கூகுள் ப்ளே ஸ்டோரில் வாரம் ஒரு இலவச ஆப் : புதிய அம்சம் இணைப்பு.!
இப்போது ஆப் ஆனது 4 டாப்களாக பிரிக்கப்பட்டுள்ளது.!
கூகுள் சமீப வாரங்களாக அதன் கூகுள் ப்ளே ஸ்டோரில் பல புதிய அம்சங்களை இணைத்த வண்ணம் உள்ளது. அதில் குறிப்பாக டெவலப்பர்கள் அக்கார்களின் பயன்பாடுகள் மீதான விற்பனை காட்ட அனுமதிக்கப்படும் என்ற அம்சத்தை கூறலாம்.
அதுமட்டுமின்றி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அம்சத்தின் கீழ் இலவச ஆப் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்கீழ் கூகுள் ப்ளே-வில் உள்ள பிரபலமான பயன்பாடுகளை வாராந்திர சலுகை என்ற பெயரின்கீழ் முன்னிலைப்படுத்தி 'இந்த வார இலவச பயன்பாடு' என்ற அம்சத்தை வழங்கிறது.

விரைவில்
இந்த புதிய வாராந்திர இலவச கூகுள் ப்ளே அம்சம் ஆனது இந்தியாவில் தற்போது கிடைக்கப்பெறவில்லை என்றாலும் கூட நாம் அம்சம் விரைவில் இந்த அம்சத்தை எதிர்பார்க்கலாம்.

ஹைலைட்
வாரம் ஒரு புதிய இலவச பயன்பாட்டு என்ற அம்சம் கூகுள் ப்ளே ஸ்டோரின் பயன்பாடுகள் பக்கத்தில் காண முடியும் மற்றும் டெஸ்க்டாப் அத்துடன் மொபைலிலும் காணலாம். இந்த புதிய பிரிவின்கீழ் நிச்சயமாக அந்த வாரத்தின் சில பிரபலமான பயன்பாடுகள் ஹைலைட் செய்யப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

4 டாப்
இதற்கிடையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் மற்றொரு சீரமைப்பும் காணப்படுகிறது - மை ஆப் பிரிவில் மாற்றங்கள் காணப்படுகிறது. இப்போது ஆப் ஆனது 4 டாப்களாக பிரிக்கப்பட்டுள்ளது - மேம்படுத்தல்கள், நிறுவப்பட்ட, நூலகம், மற்றும் பீட்டா என பிரிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக அப்டேட்
இப்போது பயனாளிகள் பயன்படுத்தப்படும் நிறுவப்பட்ட மற்றும் நூலகம் தாவல்களில் உள்ள பயன்பாடுகளை சார்ட் (வரிசைப்படுத்த முடியும்) அதாவது கடைசியாக அப்டேட் செய்யப்பட்டது, சமீபத்தில் பயன்படுத்தப்பட்டது மற்றும் அளவு ஆகியவைகளின் கீழ் வரிசைப்படுத்த முடியும்.

விற்பனைக்கு
மற்றொரு மிகப்பெரிய மாற்றமாய் டெவலப்பர்கள் கூகிள் ப்ளே ஸ்டோரில் தங்கள் பயன்பாடுகளை விற்பனைக்கு காட்டவும் வழிவகை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் ப்ளே ஸ்டோரில் விரைவில் புதிய தலையங்க பக்கம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க
ரூ.600 - ரூ.1000/-க்குள் கிடைக்கும் டாப் 10 பவர் பேங்க்ஸ்.!


Click it and Unblock the Notifications