நேரம் வந்துவிட்டது.. ஆரம்பமே அமர்க்களம் செய்யும் Flipkart- ரூ.16,000 தள்ளுபடியுடன் ஸ்மார்ட்போன்!

|

பாதுகாப்புக்கு பெயர் பெற்ற ஸ்மார்ட்போன்களில் பிரதான ஒன்று கூகுள் ஸ்மார்ட்போன்கள். கூகுள் நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போனாக Google Pixel 6a இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனுக்கு Flipkart Big Billion Days விற்பனையில் பெரும் விலைக் குறைப்பு அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.43,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் பெரும் விலைக்குறைப்புடன் கிடைக்கும் என நிறுவனத்தின் ட்வீட் மூலம் தெரியவந்துள்ளது.

கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன்

கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன்

கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் குறித்து பிளிப்கார்ட் ஒரு ட்வீட்டை பகிர்ந்துள்ளது.

அதில் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.43,999 ஆக இருக்கும் நிலையில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் ரூ.34,199 என்ற விலையில் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் கூடுதல் தள்ளுபடியுன் இந்த ஸ்மார்ட்போனை ரூ.27,699 என்ற விலையில் வாங்கலாம் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

அதீத தள்ளுபடியுடன் ஸ்மார்ட்போன்

அதீத தள்ளுபடியுடன் ஸ்மார்ட்போன்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இந்த விற்பனைகள் நேரலைக்கு வர இருக்கிறது. இந்த தினங்களில் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் அதீத தள்ளுபடியுடன் கிடைக்கும் என்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டு விட்டது.

கூடுதல் சலுகை விவரங்கள்

ரூ.43,999க்கு விற்கப்படும் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனை ரூ.34,199 என வாங்கலாம்.

கூடுதலாக ப்ரீபெய்ட் கட்டண விருப்பத்தை தேர்ந்தெடுத்தால் ரூ.3500 தள்ளுபடி கிடைக்கும் எனவும் அதேபோல் ஆக்சிஸ், ஐசிஐசிஐ வங்கி பரிவர்த்தனைகளுக்கு ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனை ரூ.27,699 என வாங்கலாம்.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை நடக்கும் அதே நேரத்தில் அமேசான் கிரேட் இந்தியன் விற்பனையும் நடக்க இருக்கிறது.

இரண்டு முன்னணி ஆன்லைன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தள்ளுபடிகளை வழங்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.

இரண்டு நிறுவனங்களும் ஒரே காலக்கட்டத்தில் தள்ளுபடி தினங்களை அறிவிக்க இருக்கும் காரணத்தால் தள்ளுபடிகள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகமல் இருந்தது.

ரூ.16,300 தள்ளுபடியுடன் பிக்சல் 6ஏ

ரூ.16,300 தள்ளுபடியுடன் பிக்சல் 6ஏ

இந்தநிலையில் பிளிப்கார்ட் முதல் தகவலை வெளியிட்டுள்ளது. அது கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனுக்கானது.

பிளிப்கார்ட்டில் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் ரூ.16,300 தள்ளுபடியுடன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமில்லை ஸ்மார்ட்போன் விலையை இன்னும் குறைக்க எக்ஸ்சேஞ்ச் சலுகை மேற்கொள்ளலாம்.

இந்த தள்ளுபடி நிலையானது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். விற்பனை தினங்களில் இந்த விலை ஏற்ற இறங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

ஸ்மார்ட்போன் Out of Stock ஆவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. எனவே பிக் பில்லியன் டேஸ் விற்பனை குறித்த நினைவூட்டல்களை அமைத்துக் கொள்ளலாம்.

மேலும் பிளிப்கார்ட்டில் உங்களது லாக் இன் ஐடியில் டெலிவரி முகவரி, வங்கி பரிவர்த்தனை விவரங்களை இப்போதே சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

பிரத்யேச டென்சர் சிப்செட்

பிரத்யேச டென்சர் சிப்செட்

கூகுள் பிக்சல் 6A இந்த கோடையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் பிக்சல் போன் இதுவாகும்.

கூகுளின் சமீபத்திய மற்றும் பிரத்யேச டென்சர் சிப்செட் இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

நத்திங் போன் (1) தள்ளுபடி

நத்திங் போன் (1) தள்ளுபடி

அதேபோல் நத்திங் போன் (1) இந்தியாவில் ரூ.28,999 என்ற விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் விலை உயர்வை பெற்றது.

நத்திங் போன் (1) ரூ.33,999 என பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.28,999 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. கூடுதலாக வங்கி சலுகைகள் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ஜர் தனியாக வாங்க வேண்டும்

Pixel 6a மற்றும் Nothing போன் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போனிலும் சார்ஜர் வழங்கப்படாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இரண்டு ஸ்மார்ட்போனுக்குமான சார்ஜரை பயனர்கள் தனியாக தான் வாங்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Google Pixel 6A and Nothing Phone 1 Get Big Discounts in Flipkart Big Billion Day Sale

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X