ஸ்டாக் இல்ல சார், அப்படிலாம் உடனே கிடைக்காது.. டிமாண்ட் உச்சியில் Google Pixel போன்!

|

செகண்ட் ஜென் டென்சர் ஜி2 சிப்செட் ஆதரவு, மேம்பட்ட கேமரா அம்சங்கள் என ப்ரீமியம் தர ஆதரவுகளுடன் கூகுள் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் தற்போது அறிமுகமாகி இருக்கிறது. பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போன் டிமாண்ட் இன் உச்சியில் இருக்கிறது.

கூகுள் பிக்சல் 7

கூகுள் பிக்சல் 7

கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் அறிமுகமான சில மணி நேரங்களிலேயே பிளிப்கார்ட் இல் அவுட் ஆஃப் ஸ்டாக் ஆகி விட்டது. இதன்மூலம் இந்திய பயனர்கள் ஆண்ட்ராய்ட் போன்களில் இருந்து மாற்று பயன்பாட்டு போனை விரும்புகிறார்கள் என தெரிய வருகிறது.

அவுட் ஆஃப் ஸ்டாக்..

அவுட் ஆஃப் ஸ்டாக்..

கூகுள் பிக்சல் 7 சீரிஸ் இல் கூகுள் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ என இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளது. இதில் கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் Coming Soon என பிளிப்கார்ட்டில் காட்டப்பட்டாலும் கூகுள் பிக்சல் 7 ப்ரோ "Sold Out", This item is currently out of stock என காட்டப்படுகிறது.

தனித்துவ சிப்செட் ஆதரவுகள்..

தனித்துவ சிப்செட் ஆதரவுகள்..

அனைத்து நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதரவுடன் மீடியாடெக் சிப்செட் அல்லது குவால்காம் சிப்செட் மூலம் தான் இயக்கப்படுகிறது.

இதில் இருந்து மாறுபட்டு இருப்பது ஆப்பிள் ஐபோன் மற்றும் கூகுள் பிக்சல் போன்கள் தான். ஆப்பிள் ஐபோன்கள் பிரத்யேக சிப்செட் மற்றும் ஐஓஎஸ் ஆதரவை கொண்டிருக்கிறது. அதேபோல் கூகுள் பிக்சல் போன்களும் தனித்துவ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

மாற்றை விரும்பும் இந்தியர்கள்..

மாற்றை விரும்பும் இந்தியர்கள்..

கூகுள் பிக்சல் 7 ப்ரோ அவுட் ஆஃப் ஸ்டாக் என பிளிப்கார்ட்டில் குறிப்பிட்டிருப்பது இந்தியர்கள் ஆண்ட்ராய்டுக்கு மாற்றை விரும்புகிறார்கள் என தெளிவாக காட்டுகிறது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போனின் முன்பதிவு தான் பிளிப்கார்ட்டில் தொடங்கி இருக்கிறது.விற்பனை 13 ஆம் தேதி தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தள்ளுபடியுடன் விற்பனை

தள்ளுபடியுடன் விற்பனை

கூகுள் பிக்சல் 7 தொடரில் இடம்பெற்றுள்ள கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் ரூ.59,999 எனவும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.84,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியுடன் வாங்கலாம். அதாவது பிளிப்கார்ட்டில் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனை எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி வாங்கும்பட்சத்தில் ரூ.6000 மற்றும் ரூ.8,500 தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இப்போதே இதை செய்யலாம்..

இப்போதே இதை செய்யலாம்..

கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போனுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் வழங்கப்படுகிறது. இப்படி அனைத்து தள்ளுபடியையும் வைத்து பார்க்கும் போது iPhone 14, OnePlus 10 Pro மற்றும் Samsung Galaxy S22 ஸ்மார்ட்போன்களை விட இது சிறந்த தேர்வாக தான் இருக்கிறது.

அவுட் ஆஃப் ஸ்டாக் ஆக இருந்தாலும் கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போன்களுக்கு Notify Me என்ற விருப்பத்தை இப்போதே தேர்வு செய்து கொள்ளலாம்.

பிக்சல் 7 சிறப்பம்சங்கள்

பிக்சல் 7 சிறப்பம்சங்கள்

பிக்சல் 7 சீரிஸ் இல் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டு மாடல்களிலும் கூகுளின் சொந்த தயாரிப்பான டென்சர் ஜி2 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது செகண்ட் ஜென் சிப்செட் ஆகும்.

பிக்சல் 7 மாடலில் டூயல் ரியர் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அது 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 12 எம்பி இரண்டாம் நிலை கேமரா ஆகும்.

பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. அது 50 எம்பி பிரதான கேமரா, 12 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 48 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் ஆகும்.

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 10.8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளன.

பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ

பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ

பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போனில் ஒரே சிப்செட் பொருத்தப்பட்டிருந்தாலும் டிஸ்ப்ளே அளவு மற்றும் கேமரா ஆதரவுகள் மாறுபட்டதாக இருக்கிறது.

பிக்சல் 7 மாடலில் 6.32 இன்ச் முழு எச்டி+ OLED டிஸ்ப்ளேவும் டூயல் கேமராக்களும், பிக்சல் 7 ப்ரோவில் 6.7-இன்ச் குவாட்-எச்டி LTPO OLED டிஸ்ப்ளே, டிரிபிள் கேமராக்களும் பொருத்தப்பட்டிருக்கிறது.

7 ப்ரோ மாடலில் நிறுவனத்தின் புதிய மேக்ரோ ஃபோகஸ் ஆதரவுடன் பல்வேறு மேம்பட்ட கேமரா அம்சங்களை நிறுவனம் வழங்கி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Google Pixel Goes Out-of-Stock on Flipkart: When Can You Get?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X