Home
News

Google Pixel போன்கள் மீது திடீர் தடை.. கேட்ட 2 விஷயங்களை கொடுக்க முடியாதா.. அப்போ.. Japan நீதிமன்றம் அதிரடி!

ஜப்பானில், கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7 சீரீஸ் (Google Pixel 7 Series) ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிக்சல் 7 சீரீஸ் மாடல்களை தொடர்ந்து பிக்சல் 8 மற்றும் 9 ஸ்மார்ட்போன்களின் விற்பனையும் தடை செய்யபப்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன ஆகிற்று? ஏன் பிக்சல் போன்கள் திடீரென தடை செய்யப்படுகின்றன? இதோ விவரங்கள்:

கொரிய மொபைல் போன் நிறுவனமான பான்டெக் (Pantech) உடனான சமீபத்திய காப்புரிமை பிரச்சனையை (Patent dispute) தொடர்ந்து, கூகுள் (Google) நிறுவனம் தனது பிக்சல் 7 சீரிஸ் (Pixel 7 Series) மாடல்களை விற்பனை செய்யும் உரிமையை (Right to Sell) இழந்து உள்ளது.

Google Pixel போன்கள் மீது திடீர் தடை!

ஜப்பானில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றத்தின்படி, எல்டிஇ இணைப்பு (LTE connectivity) தொடர்பான காப்புரிமையை மீறி உள்ளதாக கூகுள் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டு, அது உறுதியும் செய்யப்பட்டு உள்ளது. பான்டெக் ஆனது தனது நிறுவனத்திற்கு சொந்தமான காப்புரிமையில் விவரிக்கப்பட்டுள்ள அதே தொழில்நுட்பத்தை தான் கூகுள் நிறுவனமும் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி, வழக்கும் தொடர்ந்து இருந்தது

குறிப்பிட்ட காப்புரிமை ஆனது பிக்சல் ஸ்மார்ட்போன்களில் உள்ள எல்டிஇ மோடம் (LTE Modem) ஆனது செல் டவர்களுடன் (Cell Tower) எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பது தொடர்பானது. இருப்பினும், காப்புரிமை நியாயமான நிபந்தனைகளின் (Not Licensed Under Reasonable Conditions) கீழ் உரிமம் பெறப்படவில்லை.

இந்த விஷயத்தில் கூகுள் ஒத்துழைக்க மறுத்ததால், பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய தடை விதிப்பதாக டோக்கியோ நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. கூகுள் நிறுவனம் நியாயமான ராயல்டி கட்டணத்தை செலுத்த மறுத்துவிட்டது மற்றும் ஜப்பானில் விற்கப்படும் பிக்சல் 7 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை குறித்த தரவையும் வழங்க மறுத்துவிட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய சந்தை கூகுள் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான சந்தையாகும். ஏனெனில் ஆப்பிள் (Apple) நிறுவனத்திற்கு பிறகு ஜப்பானில் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் விற்பனையாளராக உள்ளது - கூகுள் நிறுவனம் தான். கூகுளுக்கு பிறகே சாம்சங் (Samsung) மற்றும் ஷாவ்மீ (Xiaomi) போன்ற நிறுவனங்கள் வருகிறது.

பிக்சல் 7 வழக்கில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து பான்டெக் நிறுவனம் இப்போது கூகுள் நிறுவனம் மீது மற்றொரு வழக்கை தாக்கல் செய்கிறது. இம்முறை கூகுளின் லேட்டஸ்ட் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை குறிவைக்கிறது. எனவே இவ்விஇரு நிறுவனங்களும் ஒரு சமரசத்தை எட்டாவிட்டால், விரைவில் பிக்சல் 8 மாற்று பிக்சல் 9 சீரீஸ் ஸ்மார்ட்போன்களும் கூட ஜப்பானில் "விற்பனை தடை"யை சந்திக்கலாம்.

Google Pixel போன்கள் மீது திடீர் தடை!

பிக்சல் 10 சீரிஸ் எப்போது அறிமுகமாகும்? கூகுள் நிறுவனம் வருகிற 2025 ஆகஸ்ட் 20 ஆம் தேதியன்று அதன் அடுத்த "மேட் பை கூகுள்" வெளியீட்டு நிகழ்வை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

இந்த சீரீஸின் கீழ் கூகுள் பிக்சல் 10, கூகுள் பிக்சல் 10 ப்ரோ, கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் மற்றும் கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் என மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம். ஆனால் ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் வழியாக கிடைத்த சமீபத்திய லீக்கின்படி, கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி ஆகஸ்ட் 20 அல்ல, ஆகஸ்ட் 28 ஆகும்!

முன்னதாக, கூகுள் மேட் பை வெளியீட்டு நிகழ்வானது 2025 ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியானது. இது ஒரு வருடம் முன்பு பிக்சல் 9 சீரீஸை அறிமுகமான அதே தேதியாகும். இருப்பினும், புதிய அறிக்கைகள் கூகுள் நிறுவனம் அதன் மேட் பை நிகழ்வை, ஒரு வாரம் தள்ளி வைக்கும்படி திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றன. எனவே தான் இது ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடக்கலாம் என்கிற யூகங்கள் கிளம்பியுள்ளன.

Best Mobiles in India

English summary
Google Pixel 7 Series Sale Banned in Japan Due to Patent Dispute Pixel 8 Pixel 9 Might Follow
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X