பிரைவசி மற்றும் செக்யூரிட்டி டேஷ்போர்டுகளை மாற்றியமைக்க கூகுள் திட்டமிட்டுள்ளது

|

கூகுள் பயன்படுத்துவோருக்கு எளிய மற்றும் தலைசிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. செக்யூரிட்டி டேஷ்போர்டு மற்றும் பிரைவசி அம்சங்களில் எளிய முறையில் வழங்கும் நோக்கில் தொடுதிரை வசதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கூகுள் மேப்ஸ், யூடியூப், சர்ச் போன்ற சேவைகள் சார்ந்த தகவல்களை தெரிவிக்கும் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.

பிரைவசி மற்றும் செக்யூரிட்டி டேஷ்போர்டு முழுமையாக மாற்றும் கூகுள்

சமீபத்திய கூகுள் வலைத்தள தகவல்களின் படி 2009-ம் ஆண்டு கூகுள் வெளியிட்ட டேஷ்போர்டு முற்றிலுமாக மாற்றியமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டேஷ்போர்டில் கூகுள் அக்கவுண்ட் மற்றும் கூகுள் சேவைகளை எடிட் செய்யும் வசதி வழங்கபப்டுகிறது.

இதுவரை ஆக்டிவிட்டி டூல் அதிகம் பயன்படுத்தாதவர்களை கூகுள் டூல் மற்றும் சேவைகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ள வழி செய்யும். இதை கொண்டு சர்ச் ஹிஸ்ட்ரிக்களை அழிக்கவும், பயன்படுத்திய கூகுள் சேவைகளை மாற்ற முடியும்.

மை அக்கவுண்ட் மற்றும் மை ஆக்டிவிட்டி போன்றே சேவைகளை போன்றே டேஷ்போர்டினை பிரைவசி கண்ட்ரோலில் சேர்ப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. உங்களது தகவல்கள் சார்ந்து சரியான முடிவுகளை எடுக்கும் போது எளிமையான அனுபவம் வழங்கும் நோக்கில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.

அக்டோபர் 4 : மிரட்டலான கூகுள் பிக்சல் 2 & பிக்சல் 2 எக்ஸ்எல் அறிமுகம்.!அக்டோபர் 4 : மிரட்டலான கூகுள் பிக்சல் 2 & பிக்சல் 2 எக்ஸ்எல் அறிமுகம்.!

மேலும் மிக முக்கிய மாற்றங்களில் தொடுதிரையில் சீராக பயன்படுத்தும் வசதி, எவ்வித சாதனத்திலும் டேஷ்போர்டு சீராக வேலை செய்வதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. இத்துடன் கூகுள் சேவைகள் மற்றும் தகவல்களை பயன்படுத்தும் போது மிக எளிமையான வழிமுறைகளை வழங்குவதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என கூகுள் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

செக்யூரிட்டி மற்றும் பிரைவசி டேஷ்போர்டு உள்ளிட்டவை அனைவராலும் அதிகம் பயன்படுத்தாத அம்சங்களாக இருக்கிறது. எனினும் கூகுள் இதனை மாற்றியமைத்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஏற்றதாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Google has announced that it plans to redesign its security and privacy dashboard to make it more accessible to users.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X