பாஸ் இது கூகுள்- உச்ச பாதுகாப்பு., அதீத செயல்திறனுடன் களமிறங்கும் கூகுள் பிக்சல் 6 சீரிஸ்!

|

கூகுள் டென்சர் சிப்செட் மூலம் கூகுளின் மிக சக்திவாய்ந்த இயந்திரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்றவைகளை நேரடியாக பிக்சல் 6 தொடர் சாதனங்களில் செயலாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் காரணமாக பிக்சல் 6 பயனர்கள் சிறந்த கேமரா செயல்பாடுகளை அனுபவிக்க முடியும் என கூறப்படுகிறது.

பிக்சல் 6 தொடர் சாதனங்கள்

பிக்சல் 6 தொடர் சாதனங்கள்

வரவிருக்கும் பிக்சல் 6 தொடர் சாதனங்களின் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஆகிய சாதனங்களின் முக்கிய விவரக்குறிப்புகலை கூகுள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இரம்டு ஸ்மார்ட்போன்களும் மூன்று வெவ்வேறு வண்ண வகைகளில் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாதனங்களின் வடிவமைப்பு ஆன்லைனில் வெளியான கசிவுகளுக்கு ஒத்ததாக இருக்கிறது.

கூகுள் வெளியிட்ட மிகப்பெரிய அறிவிப்பு

கூகுள் வெளியிட்ட மிகப்பெரிய அறிவிப்பு

கூகுள் வெளியிட்ட மிகப்பெரிய அறிவிப்புகளில் ஒன்று கூகுள் டென்சர் ஆகும். கூகுள் டென்சர் என்பது பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எஸ்ஓசி ஆகும். அதாவது இந்த சிப்செட் மேம்பட்ட திறன்களுடன் வரும் எனவும் மற்ற ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் சிப்செட்களை விட இது சிறந்ததாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 12 இயக்கமுறை

ஆண்ட்ராய்டு 12 இயக்கமுறை

கூகுள் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஆண்ட்ராய்டு 12 இயக்கமுறையோடு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. கூகுள் பிக்சல் 6 தொடர் சாதனங்களில் இந்த ஆண்டின் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இது சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. கூகுள் பிக்சல் 6 ப்ரோ பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்புடன் வரும் எனவும் ஆப்டிகல் ஜூம் திறன் கொண்ட டெலிஃபோட்டோ லென்ஸ் உடன் வரும் எனவும் கூறப்படுகிறது. பிக்சல் 6 சாதனமானது 6 ப்ரோவின் அதே கேமரா அமைப்பை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

கூகுள் டென்சர் சிப்செட்

கூகுள் டென்சர் சிப்செட்

கூகுள் டென்சர் சிப்செட் ஆனது கூகுளின் மிகவும் சக்திவாய்ந்த இயந்திரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாதிரிகளை நேரடியாக இயக்கும் திறன் கொண்டது எனவும் கூறப்படுகிறது. இந்த சிப்செட் கூகுள் பிக்சல் 6 சாதனங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிக்சல் 6 பயனர்கள் சிறந்த கேமரா செயல்பாடுகள் உள்ளிட்ட பல மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும்.

மூன்று வண்ண விருப்பங்கள்

மூன்று வண்ண விருப்பங்கள்

இதில் வாய்ஸ் கமெண்ட்ஸ், கேப்சனிங், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட அணுகலை வழங்குகிறது. மேலும் கூகுள் பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் கூகுள் "மெட்டீரியல் யூ" பயன்படுத்துகிறது. அதேபோல் கூகுள் பிக்சல் சாதனம் மூன்று வண்ண விருப்பங்களில் வரும் என கூறப்படுகிறது. அதாவது இந்த சாதனம் ஆரஞ்சு, வெளிர் கருப்பு மற்றும் வெளிர் மஞ்சள் ஆகிய வண்ணங்கள் ஆகும். கூகுள் பிக்சல் 6 ப்ரோ சாதனங்கள் பிளாக், வெள்ளை மஞ்சள் வண்ண விருப்பங்களில் வருகிறது.

பஞ்ச்-ஹோல் கட்அவுட் அமைப்பு

பஞ்ச்-ஹோல் கட்அவுட் அமைப்பு

பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ இரண்டிலும் செல்பி சென்சார் குறித்து பார்க்கையில், இதில் திரையின் மேல் மையத்தில் பஞ்ச்-ஹோல் கட்அவுட் அமைப்பு இருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கேமரா அமைப்பு ஒரே மாதிரியாக இருக்கிறது. ஸ்மார்ட்போன் பின்புறத்தில் கூகுள் பிராண்டிங் பெயர் இருக்கும்.

அதிக அடுக்க வன்பொருள் பாதுகாப்பு

அதிக அடுக்க வன்பொருள் பாதுகாப்பு

கூகுள் பிக்சல் 6 சீரிஸின் சிறந்த விஷயம் குறித்து பார்க்கையில், இந்த சாதனங்கள் உலகின் வேறு எந்த ஸ்மார்ட்போனையும் விட அதிக அடுக்க வன்பொருள் பாதுகாப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் கேமரா செயல்திறன் குறித்தோ அல்லது அதன் சிப்செட் அம்சத்தின் அதிக சக்தி தன்மை குறித்தோ எந்த தகவலையும் நிறுவனம் பகிரவில்லை. கூகுள் டென்சர் சிப்செட்களால் இது இயக்கப்படும் என்பது மட்டும் உறுதிப்படுத்தும் தகவலாக இருக்கிறது. செப்டம்பர்-டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என கூறப்படுகிறது.

அதேபோல் கூகுள் பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் கொண்டுவர நிறுவனம் முடிவு செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google Pixel 6 and Google Pixel 6 Pro Launching With Google Tensor SOC

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X