ஆப்பிள் iPhone 14 போனை Google Pixel 7 ஓடவிடுமா? தரமான சம்பவத்திற்காக ரெடியாகிறதா Google.!

|

Google நிறுவனம் அதற்குச் சொந்தமான புதிய ஸ்மார்ட்போன் மாடலான Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro டிவைஸ்களை அறிமுகம் செய்யவிருக்கிறது. கூகிள் நிறுவனத்தின் I/O 2022 டெவலப்பர் மாநாட்டில் Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro ஸ்மார்ட்போன் மாடல்களை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யவிருக்கிறது என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro அறிமுகம்

Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் அதற்குச் சொந்தமான புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை வரும் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யவிருக்கிறது. ஆப்பிள் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ வரிசை மாடல்களுடன் போட்டியிடும் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் கூகிள் அறிமுகம் செய்யவிருக்கிறது. நீங்கள் ஐபோன் பிரியராக இருந்தாலும் கூட, கூகிளின் வரவிருக்கும் Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro ஸ்மார்ட்போன் மாடல்கள் உங்களைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

கூகிள் பிக்சல் 7 சீரிஸ் பற்றி வெளியான தகவல் என்ன சொல்கிறது?

கூகிள் பிக்சல் 7 சீரிஸ் பற்றி வெளியான தகவல் என்ன சொல்கிறது?

காரணம், ஐபோன் 14 உடன் வரும் அம்சங்களுடன், ஸ்மார்ட்போன் சந்தையில் நேரடி போட்டியாளராக இந்த Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் மட்டுமே போட்டியிடப் போகிறது என்பதே உண்மை. வரவிருக்கும் கூகிள் பிக்சல் 7 சீரிஸ் பற்றிய சில முக்கிய விபரங்களைப் புகழ்பெற்ற டிப்ஸ்டர் ஜான் ப்ரோஸ்ஸர் வெளியிட்டுள்ளார். வரவிருக்கும் புதிய கூகுள் பிக்சல் 7 தொடர் வெளியீடு மற்றும் ப்ரீ ஆர்டர் தேதியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ப்ரீ ஆர்டர் மற்றும் அறிமுக தேதி எப்போது?

ப்ரீ ஆர்டர் மற்றும் அறிமுக தேதி எப்போது?

ஜான் ப்ரோஸ்ஸரின் கூற்றுப்படி, கூகுள் பிக்சல் 7 மற்றும் கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஆகியவை இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி ப்ரீ ஆர்டருக்கு கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார். இரண்டு மாடல்களும் ஒரே நாளில் அறிவிக்கப்படும் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த 2 போன்களும், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

அக்டோபர் 13 ஆம் தேதி உங்கள் காலெண்டரில் குறித்து வையுங்கள்

அக்டோபர் 13 ஆம் தேதி உங்கள் காலெண்டரில் குறித்து வையுங்கள்

இந்தியாவின் கிடைக்கும் தன்மை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro ஆகியவை நிறுவனத்தின் வரவிருக்கும் ஃபிளாக்ஷிப் மாடல்களாகும். மே மாதம் நடந்த I/O 2022 நிகழ்வில் இந்த மாடல்கள் குறித்து முதலில் உறுதிப்படுத்தப்பட்டது. இவை அக்டோபர் 6 ஆம் தேதி அறிவிக்கப்படும் மற்றும் அதே நாளில் ப்ரீ ஆர்டர் செய்யப்படும் என்ற தகவல் சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன்கள் அக்டோபர் 13 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

2வது தலைமுறை டென்சர் சிப்செட்

2வது தலைமுறை டென்சர் சிப்செட்

இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்ட லீக்ஸ்டர் ஜான் ப்ரோஸ்ஸரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள படி, கடந்த ஆண்டு கூகுள் பிக்சல் 6 அறிமுகம் செய்யப்பட்ட தேதிகளுடன் ஒப்பிட்டு அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் பிக்சல் 7 மற்றும் கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஆகியவை 2வது தலைமுறை டென்சர் சிப்செட் மூலம் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஹார்டுவேர் விவரங்கள் அக்டோபரில் நடைபெறும் வெளியீட்டு நிகழ்வின் போது வெளியிடப்படும்.

உலகம் அழியும் போது மனிதர்களின் கடைசி செல்பி இப்படி தான் இருக்குமா? Ai வெளியிட்ட பயங்கரமான படங்கள்!உலகம் அழியும் போது மனிதர்களின் கடைசி செல்பி இப்படி தான் இருக்குமா? Ai வெளியிட்ட பயங்கரமான படங்கள்!

புதிய ஆண்ட்ராய்டு 13 OS உடன் வெளிவருகிறதா Google Pixel 7 சீரிஸ்?

புதிய ஆண்ட்ராய்டு 13 OS உடன் வெளிவருகிறதா Google Pixel 7 சீரிஸ்?

இந்த போன்கள் இரண்டும் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த போன்களில் எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் விருப்பம் கிடையாது என்பது கவனிக்கத்தக்கது. இதனால், கூடுதல் ஸ்டோரேஜை உங்களால் விரிவாக்க முடியாது. Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro ஸ்மார்ட்போன்கள் கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான புதிய ஆண்ட்ராய்டு 13 OS உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

Google Pixel 7 டிஸ்பிளே விபரம்

Google Pixel 7 டிஸ்பிளே விபரம்

போனில் உள்ள டிஸ்பிளே கடந்த ஆண்டிலிருந்த கூகுள் பிக்சல் 6 சீரிஸை விடப் பிரகாசமாக இருப்பதாகவும், கூகுள் பிக்சல் 7 ப்ரோ மாடல்களில் QHD+ 120Hz பேனலைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் வடிவமைப்பு பற்றிப் பேசுகையில், இதன் முன் பகுதி கூகுள் பிக்சல் 6 போலவே உள்ளது. ஆனால், பின்புற கேமரா அமைப்பு ஒரு சிறிய வடிவமைப்பு மாற்றத்துடன் வருகிறது.

ரூ.499 முதல் புது பவர் பேங்க் டிவைஸ் வாங்கலாமா? உங்களுக்கான பெஸ்ட் Power Bank இதோ!ரூ.499 முதல் புது பவர் பேங்க் டிவைஸ் வாங்கலாமா? உங்களுக்கான பெஸ்ட் Power Bank இதோ!

Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro கேமரா விபரங்கள்

Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro கேமரா விபரங்கள்

Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro ஸ்மார்ட்போன்களின் கேமரா விபரங்களைப் பற்றிப் பார்க்கையில், Google Pixel 7 தொடர் கேமரா விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. இதன் பிரைமரி சென்சார் Samsung GN1 சென்சார் என்று கூறப்படுகிறது. இது சோனி IMX381 அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவுடன் இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இரண்டு கூகுள் பிக்சல் 7 சாதனங்களும் முன்பக்கத்தில் 11 மெகா பிக்சல் சாம்சங் 3J1 சென்சார் உடன் கூடிய டூயல் பிக்சல்களுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் விலை குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Google Pixel 7 and Google Pixel 7 Pro Launch Pre-Order Date Tipped Online

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X