Home
News

கூகுள் பிக்சல் 5 செப்டம்பர் 30 வெளியாக வாய்ப்பு: இதோ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!

கூகிள் பிக்சல் தொடரின் அடுத்த ஸ்மார்ட்போன் கூகிள் பிக்சல் 5 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்படும் என்று புதிய கசிவு தகவல் தெரிவித்துள்ளது. இந்த புதிய கசிவு பற்றிய விவரங்கள் டிப்ஸ்டர் ஜான் ப்ராசஸரிடமிருந்து வெளியானவையாகும்.

கூகிள் பிக்சல் 4ஏ வெளியீட்டு தேதி

கூகிள் பிக்சல் 4ஏ வெளியீட்டு தேதி

இந்த கசிவில் கூகிள் பிக்சல் 4ஏ வெளியீட்டு தேதியும் அடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய கசிவுகளின்படி, கூகிள் பிக்சல் 5 செப்டம்பர் 30 ஆம் தேதி பச்சை மற்றும் கருப்பு நிறத்தில் வெளியிடப்படும்.

கூகுள் பிக்சல் 5

கூகுள் பிக்சல் 5

கூகுகள் பிக்சல் 4A 5G இன் வெள்ளை வண்ண மாறுபாடு அக்டோபரில் கிடைக்கும் என கசிவுத் தகவல்கள் தெரிவிக்கிறது. கூகிள் பிக்சல் 5 இந்த ஆண்டு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இது கூகுள் பிக்சல் 4 ஏ மாடலை விட கூடுதல் அம்சங்களை கூகுள் பிக்சல் 5 கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன்

கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன்

கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிக்சல் 4 இன் டோன்-டவுன் பதிப்பாக மாற்றியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730G சிப்செட் உடன் இயக்கப்படுகிறது. கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போனில் பின்புறம் மற்றும் முன்புறத்தில் சிங்கள் கேமரா அமைப்புடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு முதன்மை சாதனம் இல்லையென்றாலும், பின்புறத்தில் உள்ள சிங்கள் கேமரா ஒரு இடைப்பட்ட ஸ்மார்ட்போனிலிருந்து மிகவும் எதிர்பாராத்தது.

கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்

கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்

கூகிள் ஸ்மார்ட்போனில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் கூகிள் நிறுவனத்தில் கேமரா செயல்திறன் என்பது சிறந்த அமைப்புடன் வருகிறது. சிங்கள் கேமரா அமைப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போனின் செயல் திறன் மற்ற பிளாக்ஷிப் போன்களுக்கு நிகராக உள்ளது என்பதில் சந்தேகமில்லை.

கூகிள் பிக்சல் 4a சிறப்பம்சங்கள்

கூகிள் பிக்சல் 4a சிறப்பம்சங்கள்

5.81' இன்ச் முழு எச்.டி பிளஸ் கொண்ட 1080 X 2340 பிக்சல்கள் உடைய ஓல்இடி டிஸ்பிளே எச்டிஆர் ஆதரவுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G சிப்செட் 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் 128 ஸ்டோரேஜ் அண்ட்ராய்டு 10 இயங்குதளம் 12MP பின்புற கேமரா மற்றும் எல்.ஈ.டி ஃப்ளாஷ் 8MP முன்பாக செல்ஃபி கேமரா 3.5 மிமீ ஆடியோ ஜாக் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் 3140 எம்ஏஎச் பேட்டரி

எதிர்பார்க்கப்படும் விலை

எதிர்பார்க்கப்படும் விலை

கூகிள் பிக்சல் 4a தற்பொழுது $ 349 டாலர் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தோராயமாக ரூ.26,300 என்ற விலையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி கொண்ட ஒரே வேரியண்ட் மாடலாக மட்டுமே வருகிறது.

Best Mobiles in India

English summary
Google Pixel 5 May Launching at September 2020 Here the expected specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X