Home
News

சுந்தர் சார்.. இதை முதல்லயே பண்ணி இருக்கலாம்.. இனி Pixel போன்களின் விற்பனை தானா சூடுபிடிக்குமே!

கூகுள் (Google) நிறுவனத்தின் வரவிருக்கும் டென்சர் ஜி5 சிப்செட் (Tensor G5 Chipset) ஆனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை (Pixel Smartphones) அடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்லும் அளவிற்கு சில முக்கிய மாற்றங்களை பெறும் என்பது போல் தெரிகிறது. அதென்ன மாற்றங்கள்? இதோ விவரங்கள்:

முன்னதாக வெளியான சில அறிக்கைகள், இந்த சிப்செட் ஆனது சாம்சங்கின் ஃபவுண்டரிகளில் இருந்து விலகி, டிஎஸ்எம்சியின் அட்வான்ஸ்டு 3என்எம் ப்ராஸஸிங் செயல்முறையை தேர்ந்தெடுக்கும் என்று தெரிவித்தன. தற்போது வெளியாகியுள்ள ஒரு லேட்டஸ்ட் லீக் ஆனது - கூகுள் நிறுவனம் அதன் ஜிபியு வழங்குநர்களை முழுவதுமாக மாற்றக்கூடும் என்று பரிந்துரைக்கிறது.

இனி Pixel போன்களின் விற்பனை தானா சூடுபிடிக்குமே!

கடந்த மாதம் ஆர்ஐஎஸ்சி-வி டே டோக்கியோ மாநாட்டில் (RISC-V Day Tokyo conference) இருந்து நீக்கப்பட்ட ஒரு ஆவணம், இமேஜினேஷன் டெக்னாலஜிஸின் ஜிபியுக்களை (Imagination Technologies' GPUs) பயன்படுத்தத் தயாராக உள்ள சிப்களில் - கூகுள் டென்சர் ஜி5 உள்ளதை வெளிப்படுத்தி இருந்தது. இது உண்மையாகும் பட்சத்தில், கூகுள் நிறுவனம் அதன் முந்தைய டென்சர் சிப்களில் பயன்படுத்திய ஆர்ம் மாலி ஜிபியுக்களிலிருந்து விலகி செல்லும்.

குறிப்பிட்ட ஜிபியு ஆனது டிஎக்ஸ்டி-48-1536 (DXT-48-1536) என்று கூறப்படுகிறது, இது ரே டிரேசிங் போன்ற அம்சங்களை ஆதரிக்கும் ஒரு நவீன கிராபிக்ஸ் ப்ராசஸர் ஆக இருக்கும். நினைவூட்டும் வண்ணம், இதுபோன்ற அம்சங்கள் கூகுள் டென்சர் ஜி3 மற்றும் ஜி4 சிப்களில் உள்ள மாலி-ஜி715 இல் (Mali-G715) இல்லை.

இமேஜினேஷன் டெக்னாலஜிஸின் ஜிபியு ஆனது ரெண்டரிங் செயல்திறனிலும் ( rendering performance) மேம்பாடுகளை கொண்டு வரக்கூடும். இது டென்சர் கொண்டு இயங்கும் பிக்சல் டிவைஸ்களை கேமிங் மற்றும் கிராபிக்ஸ்-ஹெவி அப்ளிகேஷன்களில் (gaming and graphics heavy applications) மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றும்.

புதிய ஜிபியு-வை தவிர்த்து, டென்சர் ஜி5 அந்த புதிய இமேஜ் சிக்னல் ப்ராசஸர் (ISP) உட்பட பல முழுமையான கஸ்டம் காம்போனன்ட்களை இணைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூகுளின் கடந்தகால டென்சர் சிப்கள் கஸ்டம் மாற்றங்களுடன் மாற்றியமைக்கப்பட்ட சாம்சங் ஐஎஸ்பி-களை நம்பியுள்ளன, ஆனால் ஜி5 சிப் ஆனது மிகவும் இந்திபென்டென்ட் சொல்யூஷனை அறிமுகப்படுத்தக்கூடும்.

இந்த எல்லா தகவல்களுமே.. கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் மோடம் ஆனது மற்ற பிக்சல் 9 மாடல்களில் காணப்படும் மோடத்துடன் ஒப்பிடும் போது மிகவும் பழைய மாடலாக உள்ளது என்கிற தகவல் வெளியான வேகத்தில் வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. புதிய பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் எக்ஸினோஸ் 5300 மோடம் (Samsung Exynos 5300 modem) உள்ளதை கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

நினைவூட்டும் வண்ணம் எக்ஸினோஸ் 5300 மோடம் என்பது கடந்த அக்டோபர் 2022 இல் கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 7 சீரிஸ் (Google Pixel 7 Series) உடன் அறிமுகப்படுத்தப்பட்ட அதே மோடம் ஆகும். இது கூகுள் பிக்சல் 6 (Google Pixel 6) ஸ்மார்ட்போனின் ஷானான் ஏ5123 5ஜி (Shannon A5123 5G) மோடமின் மேம்படுத்தலாக அறிமுகமானது. இது கால் டிராப்ஸ் மற்றும் மெதுவான 5ஜி ஸ்பீட் (Call drops and slow 5G speeds.) போன்ற பொதுவான சிக்கல்களால் பாதிக்கப்பட்டதற்காக பரவலாக விமர்சிக்கப்பட்ட மோடம் ஆகும்.

இருப்பினும், எக்ஸினோஸ் 5300 மோடமில் அந்த சிக்கல்கள் காணப்படவில்லை. ஆனால் பயனர்கள் அதிக பேட்டரி நுகர்வு மற்றும் நெட்வொர்க் முறிவுகளை (high battery consumption and network breaks) எதிர் கொள்வதாக தெரிவித்தனர். அதன் பின்னர் கூகுள் அதன் லேட்டஸ்ட் பிக்சல் 9 சீரீஸ் மற்றும் எக்ஸினோஸ் 5400 (Exynos 5400) வழியாக அந்த சிக்கல்களையும் சரி செய்தது. ஆனால் புதிய பிக்சல் 9ஏ மாடலில் பழைய எக்ஸினோஸ் 5300 மோடமையே பேக் செய்து உள்ளது. இது பிக்சல் 9ஏ மாடலின் விற்பனையை கடுமையாக பாதித்தாலும் ஆச்சரியப்படுவதற் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Planning biggest changes in Tensor G5 Advanced 3nm Process Imagination GPU
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X