ஆப்பிள் ஐபேட்களை தூக்கி சாப்பிடும் அம்சங்களுடன் Google Pixel Tablet.. லீக்கான தகவல்கள்!
கூகுள் (Google) நிறுவனத்தின் கூகுள் பிக்சல் டேப்லெட் (Google Pixel Tablet) எப்போது அறிமுகமாகும், அதன் அம்சங்கள் மற்றும் விலை எப்படி இருக்கும் என்று கூகுள் பிரியர்கள் காத்திருந்த நிலையில், அமேசானில் (Amazon) பிக்சல் டேப்லெட்டின் தகவல்கள் எதிர்பாராத விதமாக லீக்காகி மேலும் ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் கடந்தாண்டு நடைபெற்ற கூகுள் ஐ/ஓ 2022 (Google I/O 2022) நிகழ்வின்போது கூகுள் பிக்சல் டேப்லெட் குறித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அப்போதில் இருந்தே கூகுள் பிக்சல் டேப்லெட்டின் மீதான எதிர்பார்ப்பு எகிற தொடங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும். அதன் அம்சங்கள் குறித்து அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வந்தன.

இதனால் 2022ஆம் ஆண்டின் இறுதியில் கூகுள் பிக்சல் டேப்லெட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூகுள் பிக்சல் டேப்லெட் 2023ஆம் ஆண்டே வெளியாகும் என்று கூகுள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், 2023ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் கூகுள் ஐ/ஓ 2023 (Google I/O 2023) நிகழ்வின்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது கிட்டத்தட்ட உறுதியாகும் வகையில், அமேசானில் கூகுள் பிக்சல் டேப்லெட்டின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகியது.
நாளை (மே 10) கூகுள் ஐ/ஓ 2023 நிகழ்வு நடக்கயிருக்கிறது. அப்போது பிக்சல் 7ஏ (Pixel 7a) ஸ்மார்ட்போன் வெளியாவது உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் கூகுள் பிக்சல் டேப்லெட்டும் அறிமுகம் செய்யப்பட்டால் கூகுள் பிரியர்களுக்கு மேலும் கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேவேளையில் ஜூன் 20ஆம் தேதியில் கூகுள் பிக்சல் டேப்லெட் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்போது கூகுள் பிக்சல் டேப்லெட்டின் அம்சங்கள், டிசைன் மற்றும் விலை குறித்து தெரிந்துகொள்ளலாம்.
அமேசானில் வெளியான கூகுள் பிக்சல் டேப்லெட் விவரங்கள்: கூகுள் பிக்சல் டேப்லெட்டின் டிஸ்பிளேவை பொறுத்தவரையில் 10.9 இன்ச் (1600x2560 பிக்சல்கள்) அளவை கொண்டுள்ளது. கூகுள் பிக்சல் 7 (Google Pixel 7) மற்றும் கூகுள் பிக்சல் 7 புரோ (Google Pixel 7 Pro) ஸ்மார்ட்போன்களை போலவே கூகுள் பிக்சல் டேப்லெட்டிலும் கூகுள் டென்சார் 2 எஸ்ஓசி (Google Tensor 2 SoC) சிப்செட் வருகிறது.
8ஜிபி ரேம் - 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்டுகளில் வருகிறது. ஆண்டிராய்டு 13 ஓஎஸ் உடன் வருகிறது. 7000 எம்ஏஹெச் பேட்டரி இருக்கிறது. இந்த தகவல்கள் ஜாப்பான் நாட்டில் வெளியாகியிருப்பதால், கூகுள் பிக்சல் டேப்லெட்டின் விலையை பொறுத்தவரையில், 79,800 யென்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது இந்திய மதிப்பில் ரூ. 48,331 ஆகும். இந்த பில்சல் டேப்லெட் ஹசல் (hazel) மற்றும் போர்சிலின் (Porcelain) கலர்களில் கிடைக்கிறது. இந்த தகவலோடு ஜூன் 20ஆம் தேதியில் கூகுள் பிக்சல் டேப்லெட் வெளியாகும் என்று அமேசானில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








