ஒருவழியாக காலக்கெடு குறித்த தகவல் வெளியீடு- காத்திருந்த கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய விவரம்!

|

கூகுள் பிக்சல் 6ஏ என்பது ஸ்மார்ட்போன் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். சமீபத்திய அறிக்கைகளின்படி, கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனை மே மாதத்தில் அறிமுகம் செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பிரபல டிப்ஸ்டர் தகவலில் பிக்சல் 6ஏ அறிமுகம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில் பிக்சல் தொடரின் முதல் ஸ்மார்ட்வாட்ச் கூகுள் பிக்சல் 6ஏ உடன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கூகுள் பிக்சல் 6ஏ வெளியீட்டு தேதி தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் வெளியான பிற தகவலின்படி, மே 26 ஆம் தேதியே வெளியீடு நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநாளில் பிக்சல் வாட்ச் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் பிக்சல் 5 ஸ்மார்ட்போன்

கூகுள் பிக்சல் 5 ஸ்மார்ட்போன்

கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் பிக்சல் 5ஏ சாதனத்தை அறிமுகப்படுத்தியது. அதுவும் எதிர்பார்த்ததை விட மிகவும் தாமதமாக வெளியிடப்பட்டது. பிக்சல் சீரிஸ் 4ஏ ஆகஸ்ட் 2020-ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கூகுள் பிக்சல் 5 ஜனவரி 2022-ல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து கூகுள் பிக்சல் 6ஏ மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகின. வெளியான தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரசிகர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிக்சல் 6ஏ குறித்த தகவல்கள்

கூகுள் பிக்சல் 6ஏ குறித்த தகவல்கள்

கூகுள் பிக்சல் 6ஏ குறித்த அதிக தகவல்கள் வெளியாகவில்லை. அதேசமயத்தில் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் குறித்த சில கசிந்த அறிக்கைகள் உள்ளன. இவற்றில் கவனிக்கத்தக்க ஒன்று ஆன்லீக்ஸ் வெளியிட்ட சில அதிகாரப்பூர்வ ரெண்டர்கள் ஆகும். இந்த கசிவுகள் சாதனத்தின் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பது குறித்த சில தகவல்கள் வெளியிடபட்டது. பிக்சல் 6ஏ சாதனமானது புதிய பிக்சல் 6 தொடரை போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

50 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா

50 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா

கசிவுத் தகவலின்படி, ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஒரு பெரிய கேமரா தொகுதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் இரட்டை லென்ஸ் கேமரா இருக்கிறது. கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனானது 50 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா தொகுதி இருக்கும் எனவும் கூகுள் பிக்சல் 6ஏ சாதனத்தில் பிக்சல் 6 போன்றே 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஸ்னாப்பர் மற்றும் 8 மெகாபிக்சல் முன்புற கேமராவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

6.2 எல்இடி டிஸ்ப்ளே வசதி

6.2 எல்இடி டிஸ்ப்ளே வசதி

மூன்று வண்ணத்தையும் கொண்டிருக்கும் எனவும் கூகுள் பிக்சல் 6ஏ கண்ணாடி பின்புற அமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. கூகுள் பிக்சல் 6ஏ சாதனமானது 6.2 எல்இடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் எனவும் பஞ்ச் ஹோல் அமைப்பு செல்பி கேமரா வசதி கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. கூகுள் பிக்சல் 6ஏ சாதனமானது பிக்சல் 6 சாதனத்தை போன்றே கூகுள் டென்சர் ஜிஎஸ்101 சிப்செட் கொண்டிருக்கும் எனவும் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஸ்கின் உடன் வரும் எனவும் கூறப்படுகிறது. இதனுடன் பிக்சல் வாட்ச் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனானது மே 26 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என டுவிட் செய்துள்ளது. கூகுள் பிக்சல் ஸ்மார்ட்வாட்ச் ஆனது ப்ளூ, ஆரஞ்ச் மற்றும் சாம்பல் ஆகிய மூன்று ஸ்லாட்டுகள் மற்றும் மெல்லிய சுற்று டயல் அம்சத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) என்ற தொழில்நுட்பம்

ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) என்ற தொழில்நுட்பம்

கூகிள் நிறுவனம் சமீபத்தில் ஒரு மிக முக்கியமான தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் களமிறங்கியுள்ளது. அதிலும், இந்த தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் புதிய சாதனம் பற்றிய தகவலைக் கூகிள் நிறுவனம் யாருக்கும் தெரியாத விதத்தில் மிகவும் ரகசியமாக மேற்கொண்டு வருகிறது. அப்படி கூகிள் நிறுவனம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக என்ன சாதனத்தை உருவாக்கி வருகிறது. இன்றைய சூழ்நிலையில் ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) என்ற தொழில்நுட்பத்தை முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் ஆராய்ச்சி செய்து வருகிறது. இதில் பல புதிய அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளை உருவாக்க முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் போட்டியிட்டு வருகிறது. இந்த ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) தொழில்நுட்பத்தில் கூகிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகக் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதன் அடிப்படையில், கூகிள் நிறுவனம் மிகவும் ரகசியமான ஒரு தயாரிப்பில் மும்முரமாக இருக்கிறது என்று தகவல்கள் வெளியானது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google Pixel 6A Smartphone Might be Launching On this May 2022: Expected Specs, Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X