Home
News

கூகுள் போனுக்கே இந்த நிலைமையா? அக்கு வேறாக பிரித்து பார்த்தபோது வெளிவந்த உண்மை!

கூகுள் தனது முதல் போல்டபில் ஸ்மார்ட்போன் மாடலை மே மாதம் அதன் I/O நிகழ்வில் அறிமுகப்படுத்தியது. மற்ற போல்டபில் ஃபோனைப் போலவே, பிக்சல் ஃபோல்டும் மிகவும் நுணுக்கமான நுட்பத்துடனும், அதன் வழக்கமான தரத்தை கொண்டு உறுதியானதாகவும் இருக்கும் என்று நம்பப்பட்டது.

ஆனால், கூகுள் பிக்சல் போல்ட் (Google Pixel Fold) மிகவும் உறுதியான பேசல்களை கொண்டுள்ளது என்று கூகுள் கூறியது. எனவே பிக்சல் போல்ட் எவ்வளவு உறுதியுடன் நீடித்தது என்பதை கண்டறியும் சோதனையை சமீபத்தில் ஒரு யூடியூபர் சோதனை செய்து பார்த்திருக்கிறார்? கூகுள் பிக்சல் போல்ட் சாதனத்தை ஸ்கிராட்ச் சோதனை முதல் தொடங்கி, ஜெர்ரி ரிக் எவ்ரிதிங்கின் ஆயுள் சோதனை வரை பலதரப்பட்ட சோதனைக்கு இந்த சாதனம் உட்படுத்தப்பட்டுள்ளது.

கூகுள் போனுக்கே இந்த நிலைமையா? பிரித்து பார்த்தபோது வெளிவந்த உண்மை!

இந்த சாதனம் 5.8' இன்ச் டிஸ்ப்ளே கொண்ட வெளிப்புற டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளேவை கீறத் தொடங்கி, ஆழமான பள்ளங்கள் வரும்படி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இறுதியில் கீறல் நிலை 7 இல் ஆழமான பள்ளங்கள் காண்பிக்க தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலையிலேயே கீறல்கள் காணப்பட துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த டிஸ்பிளே இன்னும் வேகமாக அடுத்தகட்ட சோதனைக்கு நகர்ந்தப்பட்டுள்ளது.

இதில் கைரேகை கீறல்களைக் கூட பிக்சல் போல்ட் தாங்க முடியாத அளவுக்கு உணர்திறன் உடையதாக இருந்துள்ளது. அலுமினியமாக இருக்கும் பக்கங்களும் எளிதில் கீறல்களை பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. கைரேகை ஸ்கேனராக இரட்டிப்பாக்கும் பிக்சல் ஃபோல்டில் உள்ள பவர் பட்டன் எளிதாக கீறியுள்ளது. ஆனால், அது இன்னும் நன்றாக வேலை செய்கிறது.

தீயை வைத்து நடத்தப்பட்ட பிளேம் டெஸ்ட் சோதனைக்கு செல்லும்போது, ​​​​வெளிப்புறத் திரை 16 வினாடிகள் மட்டுமே சூட்டை தங்கியுள்ளது. டிஸ்பிளே வெண்மையாக மாறும் வரை, நெருப்பில் டிஸ்பிளே காண்பிக்கப்பட்டுள்ளது. எட்டு வினாடிகளில் நெருப்பு கைவிடப்பட்டது மட்டுமின்றி, ஃபோன் ஷட் டவுன் ஆனதால் உள்ளே உள்ள டிஸ்பிளே மோசமான விளைவுகளை கண்டுள்ளது.

பிளேம் டெஸ்டிங் போது ஸ்மார்ட்போன் தானாக அணைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். பிக்சல் போல்ட் சாதனத்தை மீண்டும் இயக்கிய போது, ஸ்மார்ட்போன் அதிக வெப்பம் காரணமாக ஷட் டவுன் ஆனது என்பதை காண்பிக்கும் நோட்டிபிகேஷன் செய்தியை கூகிள் பிக்சல் போல்ட் காண்பித்துள்ளது. இறுதியாக வளைவு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Google Pixel Fold டிஸ்பிளேவை மிகவும் எளிதாக வெளிப்புறமாக மடிக்க முடிந்தது. கிட்டத்தட்ட முழு திரையும் இறந்துவிடும் நிலைக்கு சென்றுவிட்டது. இடது பகுதி மட்டும் சிறிது தெரியும் அளவுக்கு டிஸ்பிளே பாதிப்பை சந்தித்துள்ளது. அதிகமாக வளைக்கும் போது போன் முழுவதுமாக உடைத்துவிடும். ஆனால், பேசல்கள் நிலையாக இருந்ததை வீடியோ காண்பிக்கிறது. JerryRigEverything சுட்டிக்காட்டியுள்ள வீடியோவில் எல்லா பக்கங்களிலிருந்தும் ஸ்மார்ட்போன் பெண்ட் டெஸ்டிங்கின் போது உடைகிறது என்பதை காண்பித்துள்ளது.

எனவே கூகிள் ஒரு விஷயத்தைப் பற்றி சரியாகச் சொன்னது போல் தெரிகிறது - பிக்சல் போல்ட் மிகவும் நீடித்த பேசல்களை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel Fold Durability Test Results Stunned Smartphone Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X