Home
News

அப்ளிக்கேஷன் டெவலப்பர்களின் புதிய முன்னேற்றங்கள்!

By Super
அப்ளிக்கேஷன் டெவலப்பர்களின் புதிய முன்னேற்றங்கள்!

கட்டணம் செலுத்தி பயன்படுத்தப்படும் அப்ளிக்கேஷன்களை கூகுள் ப்ளே ஸ்டோரில் வழங்க, இந்திய அப்ளிக்கேஷன் டெவலப்பர்கள் இனி அனுமதிக்கப்படுவார்கள் என்று ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இது வரை நமது நாட்டில் இருக்கும் இந்திய அப்ளிக்கேஷன் டெவலப்பர்கள் ஃப்ரீ அப்ளிக்கேஷன்களை மட்டுமே உருவாக்கி வந்தனர். ஆனால் இனி கட்டணம் செலுத்தி டவுன்லோட் செய்யப்படும் அப்ளிக்கேஷன்களையும் இவர்கள் உருவாக்க கூகுள் அனுமதிக்கிறது.

கட்டணம் செலுத்தும் முறை இருக்கும் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன்களை அனுமதி பெற்ற நாடுகள் மட்டும் தான் வழங்கி வந்தன. ஆனால் அந்த பட்டியலில் இனி நமது நாடும் சேரும் என்பது சிறந்த முன்னேற்றம் என்று கூறலாம்.

இந்த செய்தியின் மூலம் நமது நாட்டில் தொழில் நுட்ப வல்லுனர்களின் முன்னேற்றம் மட்டும் அல்லாமல், கூகுள் நிறுவனத்தின் புதிய சில முயற்சிகளும் தெரிய வருகிறது.

இதனால் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷனின் எண்ணிக்கை சிறப்பாக உயரும். தற்பொழுது ஆன்ட்ராய்டு 6.5 லட்சம் அப்ளிக்கேஷன்களை ஆன்ட்ராய்டு மார்கெட்டில் பெறலாம். இப்போது நமது நாட்டின் இருக்கும் தொழில் நுட்ப வல்லுனர்களின் மூலம வழங்கப்பட இருக்கும் அப்ளிக்கேஷன்கள் இன்னும் சில புதுமைகளை வழங்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X