Home
News

இதுவரை இல்லாத ஸ்பெக்ஸ்! Apple-க்கே டஃப் கொடுக்கும் Google Pixel 7a! இதுல என்னென்ன இருக்கு தெரியுமா?

கூகுள் நிறுவனம் அதனுடைய புதிய ஸ்மார்ட்போன் மாடலான கூகுள் பிக்சல் 7a (Google Pixel 7a) சாதனத்தை வரும் மார்ச் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐபோன் 14 டிவைஸ்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்படுகிறது.

கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் ஸ்மார்ட்போனினை வரும் மே 11ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. கூகுள் பிக்சல் 7a என்ற பெயருடன் இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்ற பல லீக் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. வரவிருக்கும் Google Pixel 7a ஸ்மார்ட்போனின் சிறிய டீசருடன் கூகுள் இந்தியா ட்விட்டர் கணக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுவரை இல்லாத ஸ்பெக்ஸ்! Apple-க்கே டஃப் கொடுக்கும் Google Pixel 7a!

மே 10 ஆம் தேதி தொடங்க உள்ள Google I/O டெவலப்பர்கள் மாநாட்டின் போது Google Pixel 7a அறிமுகம் செய்யப்படும் என்று ஏற்கனவே ஊகிக்கப்பட்டது. ஆனால், இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கூகுள் பிக்சல் 7a நாம் எதிர்பார்த்தபடி குறிப்பிட்ட நேரத்தில் வரும் என்பது இப்போது அதிகாரப்பூர்வமாக தெளிவாகியுள்ளது. இந்த முறை எதிர்பார்த்ததை விட சிறிது காலம் முன்னதாகவே இதன் அறிமுகம் நடக்கவிருக்கிறது.

Google Pixel 7a ஸ்மார்ட்போன் சாதனம் மே 11ம் தேதி முதல் Flipkart மூலம் பிரத்தியேகமாக வாங்க கிடைக்கும் என்ற தகவலும் டீசரில் பதிவாகியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஐபோனுக்கு போட்டியாக ஆண்ட்ராய்டு தளத்தில் சூப்பர் ஸ்மார்ட்போன் சாதனமாக அறிமுகமாக காத்திருக்கும் இந்த புதிய Google Pixel 7a ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உள்ளது என்று இப்போது பார்க்கலாமா? வாருங்கள்.

Google Pixel 7a சிறப்பம்சத்தை பற்றி பேசுகையில், நமக்கு இந்த சாதனம் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்பதில் சில யுகங்கள் உள்ளது. இன்னும் சரியாக சொல்ல போனால், 90% இந்த அம்சங்களை தான் புதிய Google Pixel 7a கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கூகுள் பிக்சல் 7a ஸ்மார்ட்போன் பற்றிய அனைத்து விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு விவரங்கள் ஏற்கனவே லீக் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை இல்லாத ஸ்பெக்ஸ்! Apple-க்கே டஃப் கொடுக்கும் Google Pixel 7a!

இது என்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்று இப்போது பார்க்கலாம். நமக்கு தெரிந்த தகவலின் படி, கூகுள் பிக்சல் 7a சாதனம் 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் கூடிய 6.1' இன்ச் OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இதன் சிப்செட் பற்றி பேசுகையில், இந்த சாதனம் கூகுளின் இன்-ஹவுஸ் டென்சர் ஜி2 சிப்செட் மூலம் இயக்கப்படும். இது 8 ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் UFS 3.1 உடன் வெளிவரும்.

கூகுள் பிக்சல் 7a இரண்டு ஸ்டோரேஜ் வகைகளை கொண்டிருக்கும் என்று Google சமீபத்தில் டிப்ஸ் கொடுத்திருந்தது. பட்ஜெட் Google Pixel 7a ஃபோனில் OIS உடன் 64MP ப்ரைமரி சென்சார் மற்றும் 12MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் டூயல் ரியர் கேமராக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. முன்பக்கதில், 10.8MP ஸ்னாப்ப்பரை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 72 மணிநேர பேக்அப் உடன் 4,400mAh பேட்டரியை பேக் செய்கிறது.

இது 20W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மற்றும் Qi வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Google Pixel 7a ஸ்மார்ட்போனின் சாப்ட்வேர் பற்றி பேசுகையில், இது சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 அவுட்-ஆஃப்-பாக்ஸில் இயக்கும். கூகுள் பிக்சல் 7a பிளாக், லைட் ப்ளூ, பிரைட் ஆரஞ்சு மற்றும் பாசிபில் கிரெய் நிறத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 7a smartphone to launch in India on May 11th
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X