கூகுள் பிக்சல் 2பி பட்ஜெட் மற்றும் பிக்சல் 2 (லீக் அம்சங்கள்).!

Written By:

இந்த ஆண்டு கூகுள் நிறுவனம் அதன் புதிய மொபைல்போன்களை அறிமுகம் செய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம், ஏனெனில் அதை உறுதி செய்யும் வண்ணம் இரண்டு கூகுள் கருவிகளின் அம்சங்கள் கசிந்துள்ளது. ஆக நாம் விரைவில் இந்த இரண்டு கருவிகளையும் எதிர்நோக்கலாம்.

கூகுள் பிக்சல் 2பி பட்ஜெட் மற்றும் பிக்சல் 2 (லீக் அம்சங்கள்).!

இந்த இரண்டு கருவிகளில் ஒன்று நீர்ப்புகா உள்ள நீர்மூழ்கி தன்மை கொண்ட கருவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மிகவும் சுவாரசியமான விஷயம் என்னெவென்றால் கூகுள் நிறுவனம் இந்த பிக்சல் மேம்படுத்தப்பட்ட பிக்சல் பதிப்புகளை ஒரு மலிவான விலை பதிப்பாக தொடங்க உள்ளது.

கூகுள் நிறுவனம் ஏற்கனவே பல கூகுள் பிக்சல் 2 கருவி முன்மாதிரிகளை சோதனை செய்துவிட்டது, அதில் ஒரு அக்கருவிதான் பிக்சல் 2 கருவி - இந்த கருவி தான் மிகவும் மலிவான விலைக்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு கருவியானது பிக்சல் கருவிகளின் உயர் பதிப்பு மாதிரியாக இருக்கும் அதாவது நீர்புகா தன்மை கொண்ட ஐபி67 அல்லது ஐபி68 தரம் கொண்ட 30 நிமிடங்கள் 1.5 மீட்டர் ஆழம் வரை தண்ணீரில் நீர்ப்புகா நிலையில் உருவாக்கப்படும்.

இந்த ஸ்மார்ட்போன் சார்ந்த தொழில்நுட்ப பண்புகள் பற்றிய விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை இருப்பினும் ஆண்ட்ராய்டு ஒன் மூலம் ஈர்க்கப்பட்ட ஒரு கருவியாக உடன் மிகவும் எளிமையான ஒரு கருவியாக இருக்க போகிறது என்றும் தோன்றுகிறது.

அம்சங்களை தவிர்த்து கூகுள் பிக்சல் 2 கருவி மதிப்பீட்டின் படி தற்போதைய மாதிரிகளுடன் ஒப்பிடும்போது 50 டால்ரகள் அதிக விலை கொண்டிருக்கலாம் என்றும் மறுபக்கம் கூகுள் பிக்சல் 2பி கருவி மிகவும் மலிவானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது உள்ள கருவிகளுடன் ஒப்பிடும்போது எவ்வளவு மலிவாக இருக்கும் என்று தெரியாது.

மேலும் படிக்க : "பந்தா" காட்டும் டிசைனில் மோட்டோ 5, மோட்டோ 5 ப்ளஸ்.!

English summary
Google Pixel 2B Budget And Pixel 2 Flagship Phone Details Leak Out. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot