சீன ஸ்மார்ட்போன்களின் ஆட்டத்தை கலைக்க முடிவு செய்த Google! என்ன சமாச்சாரம்?

|

என்றாவது நீங்கள் யோசித்து பார்த்தது உண்டா? சரியாக வாயில் கூட நுழையாத பெயர்களை கொண்ட சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை "ஆட்சி" செய்கிறது.

ஆனால் "நீங்கள் வாங்கக்கூடிய பெஸ்ட் ஆண்ட்ராய்டு போன்கள்" என்று கூறப்படும் கூகுள் பிக்சல் போன்களால் 10,000 இந்தியர்களை கூட 'இம்ப்ரெஸ்' செய்ய முடியவில்லையே.. ஏன்? - என்று யோசித்தது உண்டா?

பெரிய காரணம் ஒன்னும் இல்லை; மொக்கையான காரணம் தான்!

பெரிய காரணம் ஒன்னும் இல்லை; மொக்கையான காரணம் தான்!

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள், இந்தியர்களால் பெரிதும் கவனிக்கப்படாததற்கு பெரிய காரணம் ஒன்றும் இல்லை; மொக்கையான காரணம் தான் - அது மிகவும் மோசமான மார்க்கெட்டிங் உத்தியே ஆகும்!

மார்க்கெட்டிங் வித்தைகள் என்று வரும்போது சீன மொபைல் நிறுவனங்களை குறைத்து மதிப்பிட முடியாது.

ஒரு டூபாக்கூர் ஸ்மார்ட்போனை கூட ஆப்பிள் ஐபோன் அளவிற்கு பில்ட்-அப் செய்து, அதை தாறுமாறாக விளம்பரம் செய்து, "1 மில்லியன் யூனிட்கள் விற்கப்பட்டன" என்று பெருமை பாடுவதில் சீன நிறுவனங்கள் - பலே கில்லாடி!

இந்த 5 அறிகுறியில் 1 இருந்தாலும் உங்கள் போனில் பெரிய சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்!இந்த 5 அறிகுறியில் 1 இருந்தாலும் உங்கள் போனில் பெரிய சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்!

தற்போது அதே வித்தையை சீன நிறுவனங்களுக்கு எதிராக பயன்படுத்தும் கூகுள்!

தற்போது அதே வித்தையை சீன நிறுவனங்களுக்கு எதிராக பயன்படுத்தும் கூகுள்!

"நானும் எவ்ளோ நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது!" என்பது போல "நானும் சீன ஸ்மார்ட்போன்களுக்கு வேட்டு வைக்கும் விலையில் ஒரு பிக்சல் போனை களமிறக்குறேன்!" என்று கூகுள் கடுப்பாகி விட்டது போல!

அதற்கு சாட்சி - தற்போது வெளியாகி உள்ள பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரம் தான்!

நத்திங் போன் (1) மற்றும் ஒன்பிளஸ் 10ஆர் மீது நேரடி தாக்குதல்!

நத்திங் போன் (1) மற்றும் ஒன்பிளஸ் 10ஆர் மீது நேரடி தாக்குதல்!

கிடைக்கப்பெற்றுள்ள தகவலின்படி, கூகுள் பிக்சல் 6ஏ ஆனது ஏற்கனவே இந்தியாவில் வாங்க கிடைக்கும் நத்திங் போன் (1) மற்றும் ஒன்பிளஸ் 10ஆர் மாடல்களை "நேரடியாக தாக்குவது" போல் உள்ளது.

நினைவூட்டும் வண்ணம், கடந்த மே 11 ஆம் தேதியன்று நடந்த Google I/O நிகழ்வில் தான் Google Pixel 6a ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

இருப்பினும் கூகுள் பிக்சல் 6ஏ மாடலானது சரியாக எப்போது, எந்த தேதியில் இந்தியாவில் அறிமுகமாகும் என்கிற விவரங்கள் இன்னும் "மறைக்கப்பட்டுள்ளது".

Nothing Phone 1 பிடிக்காமல் பலரும் தேடிச்செல்லும் 5 Nothing Phone 1 பிடிக்காமல் பலரும் தேடிச்செல்லும் 5 "மாற்று" ஸ்மார்ட்போன்கள்!

மூன்று ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வரும் புதிய பிக்சல் போன்!

மூன்று ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வரும் புதிய பிக்சல் போன்!

கூகுள் பிக்சல் 5 மற்றும் பிக்சல் 5ஏ மற்றும் லேட்டஸ்ட் கூகுள் பிக்சல் 6-சீரிஸ் என எதுவுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை (ஆனால் 6 சீரிஸ் அமேசான் வழியாக வாங்க கிடைக்கிறது).

ஆக மூன்று ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வரும் லேட்டஸ்ட் பிக்சல் ஸ்மார்ட்போனாக - கூகுள் பிக்சல் 6ஏ "உருமாறவுள்ளது". (பிக்சல் 6a ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை கூகுள் நிறுவனம் உறுதி செய்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது).

Google Pixel 6a இந்தியாவில் என்ன விலைக்கு வரும்?

Google Pixel 6a இந்தியாவில் என்ன விலைக்கு வரும்?

ட்விட்டர் யூசரான சாஹில் கரோல் வழியாக நமக்கு கிடைத்துள்ள - கூகுள் பிக்சல் 6ஏ பாக்ஸ் விலை - விவரங்களின்படி, இது ரூ 43,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு இந்தியாவில் சுமார் ரூ.37,000 க்கு விற்பனை செய்யப்படும்.

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான அபிஷேக் யாதவ்வும் இந்த தகவலுடன் ஒற்றுப்போகிறார். ஏனெனில் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் அமெரிக்க விலையான 449 டாலர்கள் என்பது தோராயமாக ரூ.35,000 ஆகும்.

Nothing-இன் தில்லாலங்கடி வேலை! Nothing-இன் தில்லாலங்கடி வேலை! "இதெல்லாம்" வேணுமா? அப்போ எக்ஸ்ட்ரா காசு கொடு!

அப்போ நத்திங் போன் (1) & ஒன்பிளஸ் 10ஆர் நிலை?

அப்போ நத்திங் போன் (1) & ஒன்பிளஸ் 10ஆர் நிலை?

கொஞ்சம் பரிதாபமான நிலை தான். ஒருவேளை கூகுள் இம்முறையும் மார்க்கெட்டிங்கில் சொதப்பினால், நத்திங் போன் (1), ஒன்பிளஸ் 10ஆர்-ஐ ஒன்றுமே செய்ய முடியாது; பார்க்க தானே போகிறோம், கூகுள் என்ன செய்ய போகிறது என்பதை!

எப்படி பார்த்தாலும் கூகுள் பிக்சல் 6ஏ ஆனது இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகமாகி விடும். உண்மையிலேயே அது ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியானால் அது Nothing Phone (1) மற்றும் OnePlus 10R-ஐ மட்டுமல்ல சந்தையில் உள்ள பல வகையான மிட்-ரேன்ஜ் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு கடும் சவாலாகவே இருக்கும்.

கூகுள் பிக்சல் 6ஏ என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

கூகுள் பிக்சல் 6ஏ என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 1080 x 2400 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.10-இன்ச் டச்ஸ்கிரீன் (FHD+) டிஸ்ப்ளேவை பேக் செய்யும் பிக்சல் 6ஏ ஆனது ஆக்டாகோர் கூகுள் டென்சர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படும். மேலும் இது 6ஜிபி ரேம் உடன் வரும்.

4410mAh "நீக்க முடியாத" பேட்டரி மூலம் இயக்கப்படும் இந்த கூகுள் போன், 12.2 மெகாபிக்சல் (f/1.7) மெயின் கேமரா + 12 மெகாபிக்சல் (f/2.2) கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும்.

முன்பக்கத்தை பொறுத்தவரை, செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான பொறுப்பை சிங்கிள் 8 மெகாபிக்சல் (f/2.0) கேமரா பார்த்துக்கொள்ளும்.

ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!

கவனிக்க வேண்டிய மற்ற அம்சங்கள் பற்றி?

கவனிக்க வேண்டிய மற்ற அம்சங்கள் பற்றி?

Android 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாக இந்த பிக்சல் போன் 128GB அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டிருக்கும்.

இது Chalk, Charcoal மற்றும் Sage என்கிற மூன்று கலர் ஆப்ஷன்களின் கீழ் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP67 மதிப்பீட்டையும் கொண்டு வரும்.

கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, வைஃபை 802.11 ax, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி5.20, என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போன்றவைகளை வழங்கும்.

Photo Courtesy: Google Store, 9to5Google, Amazon, Nothing, OnePlus

Best Mobiles in India

English summary
Google Pixel 6a India Price Could be Problem for Nothing Phone 1 OnePlus 10R and more

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X