கூகுள் பிக்சல் பட்ஸ்: விரல் நுனியில் மொழி பெயர்ப்பு செய்யும் சாதனம்

|

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய இயர்போன்களை அந்நிறுவனம் கூகுள் பிக்சல் பட்ஸ் என அழைக்கிறது. கூகுளின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் அறிமுக விழாவில் பல்வேறு சாதனங்களுடன் கூகுள் பிக்சல் பட்ஸ் சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டது.

கூகுள் பிக்சல் பட்ஸ்: விரல் நுனியில் மொழி பெயர்ப்பு செய்யும் சாதனம்

ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனத்திற்கு போட்டியாக கூகுளின் வயர்லெஸ் ஹெட்போன்களாக பிக்சல் பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏர்பாட்ஸ் போன்று இல்லாமல் பிக்சல் பட்ஸ் முழுமையாக வயர்லெஸ் வசதி கொண்டிருக்கவில்லை என்றாலும் ஒற்றை வையர் கொண்டுள்ளது.

இயர்பீஸ் சாதனத்தை ஸ்வைப் செய்தே முழுமையாக இயக்கும்படி பிக்சல்பட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் உடனுக்குடன் மொழி பெயர்க்கும் வசதி கொண்டிருப்பதால் மொழி தெரியாதவர்களிடமும் எவ்வித தயக்கமும் இன்றி பேச முடியும். ஹாலிவுட் திரைப்படங்களில் காண்பிக்கப்படுவதை போன்றே நிஜ நேரத்தில் மொழி தெரியாதவர்களுடன் மொழி பெயர்ப்பு வசதி சீராக இயங்குகிறது.

16எம்பி செல்பீ கேமராவுடன் ஓப்போ எஃப்3 லைட் அறிமுகம்.!16எம்பி செல்பீ கேமராவுடன் ஓப்போ எஃப்3 லைட் அறிமுகம்.!

பிக்சல் பட்ஸ் வலது புறத்தில் தட்டினால் இசையை இயக்குவது மற்றும் நிறுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும். இதே போல் முன்புறம் மற்றும் பின்புறமாக ஸ்வைப் செய்வதன் மூலம் இசையின் சத்தத்தை அதிகரிக்கவும், குறைக்கவும் முடியும். இதேபோல் அழுத்தி பிடித்தால் கூகுள் அசிஸ்டண்ட் சேவை ஆன் செய்யப்படும்.

இந்த அம்சத்தை கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளவும், ஏற்கவும் முடியும். பிக்சல் பட்ஸ் உடன் வழங்கப்படும் கேஸ் இயர்போன்களை சார்ஜ் செய்யும் பணியை கவனித்து கொள்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரம் பயன்படுத்த முடியும் என கூறப்படுவதோடு சாதனத்தை நான்கு முறை சார்ஜ் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

கூகுள் பிக்சல்பட்ஸ் விலை 159 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்படும் பிக்சல்பட்ஸ் இந்திய விற்பனை குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஹெட்போன்களுடன் வழங்கப்படும் கேஸ் பேட்டரி பேக் போன்று செயல்படுவதோடு எவ்வித பட்டன்களையும் கொண்டிருக்கவில்லை.

Best Mobiles in India

Read more about:
English summary
Google Pixel Buds are the latest wireless earphones from Google that were showcased along with the Google Pixel 2 and Pixel 2 XL smartphones.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X