இனி ஃப்ரீ ஃபயர் டவுன்லோட் செய்ய முடியாதா- கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்: காரணம் என்ன தெரியுமா?
இந்தியாவில் உள்ள கூகுள் ப்ளே ஸ்டோர் ஆப்பில் இருந்து ஃப்ரீ ஃபயர் கேம் அகற்றப்பட்டுவிட்டது. ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஃப்ரீ ஃபயர் போர் ராயல் கேம் அகற்றப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேம் இனி எந்த தளங்களிலும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் முன்னதாகவே கேம்களை நிறுவி உள்ள பயனர்கள் இந்த செயலிக்குள் நுழைவதில் சிக்கலை எதிர்கொள்வதாக சமூகவலைதளங்களில் புகார் எழுப்பியுள்ளனர்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்
இலவச ஃப்ரீ மேக்ஸ்-ம் ஆப் ஸ்டோரில் கிடைக்கவில்லை என்றாலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது. ஆனால் தங்கள் சாதனங்களில் கேமை நிறுவியிருக்கும் வீரர்கள் இதை அணுகலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள ஆப் ஸ்டோர் மற்றும் ப்ளே ஸ்டோரில் இருந்து கரீனாவின் ஃப்ரீ ஃபயர் திடீரென நீக்கப்பட்டது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கேம் திடீரென காணாமல் போனது இதையடுத்து கேமிங் ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கம்
கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து பயன்பாட்டை அகற்றியதையடுத்து கரீனா இதுவரை விளக்கமளிக்கவில்லை. மிகவும் பிரபலமான போர் ராயல் விளையாட்டு டெவலப்பர் விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கூகுள் ப்ளே ஸ்டோர் ஆப்பில் ஃப்ரீ ஃபயர் மேக்ஸ் மட்டுமே பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள கூகுள் ப்ளே ஸ்டோர் ஆப்பில் இருந்து ஃப்ரீ ஃபயர் கேம் அகற்றப்பட்டுவிட்டது. ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஃப்ரீ ஃபயர் போர் ராயல் கேம் அகற்றப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான ஆன்லைன் கேமிங் ரசிகர்களிடையே பதற்றம்
சமீபத்திய தகவல்கள் பிரபலமான ஆன்லைன் கேமிங் ரசிகர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த விளையாட்டுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி பல்வேறு தகவல்கள் பரவின. ஆனால் கரீனா அல்லது இந்திய அரசாங்கத்திடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக வில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தியாவில் தற்போது ஃப்ரீ ஃபயர் ஆப் பதிவிறக்கம் செய்யப்படவில்லை என்றாலும் தங்கள் சாதனத்தில் கேமை நிறுவியிருக்கும் வீரர்கள் இதை அணுகலாம் என கூறப்படுகிறது. மேலும் முன்பு நிறுவப்பட்ட வீரர்களுக்கு இந்த விளையாட்டு நன்றாகவே வேலை செய்கிறது. அதேபோல் சமீபத்திய புதுப்பிப்புக் காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு இது என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல்
இந்திய தரவுகளின் தொகுப்பு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கு விரோதமாகவும் இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக உள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அச்சுறுத்தலாக இருக்கும் பல செயலிகளுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69ஏ-ன் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

லடாக் எல்லையில் பதற்றம்
லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற குரல்கள் மேலோங்கி வந்தது.

உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியான அறிவிப்பு
அதேபோல் உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியான அறிவிப்பில், தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT குறிப்பிட்ட சீன செயலிகளை நீக்க வேண்டும் என்றும் சில செயலிகள் மூலம் இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம் சென்று கொண்டிருப்பதாகவும், இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கையை சீன மேற்கொள்ள வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியா சீனா பிரச்சனைகளுக்கு நடுவில் இந்த செயலிகள் மூலம் பின்வாசல் வழியாக சீனா இந்தியாவுக்குள்ளான தகவல் தொடர்பை துண்டிக்க முயலும் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications