Home
News

பிளிப்கார்ட் தீபாவளி ஸ்பெஷல்: சும்மா இல்ல ரூ.6000 தள்ளுபடி- கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்!

கூகுள் பிக்சல் 4ஏ சாதனம் என்பது கூகுளின் ப்ரீமியம் மிட் ரேஞ்ச் சாதனமாக இருக்கிறது. இந்த சாதனம் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் மிகப்பெரிய விலைக் குறைப்பை பெற்றிருக்கிறது. ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி நிறுவனம் தற்போது பிளிப்கார்ட்டில் பிக் தீபாவளி விற்பனை 2021 அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூகுள் பிக்சல் 4ஏ சாதனத்துக்கு மிகப்பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்

பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்

பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் வாங்க இது சரியான நேரமாகும். கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனானது தற்போது ரூ.25,999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.31999 ஆக இருந்தது. பிளிப்கார்ட்டில் கூடுதல் தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிளிப்கார்ட் எஸ்பிஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் சாதனம் வாங்கும் போது கூடுதலாக 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கூடுதலாக அனைத்து ப்ரீபெய்ட் பரிவர்த்தனைகளுக்கும் ரூ.2000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி மொத்த சலுகைகளுடன் இந்த கூகுள் பிக்சல் 4ஏ சாதனத்தை ரூ.22749 என்ற விலையில் வாங்கலாம். கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனானது 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது ஒற்றை பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது.

Google Pixel 4a விவரக்குறிப்புகள்

Google Pixel 4a விவரக்குறிப்புகள்

இந்த சாதனம் 5.8 அங்குல முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி இருக்கிறது.

8 மெகாபிக்சல் செல்பி கேமரா

8 மெகாபிக்சல் செல்பி கேமரா

இரட்டை பின்புற கேமராக்கள் மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் வருகிறது. செல்பி கேமராவிற்கு பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பும் உள்ளது. அதோடு போர்ட்ரெய்ட் லைட் அம்சமும், எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் பயன்முறையும் இதில் உள்ளது. இதன் பேட்டரி ஆயுள் 48 மணி நேரம் வரை நீடிக்கும்.

5.8 இன்ச் அமோலெட் பேனல்

5.8 இன்ச் அமோலெட் பேனல்

கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனானது 5.8 இன்ச் அமோலெட் பேனலுடன் முழு எச்டி தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பை கொண்டிருக்கிறது. ஹூட்டின் படி, இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730 ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி இருக்கிறது

3140 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

3140 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

இமேஜிங்கிற்கு ஓஐஎஸ் மற்றும் 4கே வீடியோ பதிவு ஆதரவுடன் கூடிய ஒற்றை 12.2 எம்பி பின்புற கேமராவை வழங்குகிறது. செல்பி வசதிக்கென 1080 பிக்சல் வீடியோ பதிவு செய்யும் திறன் உடன் 8 மெகாபிக்சல் முன்புற கேமராவை கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது ஸ்டாக் ஆண்ட்ராய்டு யூஐ மூலம் இயக்கப்படுகிறது. இது 18 வாட்ஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. கூடுதலா இந்த கூகுள் பிக்சல் 4ஏ 3140 எம்ஏஎச் பேட்டரி யூனிட்டை கொண்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு என பின்புறத்தில் பொறுத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தீபாவளி விற்பனை

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தீபாவளி விற்பனை

இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்கலாமா என்றால் அது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். கூகுள் பிக்சல் 4ஏ சிறந்த கேமரா அம்சங்களுடன் மேம்பட்ட ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிகவும் லேசான எடை அம்சத்தை கொண்டுள்ளது. கூகுள் பிக்சல் சாதனம் வாங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் கூகுள் பிக்சல் சாதனத்துக்கு பிளிப்கார்ட்டில் சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Google Pixle 4A Gets Huge Discount in Flipkart Big Diwali Sale 2021
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X