ப்ளிப்கார்ட்டில் கூகுள் பிக்சல் கருவிக்கு அதிரடி விலைக்குறைப்பு.!

Written By:

ஒருபக்கம் ப்ளிப்கார்ட் அதன் குடியரசு தின சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. மறுபக்கம் ப்ளிப்கார்ட் நிறுவனம் ஐடியா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து 1ஜிபி விலையில் 15ஜிபி ஐடியா டேட்டா கிடைக்கும் வண்ணம் ஒரு சலுகையையும் வழங்கி வருகின்ற நிலையில் இப்போது கூகுள் பிக்சல் கருவிகள் மீதான அதிரடி விலைக்குறைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கூகிள் பிக்சல் - கூகுள் நிறுவனத்தின் முதல் சுய முத்திரை கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இந்த கூகுள் கருவிக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலாக ப்ளிப்கார்ட் இ-காமர்ஸ் வலைத்தளத்தில் தள்ளுபடி வலையில் கிடைக்கிறது. அப்படியாக ப்ளிப் கார்ட் வலைத்தளத்தில் கூகுள் பிக்சல் கருவிக்கு வழங்கப்படும் விலை குறைப்பு என்ன.? உடன் ப்ளிப்கார்ட் தளத்தில் இக்கருவிக்கு மேலும் வழங்கப்படும் சலுகைகள் என்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
விலைகுறைப்பு

விலைகுறைப்பு

ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் கூகுள் பிக்சல் கருவிக்கு ரூ.10,000/- விலைகுறைப்பு ஏற்படுத்தப்பட்டு இப்போது ரூ.47,000/-க்கு அந்த கருவி கிடைக்கிறது உடன் எக்ஸ்சேன்ஜ் சலுகை வாய்ப்பை தேர்வு செய்வதின் மூலம் கூடுதல் தள்ளுபடிகளையும் இக்கருவி மீது பெற முடியும்.

ஜனவரி 31

ஜனவரி 31

இந்த ப்ளிப்கார்ட் வாய்ப்பின் கீழ், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி கூகிள் பிக்சல் கருவி வாங்குவோர்களுக்கு ரூ.10,000/- என்ற ஒரு பிளாட் தள்ளுபடி கிடைக்கும் உடன் இந்த சலுகை ஜனவரி 31 அன்று முடிவடையும் என்றும் ப்ளிப்கார்ட் இ-காமர்ஸ் நிறுவனம் தெளிவாக அறிவித்துளளது.

கூகிள் பிக்சல் எக்ஸ்எல்

கூகிள் பிக்சல் எக்ஸ்எல்

இது கூகுள் பிக்சல் கருவியை ஆக்சிஸ் வங்கி கடன் அட்டை பயன்படுத்தி வாங்குவோர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படும். துரதிருஷ்டவசமாக இந்த ரூ.10,000 தள்ளுபடி கூகிள் பிக்சல் எக்ஸ்எல் கருவி வாங்க கிடைக்கப்படாது.

தள்ளுபடி பெற தகுதி

தள்ளுபடி பெற தகுதி

மேலும் ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் கூகுள் பிக்சல் கருவியின் மீது ரூ.23,000/- வரையிலான (கூடுதல் ரூ.3,000 தள்ளுபடி) எக்ஸ்சேன்ஜ் சலுகையையும் பெறலாம். ஐபோன் 6எஸ் பிளஸ் கருவியை பரிமாற்றம் செய்பவர்களுக்கு தான் முழு எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி பெற தகுதியுள்ளவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

32 ஜிபி மாடல்

32 ஜிபி மாடல்

தற்போது ப்ளிப்கார்ட்டில் கூகுள் பிக்சல் 32 ஜிபி மாடல் ரூ.57,000/-க்கும் அதன் 128ஜிபி மாதிரி ரூ.66,000/-க்கும் கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிக்சல் அம்சங்கள் :

கூகுள் பிக்சல் அம்சங்கள் :

-அலுமினிய யூனிபாடி
- 4ஜிபி ரேம்
- கைரேகை சென்சார்
- க்வால்காம் ஸ்னாப்டிராகன் 821 செயலி
- 2.3 மெகாபிக்சல் பின்புற கேமரா
- 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா
- 5 அங்குல முழு எச்டி அமோஎல்இடி கார்னிங் கொரில்லா கண்ணாடி 4
- ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட்
- யூஎஸ்பி டைப் சி போர்ட்
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
- ஐபி 53 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரெட்மீ நோட் 4 போனால் என்ன.? உங்களுக்கு பல ஆப்ஷன்கள் இருக்கு.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Google Pixel Now Available With Rs. 10,000 Discount on Flipkart. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot