Home
News

2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்.!

இந்த ஆண்டின் சிறந்த செயலிகளாக யூடியூப் டிவி செயலி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு என்ற ஓஎஸ் அறிமுகம் செய்த பின்னர் பெரும்பாலான செல்போன் நிறுவனங்கள் இந்த ஓஎஸ் சப்போர்ட் செய்யும் வகையிலான ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களை தயாரித்தன. டச் ஸ்க்ரீன் வசதியுள்ள மொபைல் மற்றும் டேப்ளட்டுக்களில் இயங்கி வந்த ஆண்ட்ராய்டு ஓஎஸ் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து ஆண்ட்ராய்டு வெர்ஷனை டிவி, ஸ்மார்ட் வாட்ச்கள், மற்றும் தானியங்கி கார்களுக்கும் பயன்படுத்தப்பட்டன. மேலும் மற்ற நிறுவனங்களின் செயலிகளும் இந்த ஆண்ட்ராய்ட் வெர்ஷன் போன்களில் செயல்பட அனுமதி அளித்ததே இதன் சிறப்பு ஆகும்

2018 ஆம் ஆண்டின் கூகுள் விருது பெற்ற செயலிகள்-திரைப்படங்கள்.!

இந்த நிலையில் கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த செயலிகள், சிறந்த கேம் மூவீஸ், டிவி ஷோக்கள் மற்றும் இபுக் ஆகியவற்றை தேர்வு செய்து விருது வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கூகுள் நிறுவனம் இந்த 2018ஆம் ஆண்டிலும் சிறந்த ஆண்ட்ராய்டு செயலிகள், சிறந்த திரைப்படங்கள் மற்றும் டிவி ஷோக்கள், புத்தகங்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கியுள்ளது. இந்த ஆண்டின் சிறந்த செயலிகளாக யூடியூப் டிவி செயலி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் டிராப் என்ற மாணவர்களுக்கு பயன்படும் செயலியும் சிறந்த செயலியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

டிராப் செயலி:

டிராப் செயலி:

கூகுள் நிறுவனத்தால் சிறந்த செயலியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த செயலி ஒரு கல்வி செயலி ஆகும். இந்த செயலி 31 மொழிகள் பேசும் மாணவர்களுக்கு உதவுகிறது. இந்த செயலி மூலம் வெளிநாட்டு மொழிகளான கொரியன், சீன, ஜப்பான், ஆங்கிலாம், ஸ்பானிஷ், ஜெர்மன், ரஷ்யன் மற்றும் போர்த்துகீசிய மொழிகளை கற்று கொடுக்கும். ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்த செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி வெறும் 25 எம்பி அளவே உள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை நீங்களும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்

 யூடியூப் டிவி

யூடியூப் டிவி

அதேபோல் கூகுள் விருதை பெற்ற இன்னொரு செயலி யூடியூப் டிவி செயலி ஆகும். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற இந்த செயலி முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியின் மூலம் உலகின் முன்னணி கேபிள் ஆபரேட்டர்களின் ஒளிபரப்புகளை பார்க்கலாம். குறிப்பாக ஏபிசி, சிபிஎஸ், ஃபாக்ஸ் உள்பட உலகி முன்னணி 60 நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகும் சேனல்களை பார்க்கலாம். இந்த செயலியை ஸ்மார்ட்போன், டேப்ளட், ஸ்மார்ட் டிவி, உள்பட பல்வேறு சாதனங்களில் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். பிளே ஸ்டோரில் இந்த செயலி 4.4 ரேட்டிங்கை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த செயலி இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை.

கூகுள் விருதுகளை பெற்ற சிறந்த இபுத்தகங்கள்

கூகுள் விருதுகளை பெற்ற சிறந்த இபுத்தகங்கள்

1. மைக்கேல் உல்ப் எழுதிய ஃபயர் அண்ட் ஃபியூரி

2. ஸ்டீபன் கிங் எழுதிய 'தி அவுட்சைடர்

3. பாப் வுட்வர்ட் எழுதிய ஃபியர்

4. பீட்டர்சன் எழுதிய 12 ரூல்ஸ் ஃபார் லைப்

5. ராச்செல் ஹோலிஸ் எழுதிய கர்ள் வாஷ் ஃபேஸ்

கூகுள் விருதுகளை பெற்ற சிறந்த டிவி ஷோக்கள்

கூகுள் விருதுகளை பெற்ற சிறந்த டிவி ஷோக்கள்

1. தி வாக்கிங் டெட்

2. ரிவர்டேல்

3. தி பிக் பேங் தியர்

4. தி ஃப்ளாஷ்

5. பா பாட்ரோல்

கூகுள் விருதுகளை பெற்ற சிறந்த திரைப்படங்கள்

கூகுள் விருதுகளை பெற்ற சிறந்த திரைப்படங்கள்

1. பிளாக் பாந்தர்

2. தி அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்

3. தோர்: ராக்னராக்

4. ஜுமாஞி: வெல்கம் டு த ஜங்கிள்

5. டெட்பூல் 2

Best Mobiles in India

English summary
Google Play Awards 2018 Most popular apps this year: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X