்களாகவே கூகுள் நிறுவனம் எண்ணற்ற அப்டேட்டுக்களை செயலிகள், சேவைகள், டிவைஸ்கள் ஆகியவற்றில் வழக்கமாக செய்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் + என்னும் சமூகவலைத்தளத்திலும் புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து இணையதளங்களில் வெளிவந்துள்ள தகவலின்படி கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தில் விரைவில் நோட்டிபிகேசன் வசதி அறிமுகமாகவுள்ளது.

மேலும் கூகுள் பிளஸ் பயனாளர்கள் எளிதில் இந்த செயலியை பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நோட்டிபிகேசன் மூலம் இந்த தளத்தில் உள்ள எதையும் மிஸ் செய்யாதவாறு அமைக்க உள்ளது.
குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு நோட்டிபிகேசன் அனுப்புவதன் மூலம் அவர்கள் இந்த தளத்திற்கு தானாகவே வருகை தர செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம். மேலும் உங்கள் கூகுள் பிளஸ் குழுவினரகள் பதிவு செய்யும் முக்கியமான போஸ்ட்டுக்கள் நோட்டிபிகேசன் மூலம் வருவதால் கூகுள் பிளஸ் தளத்தை அதிகம் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் நேரம் மிச்சமாகும் என்பதோடு, முக்கிய போஸ்ட்களை இழக்காமல் இருக்கலாம்.
கூகுள் பிளஸ்தரும் இந்த வசதி தற்போது ஒருசில குறிப்பிட்ட பயனாளிகளுக்கு மட்டுமே செல்லும் என்றாலும் மிக விரைவில் அனைத்து பயனாளிகளுக்கும் இந்த வசதியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூகுளுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வசதி குறித்து மேலும் ஒருசில தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் ஏற்கனவே சமீபத்தில் ஒரு கட்டுரையில் கூகுள் நிறுவனம் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீமிங் செய்து கொடுக்கும் வசதியையும் செய்து வருகிறது என்பதை பார்த்தோம். இந்த வசதியின்படி தற்போது 28 விதமான வீடியோ வழங்கும் சேவை நிறுவனங்கள் கூகுளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ, எச்.பி.ஓ ஷோடைம், ஹூலு, சிபிஎஸ், ஏபிஎஸ், என்.பி.சி, காமெடி செண்ட்ரல், ஃபாக்ஸ், எச்.ஜி.டிவி மற்றும் ஒருசில சேவை நிறுவனங்கள் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications