Home
News

150 மில்லியன் கூகிள் பயனர்களுக்கு ஆட்டோமேட்டிக் பாதுகாப்பு நடவடிக்கை.. ஸ்கெட்ச் தெளிவா இருக்கு மக்களே.!

இந்த ஆண்டின் இறுதிக்குள் சுமார் 150 மில்லியன் பயனர்களுக்குக் கூகிள் நிறுவனம் அதன் பாதுகாப்பு அம்சத்தை ஆட்டோமெட்டிக்காக ஆக்டிவேட் செய்யுமென்று அறிவித்துள்ளது. கூகிள் நிறுவனத்தின் "இரண்டு அடுக்கு காரணி சரிபார்ப்பு" என்று அழைக்கப்படும் 2 ஃபாக்டர் ஆதென்டிகேஷன் அமைப்பைத் தனது பயனர்களுக்குத் தானாகப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூகுள் இப்போது அறிவித்துள்ளது. இந்த அம்சம் பயனர்களின் தகவலைப் பாதுகாக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகிள் நிறுவனம் குறிப்பிடும் 2FA என்றால் என்ன? 2SV என்றால் என்ன?

கூகிள் நிறுவனம் குறிப்பிடும் 2FA என்றால் என்ன? 2SV என்றால் என்ன?

2FA என்பது டூ ஃபாக்டர் ஆதென்டிகேஷனை குறிக்கிறது. அதேபோல், 2SV என்பது 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் என்பதை குறிக்கிறது. 2FA மற்றும் 2SV உடன் பயனர் தனது தகவல்களைப் பாதுகாத்துப் பயன்படுத்தும் போது, அதை மூன்றாம் நபர் யாரும் பார்வையிட முடியாது. இந்த அம்சத்தில் நீங்கள் ஒரு பயன்பாட்டைத் திறக்க அதற்கான கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும், இதன் மூலம் பயனர் தனது தனிப்பட்ட சாதனத்தில் ஒரு தனித்துவமான பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்த முடியும்.

டிஜிட்டல் பாதுகாப்பை இரட்டிப்பாகப் பலப்படுத்த கூகிள் திட்டமா?

டிஜிட்டல் பாதுகாப்பை இரட்டிப்பாகப் பலப்படுத்த கூகிள் திட்டமா?

ஒரு முறை குறியீட்டைக் கொண்டு ஒரு குறுஞ்செய்தியைப் பெற்ற பின்னர் அதை பயன்படுத்தி பயனரின் அடையாளத்தைச் சரிபார்த்த பின்பு தான் உங்கள் போனில் உள்ள தகவலைத் திறக்க முடியும். இது பயனர்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பை இரட்டிப்பாகப் பலப்படுத்துகிறது. இந்த 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள், கூடுதலாக சுமார் 150 மில்லியன் கூகுள் பயனர்களை 2SV இல் தானாகப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்று கூகிள் தெரிவித்துள்ளது.

2FA மற்றும் 2SV பாதுகாப்பு எவ்வாறு செயல்படும்?

2FA மற்றும் 2SV பாதுகாப்பு எவ்வாறு செயல்படும்?

அதேபோல், மேலும் இதை இயக்க 2 மில்லியன் யூடியூப் கிரியேட்டர்கள் தேவை என்று நிறுவனம் ஒரு வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளது. கணக்குகள் மற்றும் நெட்வொர்க்குகளுக்கான அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுப்பதற்கான மிகவும் நம்பகமான வழிகளில் ஒன்றாக இந்த 2FA மற்றும் 2SV பாதுகாப்பு செயல்படும் என்று கூகிள் தனது வலைப்பக்க இடுகையில் தெளிவாகக் கூறியுள்ளது.

iOS பயனர்களுக்காக கூகிள் என்னவிருக்கிறது தெரியுமா?

iOS பயனர்களுக்காக கூகிள் என்னவிருக்கிறது தெரியுமா?

கூகிள் நிறுவனமானது முதலில் பயனர்களை இரண்டு காரணி அங்கீகார அமைப்பில் மே மாதத்தில் தானாகப் பதிவு செய்யும் முயற்சியை அறிமுகப்படுத்தியது. iOS சாதன உரிமையாளர்கள் தங்கள் பிற பயன்பாடுகளிலும் சேமித்த கடவுச்சொற்களைத் தானாக நிரப்ப Chrome ஐப் பயன்படுத்தலாம் என்று கூறியது. மேலும் iOS பயனர்களுக்காக, Chrome இன் கடவுச்சொல் உருவாக்கும் கருவியை விரைவில் கூகிள் அறிமுகம் செய்து பயன்படுத்த அனுமதிக்கும் என்று கூகிள் நிறுவனம் கூறியுள்ளது.

பயனர்களின் பாதுகாப்பிற்கான திட்டம் பற்றி கூகிள் கொடுத்த விளக்கம்

பயனர்களின் பாதுகாப்பிற்கான திட்டம் பற்றி கூகிள் கொடுத்த விளக்கம்

"இன்றைய 2SV விருப்பங்கள் அனைவருக்கும் பொருந்தாது என்பதையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம், எனவே நாங்கள் வசதியான, பாதுகாப்பான அங்கீகார அனுபவத்தை வழங்கும் தொழில்நுட்பங்களில் வேலை செய்கிறோம் மற்றும் நீண்ட காலத்திற்குக் கடவுச்சொற்களை நம்புவதைக் குறைக்க முயன்று வருகிறோம். இந்த ஆண்டின் இறுதிக்குள் திட்டமிட்டபடி 150 மில்லியன் பயனர்களின் பாதுகாப்பை பலப்படுத்தப் போகிறோம்" என்று கூகிள் நிறுவனம் குறிப்பிட்டுக் கூறியுள்ளது.

செயலற்ற கணக்கு மேலாளர்களின் கவனத்திற்கு

செயலற்ற கணக்கு மேலாளர்களின் கவனத்திற்கு

கூடுதலாக, கூகிள் அதன் செயலற்ற கணக்கு மேலாளரின் விவரங்களையும் பகிர்ந்துள்ளது. இது மக்கள் டிஜிட்டல் கணக்குகளைப் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு, அதைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செயலற்ற கணக்கு மேலாளர், மை அக்கௌன்ட் செட்டிங்ஸ் கீழ் சென்று இதைப் பயன்படுத்தலாம். ஒரு கணக்கு எப்போது செயலற்றதாக கருதப்பட வேண்டும், யாருக்கு அறிவிக்க வேண்டும் மற்றும் ஒரு கணக்கு செயலற்றதாக இருக்கும்போது எதைப் பகிர வேண்டும் என்பதைப் பயனர்கள் தீர்மானிக்க இந்த தகவல் அனுமதிக்கிறது.

Best Mobiles in India

English summary
Google Plans To Turn On 2 Factor Authentication By Default For 150 Million Users : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X